அசுர வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில்கள்; செப் 30 முதல் ‘இந்த’ வழித்தடத்தில்!
புதிய வந்தே பாரத் ரயில்களான, வந்தே பாரத் 2 ரயில்கள், பல அம்சங்களில் ஏற்கனவே இருக்கும் வந்தே பாரத் ரயிகளிலிருந்து மேம்படுத்தப்பட்டதாகும்.
ரயில்வேயின் தொழில்நுட்ப மேம்பாட்டு நடவடிக்கைகள் மீது அரசு கவனம் செலுத்தி வரும் நிலையில், அதிகவேக ரயிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பணிகளை இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகிறது. அதிவேக ரயில்கள் பயணிகளின் விருப்பமாக உள்ள நிலையில், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, ரயில்வே தரப்பில் இருந்து விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு, கூடுதலாக அதிவேக வந்தே பாரத் ரயிகளை இயக்க திட்டமிடப்பட்டு வருகிறது. வந்தே பாரத் 'வந்தே பாரத் 2' என்ற செமி - ஹை ஸ்பீட் ரயிலின் மேம்படுத்தப்பட்ட ரயில் சேவையை, செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. புதிய வந்தே பாரத் 2 பல அம்சங்களில் ஏற்கனவே இருக்கும் வந்தே பாரத் ரயிகளிலிருந்து மேம்படுத்தப்பட்டதாகும். இந்த ரயில் செப்டம்பர் 30 அன்று அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு கொடியசைத்து இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது குறித்து ரயில்வே தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
புதிய வந்தே பாரத் ரயில் கட்டணம்
புதிய வந்தே பாரத் காரின் பயணிகள் கட்டணம் குறித்து அறிந்து கொள்ள மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் உள்ளது. மும்பை மற்றும் அகமதாபாத் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயிலில் எக்சிகியூட்டிவ் வகுப்பிற்கு, பயணிகள் அடிப்படைக் கட்டணமாக ரூ.2,349 செலுத்த வேண்டும் என்று ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதே சமயம், நாற்காலி வசதி கொண்ட சேர் காரின் அடிப்படைக் கட்டணம் ரூ.1,144 என்ற அளவில் இருக்கும் என கூறப்படுகிறது. இதில் ஜிஎஸ்டி சேர்க்கப்படவில்லை.
சதாப்தியின் அசல் கட்டணத்தை விட 1.4 மடங்கு அதிக கட்டணம்
புதிய வந்தே பாரத் மும்பை மற்றும் அகமதாபாத் இடையே இரண்டு நிலையங்களில் நிறுத்தப்படும். இது நாட்டின் இரண்டு பொருளாதார நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை பெரிதும் குறைக்கும். ரயில்வே முடிவு செய்துள்ள கட்டணத்தில், வந்தே பாரத் பயணிகள் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களின் அடிப்படைக் கட்டணத்தை விட 1.4 மடங்கு செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு Good News; ‘இந்த’ வழித்தடங்களில் 75 புதிய வந்தே பாரத் ரயில்கள்
மேலும், அகமதாபாத்தில் இருந்து சூரத்துக்கு வந்தே பாரத் எக்சிகியூட்டிவ் வகுப்பின் அடிப்படைக் கட்டணம் ரூ.1,312 ஆகவும், நாற்காலி வசதி கொண்ட சேர் காருக்கு ரூ.634 ஆகவும் இருக்கும். எக்சிகியூட்டிவ் வகுப்பில், சூரத்திலிருந்து மும்பைக்கு அடிப்படைக் கட்டணம் ரூ.1,522 ஆகவும், நாற்காலி வசதி கொண்ட எனப்படும் சேர் கார் ரூ.739 ஆகவும் இருக்கும். சென்னை ஐசிஎஃப் வடிவமைத்துள்ள புதிய வந்தே பாரத் அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகத்தில் ஓடக்கூடியது. ஆனால் தற்போது ரயில் பாதையில் மணிக்கு 130 கிமீ வேகத்திற்கு மேல் செல்ல இயலாத நிலை உள்ளது.
தற்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நாட்டில் இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இதில், முதல் வழி புது தில்லியில் இருந்து கத்ராவுக்கும் இடையிலானது. இரண்டாவது வழி புதுதில்லியில் இருந்து வாரணாசிக்கும் செல்கிறது. புதிய வந்தே பாரத் ரயில்கள் குறைந்த எடை கொண்டது. தேவைக்கேற்ப 32 இன்ச் எல்சிடி டிவிகளை வைஃபை மூலம் இயக்கும் வசதி கிடைக்கும் . இந்த ரயிலில் கேடலிடிக் அல்ட்ரா வயலட் காற்று சுத்திகரிப்பு அமைப்பும் பொருத்தப்பட்டிருக்கும்.
மேலும் படிக்க | Indian Railways: வந்தே பாரத் விரைவு ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ