இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயர்ந்துகிக்கொண்டே இருக்கின்றன. தற்போது பெட்ரோலின் விலை ரூ. 100ஐக் கடந்து விட்டது. இதனால் மக்கள் மாற்று வாகனங்களின் பக்கம் சாய தொடங்கியிருக்கின்றனர். அதன்படி தற்போது மக்கள் பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக சிஎன்ஜி, எல்பிஜி மற்றும் மின்சார வாகனங்களை வாங்கத் தொடங்கியிருக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தவகையில், கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பு நிதியாண்டில் அதிகளவில் சிஎன்ஜி கார்கள் (Maruti Suzuki) அதிகளவில் விற்பனையாகியிருக்கிறது. மாருதி நிறுவனத்தின் சிஎன்ஜி (CNG Cars) வாகனங்கள் மட்டும் 2021 நிதியாண்டில் 1.57 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. இது 45 சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.


ALSO READ | Tata Cheapest SUV: தீபாவளி ரிலீசாக மலிவு விலையில் பட்டையைக் கிளப்ப வருகிறது Tata HBX


இந்நிலையை நிறுவனங்கள் தங்களின் பிரபல மாடல்களில் சிஎன்ஜி தேர்வுகளை அளிக்க தயாராகி வருகின்றன. அந்தவகையில், மிக விரைவில் இந்திய சந்தையை சிஎன்ஜி தேர்வில் எந்த கார் மாடல்கள் வருகிறது என்று இங்கே பார்போம். 


மாருதி சுசுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி
இந்த கார் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார்களிலும் ஒன்றாகும். அதன்படி இந்த காரில் மாருதி நிறுவனம் சிஎன்ஜி தேர்வை வழங்க இருக்கின்றது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் இந்த தேர்வு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எஞ்ஜின் தற்போது 89 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனுடன் விற்பனையில் இருக்கின்றது. இது 23.20 கிமீ தொடங்கி 23.76கிமீ வரை மைலேஜை வழங்கும். இதைவிட பல மடங்கு அதிக மைலேஜ் திறனை சிஎன்ஜி வசதிக் கொண்ட எஞ்ஜின் வெளியேற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


மாருதி சுசுகி டிசையர்
மாருதி சுசுகி நிறுவனம் மிக விரைவில் டிசையரில் சிஎன்ஜி வசதிக் கொண்டு வரவுள்ளது. இந்த கார் மாடலிலும் நிறுவனம் 1.2 லிட்டர் கே12எம் ட்யூவல்ஜெட் எஞ்ஜினையே பயன்படுத்த இருக்கின்றது.


ALSO READ | Maruti Suzuki அளித்த நல்ல செய்தி: இலவச வாரண்டி சேவையின் காலக்கெடு நீட்டிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR