National Pension System: நமது நாட்டில் சேமிப்புக்கான பல திட்டங்கள் உள்ளன. குறிப்பாக அரசாங்க உத்தரவாதம் பெற்ற பல திட்டங்கள் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக உள்ளன. ஒருவருடைய நிதி நிலை, பண இருப்பு, தேவை, முதலீட்டு காலம் ஆகியவற்றை சார்ந்து அவர் தேர்ந்தெடுக்கும் திட்டமும் மாறுபடும். நீண்ட நாட்களுக்கு முதலீடு செய்து மொத்த தொகையை உருவாக்க விரும்பும் நபர்களுக்கு தேசிய ஓய்வூதிய அமைப்பான NPS சிறந்த திட்டமாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேசிய ஓய்வூதிய அமைப்பு


NPS,முறையான முதலீட்டிற்கான நீண்ட கால ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும். இதில் முதலீட்டாளர்கள் பணி ஓய்வுக்கு பிறகான ஓய்வூதியத்திற்காக முதலீடு செய்கிறார்கள். முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் தொகை பங்குகளிலும், டெப்ட் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யப்படுகிறது. இந்த முதலீடுகளின் மூலம் முதலீட்டாளர்களுக்கு வருமானம் கிடைக்கின்றது. 


என்பிஎஸ் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படுகின்றது. NPS திட்டம் பற்றியும் இதன் மூலம் வரி தொடர்பாக கிடைக்கும் பலன்கள் பற்றிய சில முக்கியமான விஷயங்களைக் இந்த பதிவில் காணலாம். 


NPS: இதில் யார் முதலீடு செய்ய முடியும்? 


- 18 முதல் 65 வயது வரை உள்ள இந்திய குடிமக்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம். 


- என்பிஎஸ் -இல் இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIகள்) இருவரும் முதலீடு செய்ய முடியும். 


NPS: இதில் எத்தனை வகையான கணக்குகள் உள்ளன?


டயர் 1 கணக்கு:


இதில் பணி ஓய்வுக்கு முன்னர் வித்ட்ரா செய்ய முடியாது. சில குறிப்பிட்ட சூழ்நிலைகளிலோ (தொற்றுநோய் அல்லது குழந்தைகளின் கல்வி/திருமணம் போன்றவை) அல்லது ஓய்வு பெறும்போதோதான் இந்த கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும். 


டயர் II கணக்கு:


இது ஒரு தன்னார்வ சேமிப்புக் கணக்காகும். என்பிஎஸ் உறுப்பினர்கள் (NPS Members) எப்போது வேண்டுமானாலும், இந்தக் கணக்கிலிருந்து தங்கள் சேமிப்பைத் தொகையை எடுக்கலாம். இருப்பினும், வரிச் சலுகைகள் முதன்மையாக அடுக்கு I கணக்குகளுடன் தொடர்புடையவை.


NPS: இதில் கிடைக்கும் முதலீட்டு வசதிகள் என்ன? 


அரசாங்கப் பத்திரங்கள், கார்ப்பரேட் பத்திரங்கள் மற்றும் பங்குகள் போன்ற பல்வேறு சொத்து வகைகளில் முதலீடு செய்வதை என்பிஎஸ் சந்தாதாரர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். இது தவிர, அவர்களது ரிஸ்க் எடுக்கும் தன்மைக்கு ஏற்ப சொத்து ஒதுக்கீட்டையும் முடிவு செய்யலாம்.


NPS -இல் கிடைக்கும் வரிச் சலுகைகள் என்ன?


பிரிவு 80CCD(1):


பிரிவு 80C இன் கீழ், NPS நிதிக்கு ஊழியர்கள் பங்களிக்கும் 10% மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு மொத்த வருமானத்தில் பங்களிக்கும் 20% தொகையில் ரூ. 1.5 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படுகிறது.


பிரிவு 80CCD(1B):


பிரிவு 80CCD(1) இன் கீழ், என்பிஎஸ் முதலீட்டாளர்கள் அதிகபட்சமாக இதில் ரூ. 50,000 முதலீடு செய்தால், ரூ. 1.5 லட்சத்திற்கு மேல் முதலீடு செய்வதற்கு கூடுதல் விலக்கு கிடைக்கும். 


பிரிவு 80CCD(2):


ஊழியரின் NPS கணக்கில் நிறுவனம் அளிக்கும் பங்களிப்புக்கு அதிகபட்ச வரம்பு ஏதுமின்றி சம்பளத்தில் (அடிப்படை + டிஏ) 10% வரை வரிச் சலுகை கிடைக்கின்றது.


மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு, டிஏ அரியர், ஓபிஎஸ்: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் காத்திருக்கும் ஜாக்பாட்


NPS: இந்த கணக்கிலிருந்து பணம் எடுக்கும் மற்றும் வெளியேறும் விதிகள் என்ன?


என்பிஎஸ் சந்தாதாரர்களுக்கு (NPS Subscribers) 60 வயதானவுடன், சந்தாதாரர்கள் வரி இல்லாத கார்பஸில் இருந்து 60% தொகையை திரும்பப் பெறலாம். மீதமுள்ள 40% சந்தாதாரருக்கு வழக்கமான ஓய்வூதியத்தை வழங்கும் ஆன்னுவிட்டியை வாங்க பயன்படுத்தப்படுகிறது.


பகுதியளவு தொகையை எடுப்பது எப்படி?


- சந்தாதாரர் 3 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தபிறகு என்பிஎஸ் கணக்கிலிருந்து (NPS Account) பகுதியளவு தொகையை எடுக்கலாம். 


சில சிறப்பு சந்தர்ப்பங்களில் மட்டும் இது அனுமதிக்கப்படுகின்றது.


- திருமணம், குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம், வீடு வாங்குதல்/கட்டுதல் அல்லது தீவிர நோய்களுக்கான  சிகிச்சை அளித்தல் போன்ற சில சிறப்பு நிகழ்வுகளுக்கு பகுதியளவு தொகையை எடுக்க முடியும். 


வருடாந்திர தொகை (Annuity):


கார்பஸின் ஒரு பகுதியிலிருந்து ஆனுவிட்டி வாங்கப்படுகிறது. இதற்கு வரி விதிக்கப்படாது. ஆனால், ஆனுவிட்டி மூலம் கிடைக்கும் ஓய்வூதியத்திற்கு வரி உண்டு. 


NPS கணக்கை நீட்டிப்பது எப்படி?


- 60 வயதிற்குப் பிறகு, என்பிஎஸ் சந்தாதாரர் தனது கணக்கை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். 


- அல்லது, பணத்தை எடுக்காமல் 70 வயது வரை தொடர்ந்து முதலீடு செய்யலாம்.


மேலும் படிக்க | பட்ஜெட்டில் காத்திருக்கும் குட் நியூஸ்: இரட்டிப்பாகும் ஓய்வூதிய தொகை.. விவரம் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ