Ration Card Online: இந்தியாவில் ரேஷன் விநியோக திட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதன் மூலம், நாடு முழுவதும் மக்களுக்கு நிலையான விலையில் ரேஷன் வழங்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, கொரோனா காரணமாக, அரசாங்கம் இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தையும் தொடங்கியது, அது இன்னும் தொடர்கிறது. ஆனால் இந்த ரேஷன் திட்டத்தின் கீழ் நியான விலையில் பொருட்கள் பெற, மக்கள் ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரேஷன் கார்டு தேவை


அரசால் வழங்கப்படும் ரேஷனைப் பெற, ஆதார் அட்டை, பான் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது போலவே, ரேஷன் கார்டு வைத்திருப்பதும் மக்களுக்கு முக்கியம். ரேஷன் கார்டு மூலம், ஒரு நபர் இலவச ரேஷன் பெற முடியும். பொதுவாக ரேஷன் கார்டு தேவைப்படுபவர்களுக்கு மாநில அரசு வழங்குகிறது.  


மேலும் படிக்க | ரேஷன் கடை பயனாளிகளுக்கு நல்ல செய்தி... புதிய விதியை கொண்டு வந்த மத்திய அரசு!


 


ரேஷன் பெறுவது எப்படி?


ரேஷன் வினியோகம் செய்யும் உரிமை மாநில அரசுகளின் கையில் இருப்பதால், ரேஷன் கார்டு தயாரிக்கும் பணியும் மாநில அரசின் கீழ் வரும். ரேஷன் கார்டு தயாரிப்பதற்கான போர்டல் ஒவ்வொரு மாநில மக்களுக்கும் வேறுபட்டது. நீங்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் வசிப்பவராக இருந்தால், https://nfsa.up.gov.in/Food/citizen/Default.aspx இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் ரேஷன் கார்டைப் பெறலாம். அதே நேரத்தில், நீங்கள் பீகாரில் வசிப்பவராக இருந்தால், பீகார் அரசாங்க இணையதளமான http://epds.bihar.gov.in/ ஐப் பார்வையிடுவதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நீங்கள் தமிழகத்தில் வசிப்பவராக இருந்தால், தமிழக அரசின் இணையதளமான  https://tnpds.gov.in/ சென்று விண்ணப்பிக்கலாம். இந்த போர்ட்டல்களில், பெயர், முகவரி மற்றும் வருமானத் தகவல்களைக் கொடுக்க வேண்டும். தகவல் சரியாக இருந்தால் உங்கள் ரேஷன் கார்டு செய்து தரப்படும்.


ஆன்லைன் ரேஷன் கார்டை பெற சில முக்கியமான ஆவணங்கள் தேவை. இதற்கு ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றை வைத்திருக்க வேண்டும். மேலும், உங்கள் வீட்டு முகவரிக்கான சான்றாக மின்சாரம் அல்லது தண்ணீர் ரசீது எடுத்துக் கொள்ளலாம். ரேஷன் கார்டு பெற, வருமானச் சான்றிதழும் வைத்திருக்க வேண்டும்.


ரேஷன் கார்டு என்பது அடையாளம்


ரேஷன் கார்டு என்பது ரேஷன் பெறுவதற்கான வழிமுறை மட்டுமல்ல, ஒரு வகையில் மக்களின் அடையாளத்தின் அடிப்படையும் கூட. இதில், ஆதார் அட்டை போன்று ஒருவர் தொடர்பான அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.  தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் க்யூ-ஆர் கோடு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.  இது குறித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக க்யூ-ஆர் கோடு மூலம் நியாய விலை கடைகளில் பொருட்களை பெற்றுகொள்ளும் திட்டம், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 65 கடைகளில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நியாய விலை கடைகளுக்கு கொண்டு செல்லும் பொருட்களின் தரத்தை அறிந்து கொள்வதற்காக க்யூ ஆர் கோட் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தரமான உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 14 லட்சத்து 20 ஆயிரம் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.


மேலும் படிக்க | ரயிலில் குழந்தைகள் பயணம் செய்ய புதிய விதிகள் - இந்திய ரயில்வே!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ