SIP: கோடீஸ்வரராக்கி... ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் தரும் பரஸ்பர நிதிய முதலீடு
SIP Mutual Fund Investment Tips: உங்களின் 45 வயதிற்குள் கோடீஸ்வரர்கள் பட்டியலில் சேர விரும்பினால், 15X15X15 ஃபார்முலாவைப் பயன்படுத்தி உங்கள் கோடீஸ்வர கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
SIP Mutual Fund Investment Tips:அனைவருமே தனது வருவாயில் இருந்து ஒரு பகுதியை சேமிப்பது அவசியம். திட்டமிட்டு முதலீடு செய்தால், எதிர்காலத்தில் பெரும் கார்பஸை உருவாக்கலாம். இளம் வயதிலேயே கோடீஸ்வரர் ஆகும் கனவு உங்களுக்கு இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களை கோடீஸ்வரராக்கும் ஒரு முதலீட்டு ஃபார்முலாவைப் பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.
முறையான முதலீட்டு திட்டம் (SIP)
உங்களின் 45 வயதிற்குள் கோடீஸ்வரர்கள் பட்டியலில் சேர விரும்பினால், 15X15X15 ஃபார்முலாவைப் பயன்படுத்தி உங்கள் கோடீஸ்வர கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதற்கு முறையான முதலீட்டு திட்டம் (SIP) உதவும். எஸ்ஐபி என்பது பரஸ்பர நிதியங்களில் செய்யப்படும் பிரபலமான முதலீட்டு விருப்பமாகும். இதில் மாதாந்திர அடிப்படையில் ஒரு நிலையான தொகை முதலீடு செய்யபடுகிறது. SIP முதலீட்டின் மூலம் கூட்டு வட்டி போன்ற வருமானம் கிடைப்பதால், பணம் பன்மடங்காக அதிகரிக்கிறது.
15 வருடங்களில் கோடீஸ்வரராகலாம்
கோடீஸ்வரராகும் கனவை நிறைவேற்றுவது மிகவும் கடினம் அல்ல. உங்களுக்கு தேவையானது சில திட்டமிடல் மட்டுமே. சம்பாதிக்க ஆரம்பித்த உடனேயே முதலீட்டை தொடங்குவது நல்லது. இல்லை என்றால் கூட 40 வயதில் தொடங்கினால் கூட 55 வயதில் கோடீஸ்வரன் ஆகி விடலாம். 15x15x15 ஃபார்முலா உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.பரஸ்பர நிதி முதலீட்டிற்கான 15x15x15 ஃபார்முலா மூலம் வெறும் 15 ஆண்டுகளில் ரூ.1 கோடியை சேர்த்து, ஒய்வு பெறும் போது ஒவ்வொரு மாதமும் ரூ.லட்சம் வருமானம் பெறலாம்.
15x15x15 சூத்திரம்
முதலீட்டிற்கான 15x15x15 சூத்திரம் என்பது பரஸ்பர நிதிகளில் SIP முதலீட்டுடன் தொடர்புடையது. அதாவது 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.15,000 முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டில் 15 சதவீத ஆண்டு வருமானம் கிடைக்கிறது என வைத்துக் கொண்டால் கூட ஒரு கோடிக்கும் அதிகமாக பணம் சேர்ந்து விடும் பரஸ்பர நிதிய முதலீடுகளில், சராசரியாக 12 - 15% சதவிகித வருமானம் கிடைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், பல சமயங்களில், 20% முதல் 30% வரை கூட வருமானத்தை வழங்கியுள்ளன என சமீபத்திய தரவுகள் கூறுகின்றன.
சிஸ்டமேடிக் வித்ட்ராவல் பிளானில் (SWP) முதலீடு
சராசரியாக, 15 சதவீத வருடாந்திர வருமானத்தில், முதலீட்டாளர் 15 ஆண்டுகளில் சுமார் 1 கோடி நிதியை சேர்த்து விடுவார். இந்த காலகட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.27 லட்சம் மட்டுமே என்பது சிறப்பு. ஓய்வு பெற்ற பின், உங்கள் SIP முதலீட்டை நிறுத்தி விட்டு, ரூ.1 கோடியை சிஸ்டமேடிக் வித்ட்ராவல் பிளானில் (SWP) முதலீடு செய்வதன் மூலம், ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் வருமானம் பெறலாம்.
SIP என்றால் என்ன?
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான எளிதான வழி எஸ்ஐபி. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். SIP என்பது ஒரு வங்கி RD போன்றது, ஆனால் இங்கே நவங்கியை விட சிறந்த வருமானத்தைப் பெறுவீர்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை கழிக்கப்பட்டு நீங்கள் தேர்ந்தெடுத்த பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்யப்படும்.
முக்கிய குறிப்பு: பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. SIP என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டமாக இருப்பதால், அதன் வருமானமும் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. எந்த விதமான முதலீடும் செய்வதற்கு முன், கண்டிப்பாக உங்கள் சந்தை நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ