Changes From March 1, 2024: இன்னும் சில நாட்களில் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. ஒவ்வொரு மாத துவக்கத்திலும் அரசாங்கத்தின் சில விதிகள் மாறுகின்றன. சில புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. மார்ச் மாத தொடக்கத்திலும் அப்படி சில விதிகள் அமலுக்கு வருகின்றன. இவை உங்கள் தினசரி வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஃபாஸ்ட் டேக், எல்பிஜி கேஸ் சிலிண்டர், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவை இவற்றில் அடங்கும். மார்ச் 1 முதல் மாறவுள்ள மற்றும் புதிதாக அறிமுகமாகவுள்ள சில விதிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஃபாஸ்ட் டேக்


இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highway Authorities of India) ஃபாஸ்ட் டேக் (Fastag) KYC -ஐ புதுப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 29 என நிர்ணயித்துள்ளது. இந்த தேதிக்குள் ஃபாஸ்ட் டேக் -இனுடைய KYC -ஐ செய்து முடிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் Fastag செயலிழக்கப்படலாம், அதாவது டிஆக்டிவேட் செய்யப்படலாம். மேலும் இந்திய தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளால் (NHAI) இது தடுப்பு பட்டியலில் சேர்க்கப்படலாம். ஆகையால் பிப்ரவரி 29 -க்கு முன்னதாக KYC செய்வது மிக அவசியமாகும்.


ஏல்பிஜி சிலிண்டர்


ஏல்பிஜி சிலிண்டர் விலைகள் ஒவ்வொரு மாத துவக்கத்திலும் அரசாங்கத்தால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. இதன் பிறகு புதிய விலைகள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் மார்ச் மாத தொடக்கத்திலும் எல்பிஜி விலைகள் (LPG Cylinder Price) குறித்து அரசாங்கம் அறிவிப்பை வெளியிடும். முன்னதாக பிப்ரவரி மாத தொடக்கத்தில் எல்பிஜி சிலிண்டர் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் அப்படியே தொடரப்பட்டது. வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் இன் விலை சென்னையில் ரூ.1068.50 ஆகவும், டெல்லியில் ரூபாயாகவும் டெல்லியில் ரூ.1053 ஆகவும், மும்பையில் ரூ.1052.50 ஆகவும், பெங்களூருவில் ரூ.1055.50 ஆகவும்,ஹைதராபாத்தில் ரூ.1,105.00 ஆகவும் உள்ளன. 


மேலும் படிக்க |  மிஸ் பண்ணிடாதீங்க.. இந்த திட்டத்தில் முதலீடு செய்து 18 லட்சம் பெறுங்கள், அசத்தும் போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்


வங்கி விடுமுறைகள்


மார்ச் மாதத்தில் பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் சுமார் 12 நாட்களுக்கு மூடியிருக்கும். இதில் சனிக்கிழமைகளும் ஞாயிற்றுக்கிழமைகளும் அடங்கும். இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) மூலம் வெளியிடப்பட்ட விடுமுறை நாட்காட்டியின் அடிப்படையில் நான்காவது சனிக்கிழமைகளான மார்ச் 11 மற்றும் 25ஆம் தேதிகளில் வங்கிகள் இயங்காது. இது தவிர மார்ச் 5, 12, 19 மற்றும் 26ம் தேதிகள் ஞாயிற்றுக்கிழமைகளாக இருப்பதால் இந்த நாட்களிலும் வங்கிகள் இயங்காது (Bank Holidays).


சமூக வலைத்தளங்கள்


அரசாங்கம் சமீபத்தில் தகவல் தொழில்நுட்ப விதிகளை (IT Rules) மாற்றி உள்ளது. எக்ஸ் (X), பேஸ்புக் (Facebook), யூடியூப் (YouTube), இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற சமூக வலைத்தள (Social Media) செயலிகள் இந்த புதிய விதிகளை பின்பற்ற வேண்டும். மார்ச் மாதம் முதல் உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களுடன் சமூக ஊடங்களில் செய்திகள் பரப்பப்பட்டால் அதற்கு அபராதம் விதிக்கப்படும். சமூக ஊடக தளத்தை பாதுகாப்பான தளமாக மாற்றுவதே அரசாங்கத்தின் (Government) இந்த முயற்சியின் நோக்கமாகும். 


மேலும் படிக்க |  மார்ச் 14! ஆதார் கார்டு அப்டேட் செய்யாவிட்டால் அபராதம் அலர்டா இருங்க மக்களே!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ