GPS vs OPS: அதிகபட்ச ஓய்வூதிய பலன்களை அளிக்கும் திட்டம் எது? முழு ஒப்பீடு இதோ

Pension Scheme: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை மறுஆய்வு செய்யவும், ஓபிஎஸ் -ஐ மிண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை ஆராயவும் ஊழியர்கள் நீண்டகாலமாக விடுத்து வந்த கோரிக்கைகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 8, 2023, 10:28 AM IST
  • உத்தரவாத ஓய்வூதியத் திட்டத்தில் அகவிலை நிவாரணம் (டிஆர்) கூடுதலாக கிடைக்கும்.
  • இது ஆண்டுக்கு இருமுறை திருத்தப்படும்.
  • இதனால் ஓய்வூதியத்தின் அளவு அதிகரிக்கப்படும்.
GPS vs OPS: அதிகபட்ச ஓய்வூதிய பலன்களை அளிக்கும் திட்டம் எது? முழு ஒப்பீடு இதோ

Guaranteed Pension System vs Old Pension Scheme: பல மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரி வரும் நேரத்தில், ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் AP உத்தரவாத ஓய்வூதியத் திட்டத்தை (GPS) நிறைவேற்றியுள்ளது. AP உத்தரவாத ஓய்வூதியத் திட்ட மசோதா (AP Guaranteed Pension Scheme Bill) சென்ற புதன்கிழமை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது இப்போது அனைத்து மாநில அரசு ஊழியர்களையும் பழைய ஓய்வூதிய முறைக்கு (OPS) பதிலாக பங்களிப்பு ஓய்வூதிய முறையின் (CPS) கீழ் கொண்டு வரும்.

Add Zee News as a Preferred Source

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை மறுஆய்வு செய்யவும், ஓபிஎஸ் -ஐ மிண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை ஆராயவும் ஊழியர்கள் நீண்டகாலமாக விடுத்து வந்த கோரிக்கைகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதிய முறை மற்றும் உத்தரவாத ஓய்வூதிய முறையின் நன்மை தீமைகளை ஆய்வு செய்து இரண்டில் எது அதிகபட்ச ஓய்வூதிய பலன்களை வழங்குகிறது என்பதைப் புரிந்துகொள்வோம்.

உத்தரவாத ஓய்வூதியத் திட்டம் (Guaranteed Pension Scheme): அம்சங்கள்

- ஊழியர்கள் தாங்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50 சதவீதத்தை உறுதியான நிலையான ஓய்வூதியமாக பெறுவதற்கு உரிமை பெறுவார்கள்.

- இதில் அகவிலை நிவாரணம் (டிஆர்) கூடுதலாக கிடைக்கும். இது ஆண்டுக்கு இருமுறை திருத்தப்படும். இதனால் ஓய்வூதியத்தின் அளவு அதிகரிக்கப்படும். 

- ஓய்வூதியம் பெறுபவர் இறந்த பிறகு உத்தரவாத ஓய்வூதியத் தொகையில் 60 சதவீதம் என்ற விகிதத்தில் வாழ்க்கைத் துணைக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை இந்தத் திட்டம் உறுதி செய்யும். ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 மாத ஓய்வூதியம் கிடைக்கும்.

- இந்தத் திட்டம் புதிய மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டங்களின் கூறுகளை இணைக்கும்.

- பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கட்டாய ஓய்வு பெறுபவர்கள் திட்டத்தின் கீழ் தகுதி பெற மாட்டார்கள்.

மேலும் படிக்க | EPFO ஜாக்பாட் அப்டேட்: அடிச்சுது லாட்டரி.. விரைவில் கணக்கில் வட்டி தொகை, இப்படி செக் செய்யலாம்

பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme): அம்சங்கள்

- ஊழியர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50 சதவீதத்திற்கு இணையான ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு உரிமை பெறுவார்கள்.

- இந்தத் திட்டம் ஓய்வுக்குப் பிந்தைய வாழ்நாள் வருமானத்தை உறுதி செய்கிறது.

- முழு ஓய்வூதியத் தொகையும் ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. மேலும் சேவைக் காலத்தில் சம்பளத்தில் இருந்து பங்களிப்பு எதுவும் இதில் அளிக்கத்தேவையில்லை.

உத்தரவாத ஓய்வூதிய அமைப்பு (GPS) vs பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) (Guaranteed Pension System vs Old Pension Scheme): எது சிறந்தது?

பழைய ஓய்வூதியத் திட்டம் பொதுவாக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டாலும், புதிய ஓய்வூதிய முறை (NPS) 18 முதல் 60 வயது வரை உள்ள அனைத்து குடிமக்களுக்கும் 2009 இல் வழங்கப்பட்டது. ஆந்திரப் பிரதேச அரசாங்கத்தின் உத்தரவாத ஓய்வூதியத் திட்டச் சட்டம் NPS இன் கீழ் ஓய்வூதியத்தை உறுதி செய்யும்.

தற்போது NPS முதலீடு வரிச் சலுகைகளுடன் ஆண்டுக்கு 9 முதல் 12 சதவீத வருமானத்தை வழங்குகிறது. இருப்பினும், இதில் அரசு ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் அவர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியின் அடிப்படையில் பங்களிக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்ட முறையில் அரசு ஊழியர்களின் பங்களிப்பு எதுவும் தேவையில்லை.

மேலும் படிக்க | 7th Pay Commission டபுள் ஜாக்பாட்: ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் தீபாவளி போனஸ் பரிசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News