ஜம்மு காஷ்மீர் பூமியின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த சொர்க்கத்தில் 59 லட்சம் டன் எடையுள்ள விலைமதிப்பற்ற 'புதையல்' கிடைத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் மிகப்பெரிய லித்தியம் படிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பேட்டரி தயாரிப்பு முதல் ஸ்மார்ட்போன், கார் மற்றும் மின்சார வாகனம் தயாரிப்பு வரை என எல்லாவற்றிலும் லித்தியம் அயன் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய லித்தியம் எதிர்காலத்தில் முக்கிய ஆற்றல் மூலமாக இருக்கும் என்பதால், வைரத்தைவிட விலைமதிப்பு மிக்கதாக மாறியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | SBI இன்டர்நெட் பேங்கிங் பயன்படுத்துபவரா நீங்கள்? - இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!


இப்போது கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் பெட்ரோலியப் பொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க முயற்சிக்கின்றன. இதில் லித்தியம் முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஆற்றல் அதாவது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் லித்தியம், அயன் பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. இப்போது உலகம் பசுமை ஆற்றலைப் பின்பற்ற வலியுறுத்துகிறது. இதில் லித்தியம் பெரும் பங்கு வகிக்கிறது. பெட்ரோல் டீசல் மாற்றாக மாறப்போகும் லித்தியம் கொண்ட நாடு எதிர்காலத்தில் உலக பொருளாதாரத்தில் மிக பெரிய ஆதிக்கத்தை செலுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் லித்தியம் தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.


இப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 5.9 மில்லியன் டன் கொண்ட லித்தியம் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர கர்நாடகாவிலும் 1600 டன் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்போது என்ன கேள்வி என்னவென்றால், இந்த லித்தியத்தின் மதிப்பு என்ன? என்பது தான்.  


லித்தியத்தின் மதிப்பு என்ன?


லித்தியத்தின் மதிப்பு நிலையானதாக இப்போது இல்லை. மாறுபடும் ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு நிறுவனத்தின் பங்கு விலையும் தினசரி அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுவதைப் போலவே, லித்தியத்தின் மதிப்பும் மாறுபடும். சந்தையில் ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒரு விலை உண்டு. அந்தவகையில் இன்றைய தேதியில் ஒரு டன் லித்தியத்தின் மதிப்பு 472500 யுவான். அதாவது சுமார் ரூ.57,36,119. அதாவது இந்திய மதிப்பில் ஒரு டன் லித்தியத்துக்கு 57.36 லட்சம் ரூபாய் செலவழிக்க வேண்டும். இந்தியாவில் காணப்படும் லித்தியத்தின் இருப்பு 59 லட்சம் டன்கள். அதாவது இன்று அதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.33,84,31,021 லட்சம். அதாவது ரூ.3,384 பில்லியனாக இருக்கும்.


மேலும் படிக்க | ’லித்தியம் புதையல்’ ஜம்மு காஷ்மீரில் கண்டுபிடிப்பு..! 5.9 மில்லியன் டன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ