புதுடெல்லி: பல கோடி EPF சந்தாதாரர்களுக்கு பயனளிக்கும் வகையில் மோடி அரசாங்கம் அளித்து வரும் புத்தாண்டு சிறப்பு போனஸ்கள் தொடர்கின்றன. மோடி அரசாங்கம் தற்போது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதி அறக்கட்டளைகளை பாரத் பாண்ட் ETF போன்ற பொதுத்துறை கடன் ETF-களில் (பரிவர்த்தனை வர்த்தக நிதிகள்) முதலீடு செய்ய அனுமதித்துள்ளது என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு ஊடக அறிக்கையின்படி, இது தொடர்பாக ஒரு அறிவிப்பு ஜனவரி 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது.


ETF-கள் 4.5 சதவீதம் முதல் 6.6 சதவீதம் என்ற வரம்பில் லாபத்தைக் கொடுக்கின்றன என்பதை இங்கு குறிப்பிடுவது முக்கியமாகும். இது 2020 டிசம்பரில் FY20-ல் EPFO அறிவித்த 8.5% வட்டி விகிதத்தை விட குறைவாகும்.


தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் 2019 ல் மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ​​ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) நிஃப்டி 50, சென்செக்ஸ், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (CPSEs) மற்றும் பாரத் 22 குறியீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பரிவர்த்தனை வர்த்தக நிதிகளில் (ETFs) முதலீடு செய்கிறது என்று கூறியிருந்தார். EPFO தனிப்பட்ட நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யாது.


செப்டம்பர் 2019 நிலவரப்படி, ETF-களில் EPFO முதலீடு செய்த மொத்த தொகை ரூ .86,966 கோடியாக இருந்தது. மார்ச் 31, 2015 அன்று நடைபெற்ற 207 வது கூட்டத்தில் மத்திய அறங்காவலர் குழு (CBT), பணியாளர் வருங்கால வைப்பு நிதியம் (EPF), ETF-களில் மட்டும் பங்கு மற்றும் தொடர்புடைய முதலீடுகள் என்ற பிரிவில் முதலீடு செய்ய முடிவு செய்திருந்தது.


தங்கள் EPF கணக்குகளில் 2019-20 ஆம் ஆண்டிற்கான வட்டி வரவு வைப்பதில் அரசாங்கத்திடமிருந்து இறுதி ஒப்புதலுக்காக ஆவலுடன் காத்திருக்கும் சுமார் ஆறு கோடி EPF சந்தாதாரர்களுக்கு புத்தாண்டு போனசாக மோடி அரசு (Modi Government) 8.5 சதவீத வட்டியை அளித்தது.


ALSO READ: வீடு வாங்குபவர்களுக்கு good news: 30 bps வரை வட்டி விகிதத்தை குறைத்தது SBI!!


முன்னதாக, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சந்தோஷ் கங்வார் டிசம்பர் 31 ம் தேதி, PF சந்தாதாரர்கள் தங்கள் PF தொகைக்கு 8.5 சதவீத வட்டியை அந்த நாளிலிருந்து பெறத் தொடங்குவார்கள் என அறிவித்தனர்.


"இது குறித்த ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதை உங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். 2019-2020 ஆம் ஆண்டிற்கு, 6 கோடிக்கு மேற்பட்ட சந்தாதாரர்கள் PF தொகைக்கு 8.5 சதவீத வட்டியைப் பெறுவார்கள். இதை இன்று முதல் நீங்கள் பெறத்துவங்கும் வகையில் நாங்கள் ஏற்பாடுகளை செய்துள்ளோம்” என்று மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் கூறினார்.


அவர் மேலும் கூறுகையில், “2020 ல் சூழ்நிலைகள் நமக்கு சாதகமாக இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 2019-2020 ஆம் ஆண்டிற்கான வருங்கால வைப்பு நிதி தொகைக்கு 8.5 சதவீத வட்டியைக் கொடுக்க முயற்சிப்போம் என்று நாங்கள் கூறியபோது மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். இன்று, அந்த வாக்குறுதியை நிறைவேற்ற நான் இங்கு வந்துள்ளேன்.” என்றார்.


ALSO READ: 7th Pay Commission latest news: ஓய்வூதிய விதிகளில் பெரிய மாற்றத்தை செய்தது மத்திய அரசு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR