வாக்காளர் ஐடி முதல் வாக்குச் சாவடி வரை.. அனைத்து தகவல்களையும் இனி இங்கே பெறலாம்
Lok Sabha Elections 2024 App: லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் கமிஷன் பல்வேறு ஆப்களை அறிமுகம்படுத்தியுள்ளது. அதன்படி, தற்போது வாக்குச் சாவடி, வாக்காளர் அடையாள விண்ணப்பம் மற்றும் வேட்பாளர் தொடர்பான தகவல்களை நீங்கள் மொபைல் போன் மூலம் பெற புதிய ஆப் ஒன்று அறிமுகம்படுத்தப்பட்டுள்ளது.
Lok Sabha Elections 2024 App: கடந்த சில நாட்களுக்கு முன்னர் மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், தேர்தல் ஆணையர்களான ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சந்து ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் அட்டவணையை வெளியிட்டார்.
தமிழ்நாடு தேர்தல் தேதிகள் விவரம் | Tamil Nadu Election Dates Details:
மக்களவை தேர்தல் தேதிகள் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும்.
நாடு முழுவதும் 26 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த 26 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தலுடன் வாக்குப்பதிவு நடைபெறும். இதில் முதல் கட்டத்தில் ஏப்ரல் 19ஆம் தேதியிலேயே விளவங்கோடு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
மக்களவை தேர்தல் 7 கட்டங்கள் | Lok Sabha Elections 7 phases Dates:
முதல் கட்டம்: ஏப்ரல் 19
இரண்டாவது கட்டம்: ஏப்ரல் 26
மூன்றாவது கட்டம்: மே 7
நான்காவது கட்டம்: மே 13
ஐந்தாவது கட்டம்: மே 20
ஆறாவது கட்டம்: மே 25
ஏழாவது கட்டம்: ஜூன் 1
தேர்தல் முடிவுகள்: ஜூன் 4
இந்நிலையில் தற்போது லோக்சபா தேர்தல் (Lok Sabha) தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி ஒரே செயலின் மூலம் வாக்காளர் அடையாள விண்ணப்பம், வாக்குச் சாவடி மையம் மற்றும் வேட்பாளர் தகவல் போன்றவற்றை பெறலாம். இதற்கு எங்கும் அலையத் தேவையில்லை, வீட்டிலிருந்தபடியே அனைத்து தகவல்களையும் பெற முடியும். எப்படி என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
தேர்தலுக்காக புதிய ஆப்பை அறிமுகம் செய்த தேர்தல் ஆணையம் (Election Commission) :
1. வாக்காளர் ஹெல்ப்லைன்- வாக்காளர் ஹெல்ப்லைன் செயலி தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாக்குப்பதிவு தொடர்பான தகவல்களைப் பெற முடியும். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டாலும், படிவம் 6-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
2. நோ யுவர் கான்டிடெட் (Know Your Candidate)- நோ யுவர் கான்டிடெட் (Know Your Candidate) என்ற மற்றொரு செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்கள் பகுதி வேட்பாளர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். இது மட்டுமின்றி, இந்த செயலி மூலம், வேட்பாளரின் சொத்து, அவர் மீது ஏதேனும் குற்ற வழக்கு உள்ளதா, இல்லையா என்பது பற்றிய தகவல்களையும் பெற முடியும்.
3. C Vigil- இந்த செயலி தேர்தல் ஆணையத்தால் புகார்களை பதிவு செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியும் உள்ளது.
4. Voter Turn Out- Voter Turn Out என்ற செயலி, வாக்கு எண்ணிக்கை தொடர்பான தகவல்களை அளிக்க தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | SBI: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை! கட்டணத்தை உயர்த்திய வங்கி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ