SIP Mutual Fund: சாமானியர்களுக்கான எளிய முதலீட்டு முறையாக விளங்கும் முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) என்பது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில், முக்கியமாக பின்பற்றப்படும் முதலீட்டு முறை. சந்தை வீழ்ச்சி அல்லது ஏற்றம் இரண்டு நிலையிலும், முதலீட்டாளர்களுக்கு அபரிமிதமான வருமானத்தை வழங்குகிறது என்பதால், பலரின் முதலீட்டு தேர்வாக அமைந்துள்ளது. ஆயிரங்களை கோடிகளாக்க உதவும் பரஸ்பர நிதிய முதலீடுகள், உங்கள் பணக்கார கனவை நனவாக்க மிகிகவும் சிறந்தவை. SIP மூலம் உங்கள் நிதி இலக்குகளை அடைய மாதாந்திரம் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை, குறிப்பிட்ட நிலையான தொகையை தவறாமல் முதலீடு செய்வது அவசியம். இதில் தொடர் முதலீடு மிக ஒரு முக்கிய காரணி.
ஆயிரங்களை கோடிகளாக்கும் SIP முதலீடுகள்
அந்த வகையில், ஒவ்வொரு மாதமும் ரூ. 1000 டெபாசிட் செய்து, ஓய்வுக்கு முன் ரூ.1 கோடியைப் பெறும் திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் அதிக வருமானத்தைக் கேட்டால் நீங்களும் இன்ப அதிர்ச்சியடைவீர்கள். பரஸ்பர நிதிகளில் SIP முதலீடுகள் சாத்தியமில்லாததை சாத்தியமாகியுள்ளது. ஐசிஐசிஐ புருடென்ஷியல் மல்டிகேப் ஃபண்ட், ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்டில் செய்யப்பட்ட வெறும் ரூ.1000 மாதாந்திர முதலீடு, ரூ.1 கோடியாக பெருகியுள்ளது. இந்த ஃபண்டில் மொத்தமாக முதலீடு செய்தவர்களின் பணமும் தற்போது 78 மடங்கு அதிகரித்துள்ளது.
ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் மல்டிகேப் ஃபண்ட்
நிதி மதிப்பீடு 4 நட்சத்திரம் கொண்ட ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் மல்டிகேப் ஃபண்ட் 1 அக்டோபர் 1994 அன்று தொடங்கப்பட்டது. அதாவது சமீபத்தில் இந்த திட்டம் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த 30 ஆண்டுகளில், நிதியில் முதலீடு செய்ததன் மூலம் கிடைத்த மொத்த வருவாய் ஆண்டுக்கு 15.53 சதவீதமாக உள்ளது. தொடக்கத்தில் இருந்து, SIP முதலீடு செய்தவர்கள் ஆண்டுக்கு சுமார் 18 சதவிகிதம் என்ற அளவில் வருமானத்தைப் பெறுகிறார்கள். அக்டோபர் 2024 இன் இறுதியில் நிதியின் மொத்த AUM ரூ.14,193.16 கோடி. அதேசமயம் செலவு விகிதம் 1.74 சதவீதம். இந்த ஃபண்ட் 4 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
ஆபத்து குறைவாக உள்ள முதலீட்டு திட்டம்
ஈக்விட்டி பிரிவில் இருப்பதால் மல்டிகேப் ஃபண்டுகளில் ஆபத்து இருந்தாலும், பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோ காரணமாக, இது மற்ற வகைகளை விட இதில் ரிஸ்க் குறைவாக உள்ளது. மல்டிகேப் ஃபண்டுகள் முதலீட்டாளர்களின் பணத்தை லார்ஜ்கேப், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்கின்றன. எனவே ஆபத்திலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது. உங்கள் முதலீட்டு இலக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாக வைத்துக் கொண்டு, நீங்கள் சந்தையில் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருந்தால், இந்த நிதி உங்களுக்கு சிறந்த தேர்வாகும்.
78 மடங்கு வருமானத்தை அளித்துள்ள நிதியம்
ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் மல்டிகேப் ஃபண்ட் 1 அக்டோபர் 1994 அன்று தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்டதிலிருந்து, நிதியின் மொத்த முதலீட்டின் மீதான வருமானம் ஆண்டுக்கு 15.53 சதவீதமாக உள்ளது. அதாவது இந்த ஃபண்டில் ஒருவர் ரூ.10,000 முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு இப்போது ரூ.7,80,090 ஆகவும், ரூ.1 லட்சத்தின் முதலீட்டின் மதிப்பு ரூ.78,00,900 ஆகவும் இருக்கும். இந்த வகையில், இந்த நிதியம் 78 மடங்கு வருமானத்தை அளித்துள்ளது. 1 வருட மொத்த முதலீட்டில் 33 சதவீத வருடாந்திர வருவாயையும், 3 ஆண்டுகளில் 21.37 சதவீத வருடாந்திர வருமானத்தையும், 5 ஆண்டுகளில் 21.27 சதவீத வருடாந்திர வருவாயையும் இந்த நிதியம் வழங்கியுள்ளது.
சுமார் 18 சதவீத வருடாந்திர வருமானம்
ஐசிஐசிஐ புருடென்ஷியல் மல்டிகேப் ஃபண்டில் 30 வருட எஸ்ஐபியின் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், முதலீட்டாளர்கள் சுமார் 18 சதவீத வருடாந்திர வருமானத்தைப் பெற்றுள்ளனர். இந்த ஃபண்டில் ஆரம்பத்திலிருந்தே ஒருவர் ரூ.1000 எஸ்ஐபி செய்து வந்தார் என்றால், இப்போது அவருடைய முதலீட்டின் மதிப்பு ரூ.1 கோடியாக இருக்கும். மாதாந்திர எஸ்ஐபி ரூ.3000 மதிப்பு ரூ.3 கோடிக்கும் அதிகமாக உயர்ந்திருக்கும்.
முக்கிய குறிப்பு: பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. SIP என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டமாக இருப்பதால், அதன் வருமானமும் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. எந்த விதமான முதலீடும் செய்வதற்கு முன், கண்டிப்பாக உங்கள் சந்தை நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ