ATM செல்ல தேவையில்லை; இனி வீட்டில் இருந்தபடியே பணம் பெறலாம்... எப்படி?
ATM செல்லாமல் வீட்டில் இருந்தபடியே வங்கியில் இருந்த பணம் பெற ஒரு எளிய வழிமுறையினை பொதுத்துறை வங்கிகள் அறிமுகம் செய்துள்ளன..
ATM செல்லாமல் வீட்டில் இருந்தபடியே வங்கியில் இருந்த பணம் பெற ஒரு எளிய வழிமுறையினை பொதுத்துறை வங்கிகள் அறிமுகம் செய்துள்ளன..
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 21 நாள் முழுஅடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மக்கள் பணத்திற்காக ATM செல்வதும், பணத்தை எடுத்து செலவழிப்பதும் கடினமான விஷயமாக மாறியுள்ளது. குறிப்பாக ATM இயந்திரம் உங்கள் வீட்டிலிருந்து வெகு தொலைவில் இருந்தால் உங்களுக்கு சிக்கல்கள் மேலும் அதிகரிக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வீட்டில் உட்கார்ந்தபடி பணத்தை பெறக்கூடிய ஒரு வசதி பற்றி நாங்கள் உங்களுக்கு சொல்லப்போகிறோம்.
உண்மையில், நாட்டின் பெரும்பாலான வங்கிகள் சில நிபந்தனைகளுடன் வீட்டிற்கு பணத்தை கொண்டு வந்து அளிக்கின்றன. பொதுத்துறை வங்கி SBI உள்பட, தனியார் துறையில் உள்ள அனைத்து முக்கிய வங்கிகளும் இந்த அம்சத்தை கொண்டுவந்துள்ளன. SBI வாடிக்கையாளர்களுக்கு வங்கி பணத்தை வீட்டிலேயே பெறுவதற்கும், வீட்டு வாசலில் டெபாசிட் செய்வதற்கான வசதியை வழங்குகிறது. தற்போது, இந்த வசதி மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் அல்லது சிறப்பு பதிவு பெற்ற நுகர்வோருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. எனினும் இந்த சேவைக்கு கட்டணமாக 100 ரூபாய் வசூளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், HDFC வங்கியும் வீட்டிலேயே பணத்தை அளிக்கிறது. இதன் வரம்பு ஐந்து முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை இருக்கலாம். இதற்காக சில கட்டணங்களும் செலுத்த வேண்டியிருக்கும்.
ICICI வங்கியின் வாடிக்கையாளர்கள் பண விநியோகத்திற்காக வங்கியின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தில் பதிவுசெய்து அல்லது வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொண்டு இந்த வசதியினை பெறலாம்.
இதேபோல், ஆக்சிஸ் வங்கியும் வீட்டு வாசலில் பண விநியோகம் செய்யும் வசதியை வழங்குகிறது. மேலும் தகவலுக்கு, வங்கியின் இணையதளத்தில் https://www.axisbank.com/bank-smart/doorstep-banking/doorstep-banking -க்குச் சென்று பயனர்கள் முழுவிவரங்களையும் அறியலாம்.