புதுடெல்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 2020 ஆம் ஆண்டின் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். நாட்டின் 100 பணக்கார தனிநபர்கள் மற்றும் குடும்பங்களில், முகேஷ் அம்பானி 88 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்திய மதிப்பில் அவரது சொத்து மதிப்பு 6,58,400 கோடி ரூபாய் ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

25 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடைய அதானி குழுமத்தின் குழுமத்தின் கெளதம் அதானி முகேஷ் அம்பானிக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளார். ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 13 ஆண்டுகளாக முதலிடம் வகித்து வருகிறார். 



ஃபோர்ப்ஸ் இந்தியா அறிக்கையின்படி, முகேஷ் அம்பானியின் சொத்துக்களின் நிகர மதிப்பில் 37.5 பில்லியன் டாலர் சேர்ந்துளது. "உலகப் பொருளாதாரமே இந்த ஆண்டு பின்னடைவை சந்தித்தது. இருந்தபோதிலும், இந்தியாவின் பணக்காரர்களின் சொத்துக்களின் மதிப்பு ஏற்கனவே இருந்ததைப் போலவே தொடர்கிறது" என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை சுட்டிகாட்டுகிறது.


"கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் சைரஸ் பூனவல்லா (Cyrus Poonawalla) பட்டியலில் 6வது இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு காரணம் கொடிய கொரோனா வைரஸிலிருந்து எப்படியாவது உலகம் தப்பித்துவிட வேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக இருக்கிறது. எனவே அவருடைய நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகமாகியுள்ளது. பொதுவாக, 2019 ல் இருந்ததை விட இந்த ஆண்டு செல்வந்தர்களின் செல்வத்தில் அதிகரிப்பு காணப்படுகிறது”என்று ஃபோர்ப்ஸ் இந்தியா தெரிவிக்கிறது.


 படித்துப் பாருங்கள் | கொரோனா காலத்தில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகையை கொடுக்கும் நாடு எது தெரியுமா?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR