எரிவாயுவின் விலை  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் நடுத்தர மக்களின் பட்ஜெட் எகிறி கொண்டிருக்கிறது. இதற்கு நம்மால் முடிந்த தீர்வு எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவதே ஆகும். அந்தவகையில் தற்போது எரிபொருளை சிக்கனமாக எப்படி பயன் படுத்துவது என்று ஒரு சில வழிமுறைகளை இங்கே பார்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

* சமையல் செய்தால் பாத்திரத்தை மூடி வைத்து செய்யுங்கள். இதனால் சீக்கிரமாக சமையல் தயார் ஆவதுடன் எரிபொருளும் (Cooking Gas) மிச்சம் ஆகும்.
* வேகவைப்பது, குழம்பு போன்றவற்றுக்கு பிரஷர் குக்கர் பயன்படுத்தலாம். சட்டென வெந்து விடுவதுடன் எரிபொருளும் மிச்சம் ஆகும்.
* ஆட்களுக்கு ஏற்பசரியான அளவு பாத்திரம் கொண்டு சமைக்க வேண்டும். குழிவான அடிப்பகுதி கொண்ட பாத்திரத்துக்கு பதிலாக தட்டையான அடிப்பகுதி கொண்ட பாத்திரத்தில் சமைக்கும் போது வெப்பம் சீராக பரவி சமையல் சீக்கிரமாக முடிந்து எரிபொருள் (LPG Cylinder Hike) பயன்பாடும் குறையும்.
* தண்ணீரோ குழம்போ கொதிக்கும் போது அடுப்பை சிறுதீயில் வைத்துவிடுவது நல்லது. இதனால் அவை பொங்கி வழிந்து அடுப்பு அணைத்து எரிபொருள் வீணாகாது.
*  கேஸ் அடுப்பில் பர்னர்களை அடிக்கடி தூசு இல்லாமல் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனால் எரிபொருளை அதிக அளவு மிச்சப்படுத்த முடியும்.


ALSO READ | LPG Gas Cylinder Price: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடும் உயர்வு


ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில், LPG சிலிண்டர்களின் விலையை அரசாங்கம் மாற்றுகிறது. அந்த வகையில் LPG கேஸ் சிலிண்டரின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் ஆகஸ்ட் மாதத்திற்கான எரிவாயு விலையை வெளியிட்டுள்ளன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) சிலிண்டருக்கு 19 கிலோ வணிக எரிவாயு சிலிண்டரின் (LPG Cylinder Hike) விலையை ரூ .73.5 அதிகரித்துள்ளது. டெல்லியில் 19 கிலோ வணிக எரிவாயு சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ .1500 இல் இருந்து ரூ .1623 ஆக அதிகரித்துள்ளது.


எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள டிப்சை பயன்படுத்தி வந்தால் எரிபொருள் வீணாவதை தடுக்கலாம். சிக்கனமாக இருப்பது நமது வீட்டின் பொருளாதாரத்துக்கு நல்லது.


ALSO READ | LPG மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என நொடிகளில் தெரிந்து கொள்ளலாம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR