எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை! கட்டணத்தை உயர்த்திய வங்கி!

State Bank of India: பாரத ஸ்டேட் வங்கி டெபிட் கார்டுகளுக்கான வருடாந்திர பராமரிப்பு கட்டணத்தை ஏப்ரல் 1 முதல் ரூ. 75 உயர்த்துகிறது.

 

1 /5

பாரத ஸ்டேட் வங்கி குறிப்பிட்ட சில டெபிட் கார்டுகளுக்கு வருடாந்திர பராமரிப்புக் கட்டணத்தை ரூ. 75 உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஏப்ரல் 1, 2024 முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.  

2 /5

வருடாந்திர பராமரிப்புக் கட்டணங்கள் மட்டும் இன்றி, டெபிட் கார்டுகளுடன் தொடர்புடைய பிற கட்டணங்களையும் எஸ்பிஐ வங்கி உயர்த்த உள்ளது. கார்டின் வகையைப் பொறுத்து 0 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை உயர்த்த உள்ளது.  

3 /5

மேலும், டெபிட் கார்டு மாற்றுவதற்கு ரூ. 300+ ஜிஎஸ்டி), டூப்ளிகேட் கார்டுக்கு ரூ. 50+ ஜிஎஸ்டி) மற்றும் சர்வதேச பரிவர்த்தனைகள் போன்ற சேவைகளுக்கான கட்டணங்களை வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டும்.   

4 /5

இந்த அனைத்து கட்டணங்களும் 18% ஜிஎஸ்டிக்கு உட்பட்டது. இதற்கிடையில், எஸ்பிஐ கோல்டு மற்றும் பல SBI கார்டுகளுடன் வாடகை செலுத்தும் பரிவர்த்தனைகளின் மீதான வெகுமதி புள்ளிகளிலும் மாற்றங்களை கொண்டு வருகிறது.  

5 /5

ஏப்ரல் 1, 2024 முதல், சில கிரெடிட் கார்டுகளுக்கு வாடகைக் கொடுப்பனவுகளில் ரிவார்டு பாயின்ட்கள் கொடுக்கப்படுவது நிறுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.