Actress Supports Nayanthara For Condemning Dhanush : தனுஷ்-நயன்தாரா விவகாரம் பெரும் புயலை கிளப்பியிருக்கும் நிலையில், பிரபல நடிகை ஒருவர் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்து இணையத்தில் பதிவிட்டிருக்கிறார்.
Actress Supports Nayanthara For Condemning Dhanush : தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக விளங்கி வருபவர் தனுஷ். இவருக்கு எதிராக நயன்தாரா வெளியிட்டிருக்கும் பதிவு சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நானும் ரௌடி தான் படத்தின் BTS வீடியோவையும், பாடல்களையும் நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் இணைக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், அப்படி அந்த வீடியோவை வெளியிட வேண்டும் என்றால், ரூ.10 கோடி கொடுக்க வேண்டும் என தனுஷ் நயன்தாராவிற்கு legal notice அனுப்பியிருக்கிறார். இது குறித்து நயன், 3 பக்கத்திற்கு காட்டமாக பதிவிட்டிருக்கிறார். இது, தற்போது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
2015ஆம் ஆண்டில் வெளியான நானும் ரௌடி தான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். நயன்தாரா ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை, தனுஷ் தயாரித்திருந்தார். இந்த படத்தில் இருந்துதான் விக்கியும் நயனும் காதலிக்க ஆரம்பித்தனர். பின்னர், 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தை ஆவணப்படமாக நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட இருக்கிறது.
Nayanthara Beyond the Fairy Tale என்ற பெயரில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நானும் ரௌடி தான் படத்தில் இடம் பெற்றிருந்த BTS வீடியோ மற்றும் பாடல்களை இணைக்க படக்குழு திட்டமிட்டிருந்தனர். ஆனால், தனுஷ் இதற்கு எதிராக legal notice அனுப்பி, அதற்கு ஈடாக 10 கோடியும் கேட்டிருக்கிறார்.
தனுஷ் இப்படி பணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தை நயன்தாரா 3 பக்க கடிதமாக இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இதில், “ரசிகர்கள் முன்பு நீங்கள் உங்களை காண்பித்து கொள்வதில், உண்மையாக நீங்கள் பாதி கூட இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தனுஷ் இவ்வாறு செய்துள்ளது நயன்தாரா மட்டுமன்றி திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. இதையடுத்து, ஒரு நடிகை நயனுக்கு ஆதரவு தெரிவித்து இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார்.
அந்த நடிகை, வேறு யாருமில்லை பார்வதிதான். நயனின் பதிவை ஸ்டோரியில் போட்டிருக்கும் அவர், சல்யூட் செய்யும் இமோஜியை சேர்த்திருக்கிறார்.
பார்வதியும், தனுஷும் மரியான் படத்தில் ஒன்றாக நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் இப்படி செய்துள்ளதை கேள்விப்பட்ட ரசிகர்கள், இளையராஜாவின் பயோபிக்கில் நடிப்பதால், அவரைப்போலவே இப்போது அவர் மாறிவிட்டதாகவும் சில நெட்டிசன்கள் கருத்துகளை தெரிவித்திருக்கின்றனர்.