ஊழல் குற்றங்களின் எண்ணிக்கையில், குஜராத் நாட்டின் மூன்றாவது மாநிலமாக முன்னேறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

NITI ஆயோக் தரவுகளின் அடிப்படையில் குஜராத் 1,677.34 குறியீட்டுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. பிரதமர் மோடியில் சொந்த மாநிலமான குஜராத் ஊழல் குற்றச்சாட்டில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது அதிர்ச்சியூட்டும் விஷயம் என்றபோதிலும், தமிழக மக்களுக்கு இது மேலும் ஒரு அதிர்ச்சியை அளித்துள்ளது. காரணம் இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது தமிழ்நாடு தான், இதனை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் ஒடிசாவும், இதற்கு பின்னார் குஜராத் என வரிசை கட்டி நிற்கிறது.


தமிழகத்தின் ஊழல் குறியீடு ஒரு மில்லியன் குடிமக்களுக்கு 2,492.45 ஆகவும், ஒடிசாவின் குறியீடு 2,489.83 ஆகவும் உள்ளது. குஜராத் விஜிலென்ஸ் கமிஷன் அறிக்கையின்படி, கடந்த 5 ஐந்து ஆண்டுகளில் குஜராத்தில் ஊழல் தொடர்பான 40,000 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


மேற்கண்ட ஐந்து ஆண்டுகளில் ஊழல் தொடர்பான வழக்குகளில் 800 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த அறிக்கையை மாநில உள்துறை அமைச்சர் பிரதீப் சிங் ஜடேஜா அவர்களே முன்வைத்தார். அதே நேரத்தில், ஊழல் தடுப்பு பணியகம் (ஏசிபி) மேலும் கூறியது, 2017 உடன் ஒப்பிடும்போது 2018 ஆம் ஆண்டில் ஊழல் வழக்குகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஊழல் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை 2017-ல் 216-ஆக இருந்து 2018 இல் 729-ஆக உயர்ந்துள்ளது.


மாநிலத்தில் அதிக ஊழல் வழக்குகள் வருவாய்த்துறையில் காணப்பட்டுள்ளன. நகர்ப்புற மேம்பாடு இரண்டாமிடத்திலும், உள்துறை அமைச்சகம் மூன்றாம் இடத்திலும் இருந்தது. இந்த உண்மை குஜராத் முதல்வர் விஜய் ரூபானியை கேள்விக்குள்ளாக்குகிறது, அவர் தனது அரசாங்கத்தில் ஊழல் தடுக்கப்படுவதாக அடிக்கடி கூறியுள்ளார். ஆனால், இந்த புகார்கள் ஊழல் அதிகாரிகளையும் பணியாளர்களையும் தடுக்க அரசு மெத்தனம் காட்டி வருவரை உணர்த்துகிறது.