National Pension Scheme: வயதானவர்கள் ஓய்வூதிய திட்டங்களில் முதலீடு செய்வது ஒரு நல்ல வழியாகக் கருதப்படுகிறது. வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் நீங்கள் தொடர்ந்து வருமானத்தைப் பெறுவீர்கள். ஓய்வூதியம் பணப் பற்றாக்குறையை அனுமதிக்காது எனலாம். அரசால் பல ஓய்வூதியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஒன்று தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS). எந்தவொரு குடிமகனும் இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓய்வுக்குப் பிறகு, இதன் கீழ் மொத்தத் தொகையைப் பெறுவதோடு, ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியப் பலனும் கிடைக்கும். தேசிய ஓய்வூதிய அமைப்பின் இணையதளத்தின் மூலம், நீங்கள் அதில் முதலீடு செய்யலாம் மற்றும் இங்கே வருமானம் மற்றும் நன்மைகளை எளிதாக புரிந்து கொள்ள முடியும். தேசிய ஓய்வூதிய திட்டம் கால்குலேட்டரும் இங்கே கிடைக்கிறது. நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், தேவைக்கேற்ப முதலீட்டின் வருவாயை பெற்றுக்கொள்ளலாம்.


தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், மிகச் சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் அதிக நன்மைகளைப் பெறலாம். ஒரு நாளைக்கு 100 ரூபாய் சேமிப்பதன் மூலம் மாத ஓய்வூதியமாக 57 ஆயிரம் ரூபாய் பெறுவது எப்படி என்பது இங்கே காணலாம், அதன் கணக்கீட்டையும் புரிந்து கொள்ளலாம். 


மேலும் படிக்க | அரசின் புதிய விதிகள்: இனி பணம் கொடுத்து தங்க நகைகளை வாங்க முடியாது!


ஒரு நாளைக்கு 50 ரூபாய் 


நீங்கள் 25 வயதில் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மாதம் 1500 ரூபாய் அதாவது தினமும் 50 ரூபாய் முதலீடு செய்ய ஆரம்பித்தால், 60 வயதிற்குள் மொத்த கார்பஸ் 57 லட்சத்து 42 ஆயிரத்து 416 ஆக இருக்கும். இருப்பினும், இதற்கு ஆண்டு வட்டி 10 சதவீதமாக இருக்கும். நீங்கள் 75 வயது வரை கூட முதலீடு செய்யலாம். திட்டத்தில் இருந்து வெளியேறும் போது, முதலீட்டாளர்கள் 100 சதவீதம் வரை கார்பஸ் மூலம் வருடாந்திர திட்டத்தை வாங்க விருப்பம் உள்ளது.


இந்க கார்பஸில் 100 சதவீத வருடாந்திரம் வாங்கினால், வாடிக்கையாளர் மாத ஓய்வூதியமாக ரூ.28 ஆயிரத்து 712 பெறலாம். ஆண்டுத்தொகையில் 40 சதவீதம் மட்டுமே வாங்கினால், மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 11,485 ஆக இருக்கும், மேலும் மொத்தத் தொகையாக ரூ. 34 லட்சத்தைப் பெறுவீர்கள், அதை நீங்கள் திரும்பப் பெறலாம்.


ஒரு நாளைக்கு 100 ரூபாய்


25 வயதில் இருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.3000 அதாவது ஒரு நாளைக்கு ரூ.100 முதலீடு செய்ய ஆரம்பித்தால், தேசிய ஓய்வூதி திட்டத்தின் கால்குலேட்டரின் படி 60 வயிதிற்குக பிறகு ரூ.1 கோடியே 14 லட்சத்து 84 ஆயிரத்து 831 திரட்டப்படும். இந்தத் தொகையில் 100 சதவீதம் வருடாந்திரம் வாங்கினால், மொத்த மாதாந்திர ஓய்வூதியம் ரூ.57 ஆயிரத்து 412 ஆகவும், 40 சதவீதம் வருடாந்திரம் வாங்கினால், 22 ஆயிரத்து 970 ரூபாய் மட்டுமே மாத ஓய்வூதியமாக வழங்கப்படும், ஆனால் ஓய்வுக்குப் பிறகு மொத்தத் தொகை ரூ.68 லட்சமாக இருக்கும்.


மேலும் படிக்க | அரசு அறிவித்த அதிரடி சலுகை... ஹோட்டல் அறைகளின் வாடகையில் தள்ளுபடி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ