மருத்துவ காப்பீடு: பொது காப்பீட்டு கவுன்சில் (ஜிஐசி) பொது மற்றும் சுகாதார காப்பீட்டு நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து, அனைத்து மருத்துவமனைகளிலும் பணமில்லா சிகிச்சையை நீட்டிக்க 'எங்கும் பணமில்லா சிகிச்சை' முயற்சியை தொடங்கியுள்ளது. காப்பீட்டாளர்களின் வலையமைப்பில் இல்லாத மருத்துவமனைகளில் கூட உடல்நலக் காப்பீட்டு பாலிசிதாரர்கள் இப்போது பணமில்லா வசதிகளைப் பெறலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய விதியின் கீழ் அனைத்து மருத்துவமனைகளிலும் பணமில்லா சிகிச்சை


இப்போது வரை, காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்துள்ள நெட்வொர்க் மருத்துவமனைகளில் மட்டுமே ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிதாரர் பணமில்லா சிகிச்சையைப் பெற முடியும். இன்சூரன்ஸ் நிறுவனம் மருத்துவச் செலவுகளை நெட்வொர்க் மருத்துவமனையுடன் ஆன ஒப்பந்தத்தின் கீழ் நேரடியாகச் செலுத்தியது. இது நெட்வொர்க் அல்லாத மருத்துவமனையாக இருந்தால், பாலிசிதாரர் தனது பாக்கெட்டில் இருந்து முழுத் தொகையையும் செலுத்த வேண்டும், பின்னர் பணத்தை கிளைம் செய்யும் செயல்முறையை மேற்கொள்ள வேண்டும். இது சிக்கலானது என்பதோடு, எவ்வலவு பணம் திரும்ப கிடைக்கும் என்ற நிச்சயத்தன்மை இல்லாமல் இருந்தது.


‘Cashless Everywhere’ என்னும் விதியின் கீழ், பாலிசிதாரர்,  பணமில்லா மருத்துவமனை வசதி மூலம் தாங்கள் தேர்ந்தெடுக்கும் எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெறலாம். காப்பீட்டு நிறுவனத்தின் நெட்வொர்க்கில் மருத்துவமனை இல்லாவிட்டாலும், காப்பீட்டாளர் பில் தொகையை மருத்துவமனைக்கு செலுத்துவார், இது பாலிசிதாரருக்கு பணமில்லா சிகிச்சையைப் பெற அனுமதிக்கிறது.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி: இனி இந்த ஊழியர்களுக்கு பென்ஷன், கிராஜுவிட்டி கிடைக்காது


Cashless Everywhere : நெட்வொர்க் அல்லாத மருத்துவமனைகளில் பணமில்லா மருத்துவ சிகிச்சை பெறுவது எப்படி?


ஜிஐசி நிர்ணயித்த வழிகாட்டுதல்களின்படி, எம்பேனல் இல்லாத மருத்துவமனையில் 'பணமில்லாத எல்லா இடங்களிலும்' வசதியைப் பெற, உடல்நலக் காப்பீட்டு பாலிசிதாரர்கள் மனதில் கொள்ள வேண்டிய மூன்று விதிகள் உள்ளன:


1) தேர்ந்தெடுக்கப்பட்ட நடைமுறைகளுக்கு, வாடிக்கையாளர் சேர்க்கைக்கு குறைந்தது 48 மணிநேரத்திற்கு முன் காப்பீட்டு நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும்.


2) அவசர சிகிச்சைக்காக, வாடிக்கையாளர் அனுமதிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் காப்பீட்டு நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும்.


3) பாலிசியின் விதிமுறைகளின்படி உரிமைகோரல் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் மற்றும் காப்பீட்டு நிறுவனத்தின் செயல்பாட்டு வழிகாட்டுதல்களின்படி பணமில்லா வசதி ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.


நெட்வொர்க் அல்லாத மருத்துவமனையின் கட்டணங்கள், தற்போதுள்ள எம்பேனல் செய்யப்பட்ட காப்பீட்டாளர்களுக்கு மருத்துவமனை வசூலிக்கும் கட்டணங்களின் அடிப்படையில் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். நெட்வொர்க் அல்லாத மருத்துவமனைகளிலும் பணமில்லா வசதி உடனடியாக அமலுக்கு வரும் என்று ஜனவரி 24, 2024 அன்று ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சில் கூறுகிறது.


15 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனச் சட்டத்தின் கீழ் அந்தந்த மாநில சுகாதார அதிகாரிகளிடம் பதிவுசெய்யப்பட்டவை இப்போது பணமில்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றன.


எல்லா இடங்களிலும் பணமில்லா வசதி: சுகாதார காப்பீட்டு வாடிக்கையாளர்களுக்கு இது எவ்வாறு பயனளிக்கும்?


தற்போது, 63% வாடிக்கையாளர்கள் ரொக்கமில்லா கிளைமை தேர்வு செய்கிறார்கள், மற்றவர்கள் தங்கள் காப்பீட்டாளர் அல்லது மூன்றாம் தரப்பு நெட்வொர்க்கிற்கு வெளியே உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதால், மற்றவர்கள் பணத்தை திரும்ப பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சிலின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, ஒரு வாடிக்கையாளர் தனது சிகிச்சைக்காக நெட்வொர்க் அல்லாத மருத்துவமனைக்குச் சென்றால், அவர் முதலில் பணம் செலுத்த வேண்டும், பின்னர் அவரது காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து பனத்தை பெற வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், காப்பீட்டு கோரிக்கைக்கு தேவையான ஆவணங்களை சேகரிக்கும் பொறுப்பு வாடிக்கையாளரிடம் மட்டுமே உள்ளது. ஒரு வாடிக்கையாளர் மருத்துவமனையுடன் பலமுறை ஒருங்கிணைக்க வேண்டிய முக்கியமான ஆவணங்கள் இல்லாததால், இது பல பாலிசிதாரர்களுக்கு திருப்பிச் செலுத்தும் செயல்முறையை நீண்டதாகவும் அழுத்தத்தை கொடுப்பதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பிப்ரவரி 1 முதல் முக்கிய விதிகளில் மாற்றம்... நோட் பண்ணிக்கோங்க மக்களே..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ