CGHS Card இருக்கா? மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அதிரடி அப்டேட்
Central Government Health Scheme: CGHS திட்டத்திற்கு யார் தகுதியானவர்? CGHS திட்டத்தின் கீழ் என்ன சேவைகள் உள்ளன? CGHS திட்டத்தின் பலன் எந்த நகரங்களில் கிடைக்கும்?
Central Government Health Scheme: மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS) மத்திய அரசின் தற்போதைய மற்றும் முன்னாள் பணியாளர்கள் அதாவது ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான சுகாதார வசதித் திட்டமாகும். இந்த சேவைகளை யார் பெற முடியும் என்ற கேள்வி பெரும்பாலும் அரசு ஊழியர்களின் மனதில் எழும். CGHS திட்டத்திற்கு யார் தகுதியானவர்? CGHS திட்டத்தின் கீழ் என்ன சேவைகள் உள்ளன? CGHS திட்டத்தின் பலன் எந்த நகரங்களில் கிடைக்கும்? இந்த அனைத்து கேள்விகளுக்கும் இந்த பதிவில் பதிலை காணலாம்.
CGHS திட்டத்தை யார் பயன்படுத்திக் கொள்ளலாம்? (Who can take advantage of CGHS?)
சிஜிஎஹ்எஸ் -இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் மருத்துவ வசதிகளைப் பெறுவதற்கு மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) தகுதியைத் தீர்மானிக்க பல விதிகள் உள்ளன. இதற்கான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் வசிக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
எந்த நகரங்களில் நீங்கள் CGHS சேவையைப் பெறலாம்? (Cities Where CGHS Services are available)
CGHS சேவை 80 நகரங்களில் கிடைக்கிறது. இந்த பட்டியலில் இருக்கும் நகரங்களில் வசிக்கும் CGHS பயனாளிகள் இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறலாம். முழுமையான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1) ஆக்ரா
2) அகர்தலா
3) அகமதாபாத்
4) ஐஸ்வால்
5) அஜ்மீர்
6) அலிகர்
7) அலகாபாத் (பிரயாக்ராஜ்)
8) அம்பாலா
9) அமிர்தசரஸ்
10) பாக்பத்
11) பெங்களூரு
12) பரேலி
13) பெர்ஹாம்பூர்
14) போபால்
15) புவனேஸ்வர்
16) சந்திராபூர்
17) சண்டிகர்
18) சத்ரபதி சம்பாஜி நகர்
19) சென்னை
20) சாப்ரா
21) கோவை
22) கட்டாக்
23) தர்பங்கா
24) தன்பாத்
25) டேராடூன்
26) டெல்லி & NCR: டெல்லி, ஃபரிதாபாத், காசியாபாத், கிரேட்டர் நொய்டா, நொய்டா, குருகிராம், இந்திராபுரம், சாஹிபாபாத்,
27) திப்ருகர்
28) காந்திநகர்
29) காங்டாக்
30) வெண்ட்
31) கோரக்பூர்
32) கவுகாத்தி
33) குண்டூர்
34) குவாலியர்
35) ஹைதராபாத்
36) இம்பால்
37) இந்தூர்
38) ஜபல்பூர்
39) ஜெய்ப்பூர்
40) ஜலந்தர்
41) ஜம்மு
42) ஜோத்பூர்
43) கண்ணூர்
44) கான்பூர்
45) கோஹிமா
46) கொல்கத்தா
47) கொச்சி
48) கோட்டா
49) கோழிக்கோடு
50) லக்னோ
51) மீரட்
52) மொராதாபாத்
53) மும்பை
54) முசாபர்பூர்
55) மைசூர்
56) நாக்பூர்
57) நாசிக்
58) நெல்லூர்
59) பனாஜி
60) பாட்னா
61) பஞ்சகுலா
62) புதுச்சேரி
63) புனே
64) ராய்ப்பூர்
65) ராஞ்சி
66) ராஜமுந்திரி
67) சஹாரன்பூர்
68) ஷில்லாங்
69) சிம்லா
70) சில்சார்
71) சிலிகுரி
72) சோனேபத்
73) ஸ்ரீநகர்
74) திருவனந்தபுரம்
75) திருச்சிராப்பள்ளி (திருச்சி)
76) திருநெல்வேலி
77) வதோதரா
78) வாரணாசி (பனாரஸ்)
79) விஜயவாடா
80) விசாகப்பட்டினம்
மேலும் படிக்க | கணவர் மனைவிக்கு அதிக பணம் கொடுத்தால் கூட நோட்டீஸ் வருமா? இதற்கான விதிகள் என்ன?
CGHS கார்டுதாரர்கள் எந்த AIIMS மருத்துவமனையிலும் இலவச சிகிச்சை பெறலாம்
1) CGHS ஓய்வூதியம் பெறுவோர் (CGHS Pensioners) மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் ஆளுநர்கள், இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள், உயர்நீதிமன்றங்களின் முன்னாள் நீதிபதிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் போன்ற ரொக்கமில்லா சிகிச்சைக்கு உரிமையுள்ள பிற பயனாளிகள், எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சையைப் பெறலாம்.
2) CGHS அட்டையின் (CGHS Card) செல்லுபடியாகும் காலம் மற்றும் வார்டு தகுதி CGHS அட்டையில் கொடுக்கப்பட்டுள்ளது.
3) CGHS பயனாளிகளுக்கு AIIMS ஒரு சிறப்பு டெஸ்கை உருவாக்கும். தகுதியான CGHS பயனாளி தனது CGHS கார்டை CGHS டெஸ்கில் சரிபார்க்கலாம்.
4) தகுதியான CGHS பயனாளிகள் தங்கள் CGHS கார்டை சுய சரிபார்ப்பும் செய்து கொள்ளலாம். சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினருக்கு சிகிச்சை அளிக்கும் பட்சத்தில், CGHS கார்டின் சுய மற்றும் குடும்ப உறுப்பினரின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். CGHS ஆனது NIC உடன் கலந்தாலோசித்து CGHS தரவுத் தளத்தில் இருந்து கார்டின் தகவலைச் சரிபார்க்கும்.
5) மாதத்தின் கடைசி வாரத்தில், CGHS கார்டின் நகலுடன் ஃபிசிக்கல் பில், சம்பந்தப்பட்ட நகரத்தின் CGHS கூடுதல் இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
6) CGHS பயனாளிகளுக்கு CGHS பில்களை செலுத்துவதற்காக AIIMS ஒரு தனி வங்கிக் கணக்கை உருவாக்கும். பில்களுக்கான பணம், CGHS -க்காக AIIMS ஆல் உருவாக்கப்பட்ட வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட வேண்டும்.
7) CGHS ஓய்வூதியம் பெறுவோர் தவிர, பணமில்லா சிகிச்சைக்கு தகுதியான பிற நபர்கள் பணமில்லா சிகிச்சையின் (Cashless Treatmemt) பலனைப் பெறலாம்.
மேலும் படிக்க | UPI பயனர்களுக்கான அலர்ட்! புதிய விதிகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ