Mutual Fund: ரூ.10 லட்சம் முதலீடு... ரூ.7.26 கோடியாக பெருகியது எப்படி
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அபரிமிதமான லாபத்தைத் தரும். நீண்ட கால முதலீட்டில், சிறந்த வருமானத்தை கொடுக்கும் நிலையில், பரஸ்பர நிதியத்தில் திட்டமிட்டு முதலீடு செய்தால், ஆயிரங்களையும் கோடிகள் ஆக்கலாம்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அபரிமிதமான லாபத்தைத் தரும். நீண்ட கால முதலீட்டில், முதலீட்டாளர்களின் பணம் பனமடங்காகிறது. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு சிறந்த வருமானத்தை கொடுக்கும் பரஸ்பர நிதியத்தில் திட்டமிட்டு முதலீடு செய்தால், ஆயிரங்களையும் கோடிகள் ஆக்கலாம். தற்போது பங்குச்சந்தையில் ஏற்ற, இறக்கம் காணப்பட்டாலும், இது இருந்தபோதிலும், SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யப்படும் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
பரஸ்பர நிதியங்களில் செய்யப்படும் நீண்ட கால முதலீட்டின் மூலம் அதில் கிடைக்கும் வருமானம் தான், அதிக அளவிலான சாதனை முதலீடுகளுக்கு காரணம். அக்டோபர் மாதத்தில் எஸ்ஐபி முதலீடு ரூ.25,323 கோடி என்ற அளவில் இருந்ததாக தரவுகள் கூறுகின்றன. சந்தையில் தொடர்ந்து வரும் சரிவு குறித்து முதலீட்டாளர்கள் பதற்றம் அடையவில்லை என்பதையே இது காட்டுகிறது.
மியுசுவல் பண்ட் என்னும் பரஸ்பர நிதியத்தில் (Mutual Fund), சிறந்த முறையில் திட்டமிட்டு சேமிக்க தொடங்கினால் கோடீஸ்வரன் ஆவது எளிது தான். நீண்ட காலம் முதலீட்டில், வருமானத்தை அள்ளித் தரும் திட்டம் பரஸ்பர நிதியம். அதற்கு உதாரணமாக, ஐசிஐசிஐ புருடென்ஷியல் மல்டி அசெட் ஃபண்ட் என்னும் பரஸ்பர நிதியத்தில், 22 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 லட்சம் முதலீடு, இன்று ரூ.7.26 கோடியாக உயர்ந்துள்ளதைக் கூறலாம். சந்தை மதிப்பு ரூ.59,495 கோடி என்ற அளவில் உள்ள ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் மல்டி அசெட் ஃபண்டின் மீது முதலீட்டாளர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதையே இது குறிக்கிறது.
அக்டோபர் 31, 2002 அன்று, ஐசிஐசிஐ புருடென்ஷியல் மல்டி அசெட் ஃபண்டில். ரூ.10, லட்சம் முதலீடு செய்யப்பட்டதாக தரவு காட்டுகிறது. ரூ.10 லட்சம் முதலீடு செய்த நிலையில், ஆண்டு செப்டம்பர் 30 வரை ஆண்டுதோறும் 21.58 சதவீதம் என்ற அளவிலான கூட்டு வட்டி கணக்கில் வருமானத்தை அளித்துள்ளது. பெஞ்ச்மார்க் நிஃப்டி 200 டிஆர்ஐ-யில் இதே முதலீட்டின் வருமானம் 17.39 சதவீதம் மட்டுமே.
ஐசிஐசிஐ புருடென்ஷியல் மல்டி அசெட் ஃபண்டில் SIP முதலீடு செய்தவர்களும் சிறந்த வருமானத்தைப் பெற்றனர். எஸ்ஐபி மூலம் முதலீட்டைப் பொறுத்தவரை, இந்த ஃபண்டில் ரூ.10,000 மாத முதலீடு 22 ஆண்டுகளில் ரூ.2.9 கோடியாக வளர்ந்துள்ளது. இதில் செய்யப்பட்ட மொத்த முதலீடு ரூ.26.4 லட்சம் மட்டுமே. இதில் கிடைத்த ஆண்டு சராசரி வருமானத்தை கணக்கிட்டால், 18.37 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது.
SIP என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டமாகும். இதன் மூலம் மாதா மாதம் குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படுகிறது. SIP வருமானம் சந்தை அடிப்படையிலானது என்பதால், வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. இருப்பினும், நீண்ட கால SIP முதலீட்டின் சராசரி வருமானம் சுமார் 12 சதவிகிதம் இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஆனால் இந்த வருமானம் சந்தையைப் பொறுத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.
மேலும் படிக்க | Mutual Fund: மாதம் ரூ.5000 போதும்... கோடீஸ்வர கனவை நிறைவேற்றும் SIP முதலீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ