நடுத்தர வர்க்கத்தின் சொந்த வீடு கனவு நிறைவேற... மத்திய அரசின் அசத்தல் திட்டம்!
வீடு கட்டுவதற்காக கடனுக்கு ஆண்டு வட்டியில் 3 முதல் 6.5 சதவீதம் வரை அரசு மானியம் வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 20 ஆண்டுகளுக்கு ரூ.50 லட்சம் வரை வீட்டுக் கடன் வாங்குபவர்கள் இந்தத் திட்டத்தின் பலனைப் பெற முடியும்.
வீட்டு வசதித் திட்டம்: சாமானிய குடிமகனுக்கு ஒரு முக்கிய நல்ல செய்தி கிடைக்கப் போகிறது. மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு விரைவில் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடலாம். உண்மையில், சாமானியர்களாகிய நாம் சொந்த வீடு வேண்டும் என்று கனவு காண்கிறோம். ஆனால் இன்றைய பணவீக்கத்தில் சொந்த வீடு கட்டுவது என்பது வெறும் கனவாகவே மாறிவிட்டது. பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தின் வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டில் தான் கழிகிறது. ஆனால் தற்போது அரசிடம் இருந்து அப்படி ஒரு திட்டம் வருவதால், சொந்த வீடு கனவு நிறைவேறும்.
நடுத்தர வர்க்கத்தின் சொந்த வீடு கனவு
நடுத்தர வர்க்கத்தின் சொந்த வீடு கனவு நிறைவேற்றும் வீடு வாங்கத் திட்டமிடுபவர்கள் பண்டிகைக் காலத்தில் சிறப்பான செய்திகளைப் பெறலாம். வீட்டுக் கடன் வட்டிக்கு மானியம் வழங்க அரசு தயாராகி வருகிறது. இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒரு சிறிய வீடு வாங்குவதற்கு மானியம் வழங்க, சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதியை ஒதுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் இன்னும் சில மாதங்களில் நடைமுறைக்கு வரலாம். பிரதமர் நரேந்திர மோடி அரசு 2024 தேர்தலுக்கு முன் இந்த திட்டத்தைத் தொடங்க விரும்புகிறது. நகரங்களில் வீடு வாங்கும் கனவில் இருப்பவர்களுக்கு கடனுக்கான வட்டியில் நிவாரணம் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை மக்களுக்கு வழங்குவதாக அறிவித்தார். தனது சுதந்திர தின உரையில், நகரங்களில் வசிக்கும், சொந்த வீடு இல்லாத நடுத்தரக் குடும்பங்களுக்கு, இனி எளிதாக சொந்த வீடு வாங்கும் திட்டத்தை அறிவித்தார். இந்தத் திட்டம் குறித்து அதிகாரப்பூர்வ நிலையில் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், வீடு கட்டுவதற்காக கடனுக்கு ஆண்டு வட்டியில் 3 முதல் 6.5 சதவீதம் வரை அரசு மானியம் வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 20 ஆண்டுகளுக்கு ரூ.50 லட்சம் வரை வீட்டுக் கடன் வாங்குபவர்கள் இந்தத் திட்டத்தின் பலனைப் பெற முடியும். இதன் மூலம் நடுத்தர மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.
மேலும் படிக்க | GPS vs OPS: அதிகபட்ச ஓய்வூதிய பலன்களை அளிக்கும் திட்டம் எது? முழு ஒப்பீடு இதோ
வீட்டுக் கடன் வட்டியில் 3 முதல் 6.5 சதவீதம் மானியம்
இந்தத் திட்டத்தின் மூலம் நீங்கள் கடனுக்கான வட்டியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். இதனுடன், நீங்கள் கடன் தொகையை மட்டுமே செலுத்த வேண்டும் மற்றும் வட்டித் தொகையை செலுத்த வேண்டியதில்லை அல்லது ஓரளவுக்கு செலுத்தினால் போதும் என கூறப்படுகிறது. வீட்டுக் கடன் வட்டி தொகை அரசாங்கத்தால் மானியமாக வழங்கப்படலாம். ஒரு சாதாரண குடிமகன் 3 முதல் 6.5 சதவீதம் வரை மானியம் பெறலாம். இந்த திட்டத்தில் ரூ.50 லட்சத்திற்கும் குறைவான கடன் பெறலாம் என கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள் அதாவது 2028 வரை நீடிக்கும்.
சாமானியக் குடிமகனின் கனவை நனவாக்க அருமையான வாய்ப்பு
இவ்வாறான நிலையில் சாமானியக் குடிமகனின் கனவை நனவாக்க பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றே கூறலாம். இது குறித்து இதுவரை அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் அடுத்த ஆண்டு தேர்தலை மனதில் வைத்து பார்க்கும் போது விரைவில் இதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கலாம் என்றே கூறலாம்.
மேலும் படிக்க | PPF: பிபிஎஃப்பில் இருந்து சுலபமாக கடன் பெற டிப்ஸ்! வட்டியும் குறைவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ