மின்சார வாகனங்களில் லித்தியம் அயன்பேட்டரிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. உலகம் முழுவதும் 90 விழுக்காட்டுக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் இந்த பேட்டரிகளில் இயங்கும் நிலையில், தீ விபத்து பற்றிய புகார்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. லித்தியம் அயன் பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் தீ விபத்தில் சிக்கினால் அவை முற்றிலும் எரிந்து சேதமாகிவிடும். பெரும் தொகை கொடுத்து வாங்கப்படும் இத்தகைய வாகனங்கள், தீ விபத்தில் எரிந்து சாம்பலானால் ஒருவரின் பொருளாதார நிலையும் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் தீவிபத்தில் சிக்கியிருக்கின்றன. அவற்றில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வாகனங்கள் அனைத்திலும் லித்தியம் அயன் பேட்டரிகளே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தீ விபத்து என்றால் அந்த மின்சார வாகனங்கள் தீ பற்றி எரிவதில்லை. அந்த வாகனங்களில் இருக்கும் லித்தியம் அயன் பேட்டரிகள் வெடித்து விடுகின்றன. இது மிகவும் ஆபத்தானது.
மேலும் படிக்க | ChatGPT: ஆப்பிள் வாட்சில் சாட்ஜிபிடி..! வாட்ஸ்அப் முதல் வாய்ஸ் கால் வரை செய்யலாம்
கலிஃபோர்னியாவில் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக்கு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த மின்சார வாகனம் வெடித்தே காரணம் என கண்டறியப்பட்டிருக்கிறது. இது குறித்து ஆய்வு செய்யும்போது பல காரணங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. பேட்டரிகளின் தவறான பயன்பாடு, காலாவதியான பேட்டரிகள் பயன்பாடு உள்ளிட்ட காரணகள் அடிகோடிட்டு சுட்டிக்காட்டப்படுகிறது.
எலக்ட்ரிக் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் ஸ்மார்ட்போனில் உள்ளதை விட 50 மடங்கு பெரிய பேட்டரிகளைப் பயன்படுத்துகின்றன. இவற்றில் விபத்து ஏற்பட்டால் அது மிக கொடிய விளைவுகளையும் ஆபத்துகளையும் ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் அதிகம். இவை பேட்டரி அதிக வெப்பமடைதல், பஞ்சர் செய்யப்படுதல் அல்லது ஷார்ட் சர்க்யூட் போன்ற மின் கோளாறு ஆகியவற்றால் இத்தகைய விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆன்லைனில் பேட்டரிகளை வாங்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யார் உருவாக்கினார்கள்? எப்போது உருவாக்கினார்கள்? பேட்டரியை உருவாக்கியவர்கள் நீண்ட மற்றும் அரசு அனுமதியை பெற்றவர்களா? என்பதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோல், பேட்டரியை பயன்படுத்துபவர்கள் சரியான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியம்.
பேட்டரியைக் கொண்ட எந்தவொரு சாதனமும் சார்ஜ் செய்யப்பட்டு குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் இருக்க வேண்டும். மேலும் அதிக நேரம் அல்லது நீங்கள் தூங்கும் போது சார்ஜ் செய்யாமல் இருக்க வேண்டும். பேட்டரி சூடானால் நீங்கள் மேற்கொண்டு சார்ஜ் செய்யக்கூடாது. குறிப்பிட்ட பேட்டரிக்கு, அனுமதிக்கப்பட்ட சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் விபத்துகளை தவிர்க்க முடியாது. லித்தியம் அயன் பேட்டரிகளில் இப்படியான சிக்கல் இருப்பதால் இதற்கு மாற்றாக எதிர்காலத்தில் சோடியம் அயன் பேட்டரிகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | லித்தியம் பேட்டரிக்கு போட்டியாக சோடியம் பேட்டரி - பாதி விலையில் மின் வாகனங்கள்..!
மேலும் படிக்க | லித்தியம் சுரங்கம்: ஜம்மு காஷ்மீரை சூழப்போகும் ராணுவ மற்றும் சூழலியல் பேராபத்துகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ