முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! முதலீடுகளுக்கு இரட்டிப்பு போனஸ்
பங்குச்சந்தை சரிவை சந்தித்து வரும் சூழலில் டுகான் இன்ஃப்ராடெக்னாலஜிஸ் நிறுவனம் பங்குதாரர்களுக்கு போனஸ் வழங்கப்போவதாக அறிவித்துள்ளது
ரஷ்யா - உக்ரைன் போரின் போது பங்குச் சந்தை சரிந்துள்ளது. ஆனால் இந்த நேரத்தில் முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆறு மாதங்களில் பணத்தை இரட்டிப்பாக்கி, ஒரே வருடத்தில் மல்டிபேக்கராக மாறியுள்ள டுகான் இன்ஃப்ராடெக்னாலஜிஸ், பங்குதாரர்களுக்கு 'போனஸ் ஷேர்' வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் அறிவிப்பின்படி, நிறுவனம் 1:10 என்ற விகிதத்தில் போனஸ் வழங்க உள்ளது.
மேலும் படிக்க | LPG விலை முதல் வங்கி சேவை கட்டணம் வரை; இன்று முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்!
நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்த முடிவை அந்த நிறுவனம் எடுத்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவனத்தின் பங்கு 260 சதவீதத்துக்கும் மேல் லாபம் ஈட்டியுள்ளது. அது மட்டுமின்றி, இந்த மல்டிபேக்கர் பங்கு கடந்த 6 மாதங்களில் மட்டும் 104% பம்பர் ரிட்டர்ன் கொடுத்துள்ளது.
டியூகான் இன்ஃப்ராடெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் இது மட்டுமல்லாது மற்றும் பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன. அதன்படி, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பங்கு மூலதனமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மெமோராண்டம் ஆஃப் அசோசியேஷனின் மூலதனப் பிரிவில் மாற்றம் செய்வதற்கும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுபற்றி எக்சேஞ்ச் ஃபைலிங்கில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இன்று முதல் பிரகாசிக்கும்
டியூகான் நிறுவனம், பங்குகளை போனஸாக வழங்க இருக்கிறது. தற்போதுள்ள பங்குகளைப் பிரித்து, அதன் விலையை குறைத்து அதனடிப்படையில் போனஸ் பங்குகளை கொடுக்க இருக்கிறது. இதனால், நிறுவனத்தின் பங்குகள் விலை குறைவதுடன், முதலீட்டாளர்களுக்கு முன்பிருந்ததைவிட அதிக பங்குகள் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இப்போதைய சூழலில் ஒரு பங்கு வைத்திருக்கும் முதலீட்டாளர், பங்குகள் பிரிப்புக்குப் பிறகு 10 பங்குகள் அவருடைய கணக்கில் இருக்கும். நிறுவனத்தின் இந்த செய்தி முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR