காரில் பின் சீட்டில் இருப்பவர்களும் சீட்பெல்ட் அணிய வேண்டும் மீறினால் அபராதம்! எவ்வளவு தெரியுமா?
Car Backseat Rules: காரில் பின் சீட்டில் இருப்பவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற புதிய விதிமுறை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வர இருக்கிறது. இந்த விதிமுறை மீறலுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
சாலை போக்குவரத்தில் அதிக விபத்துகள் நடைபெறும் நாடுகளில் முதன்மையாக இந்தியா இருக்கும் நிலையில், விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க மத்திய அரசு பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதன்ஒருபகுதியாக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் காரில் பின் சீட்டில் இருப்பவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வர இருக்கிறது. இந்த விதிமுறையை பின்பற்றவில்லை என்றால் ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.
மேலும படிக்க | மின்சார வாகனங்கள் வாங்க ரூ.50000 வரை மானியம்... தள்ளுபடியும் உண்டு.. முழு விபரம்!
காரில் பின் இருக்கையில் இருப்பவர்கள் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் அலாரம் ஒலித்துக் கொண்டே இருக்கும் வகையில் கார்களை வடிவமைக்குமாறு முன்னணி கார்களை தயாரிக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இப்போது முன் சீட்டில் இருப்பவர்கள் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் அலாரம் அடிக்கும். இன்னும் கொஞ்ச நாட்களில், அதாவது அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் பின் இருக்கையில் இருப்பவர்களும் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால், புதிதாக வரும் கார்களில் எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டே இருக்கும்.
பின் சீட்டில் இருப்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது ஏற்கனவே இருக்கும் சட்டம் தான். மோட்டார் வாகன சட்டம் 138ன்படி பின் இருக்கையில் இருப்பவர்கள் சீட் பெல்ட் அணியாமல் பயணிக்கும்போது ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். ஆனால், போக்குவரத்து காவல்துறை இந்த விதிமுறையின்படி பெரியளவில் அபராதம் விதிப்பதில்லை. அதனால், பலருக்கும் இப்படியொரு விதிமுறை இருக்கிறதே தெரியவில்லை. இந்த விதிமுறைகள் எல்லாம் சாலையில் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே.
சாலையில் செல்லும்போது ஒருவர் செய்யும் தவறு மற்றவர்களையும், அவர்களை சார்ந்த குடும்பத்தினரையும் சேர்ந்தே பாதிக்கிறது. ஒருமுறை விபத்து நடந்துவிட்டால் அதனால் வரக்கூடிய விபரீதம் என்பது நாம் அனைவரும் கற்பனை செய்ய முடியாதது. ஹெல்மெட் அணிவது முதல் காரில் சீட் பெல்ட் அணிவது வரை என எதற்கும் அலட்சியம் காட்டக்கூடாது. அலட்சியமே பெரிய விபத்துகளுக்கு முதன்மையான காரணமாக இருக்கின்றன. அதேபோல் கார் அல்லது இருசக்கர வாகனம் என எதில் சென்றாலும் செல்போன் பேசிக் கொண்டு செல்லக்கூடாது. செல்போன் பேசிக் கொண்டு வாகனம் இயக்குவதால் ஏற்படும் விபத்துகளும் இந்தியாவில் அதிகமாக இருக்கிறது என்பதை வாகனம் ஓட்டும் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | ஏழைகள் கூட ‘இந்த’ கார்களை வாங்கலாமாம்! மிஸ் பண்ணிடாதீங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ