7th Pay Commission latest news: ஓய்வூதிய விதிகளில் பெரிய மாற்றத்தை செய்தது மத்திய அரசு

புதிய முயற்சிகளின் குறிக்கோள், அரசு ஊழியர்கள் ஓய்வுபெற்ற பிறகும், தற்போது ஓய்வூதியம் பெறுபவர்களும், ஓய்வூதியம் பெறும் குடும்ப நபர்களும், மூத்த குடிமக்களும் எளிதான மற்றும் பிரச்சனையற்ற வாழ்க்கையை வழங்குவதாகும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 2, 2021, 06:23 PM IST
  • பணியின் போது ஊனமுற்ற அரசு பணியாளர்களுக்கு ஒரு நற்செய்தி.
  • இந்த நடவடிக்கை ஊனமுற்ற பணியாளர்களுக்கு ஒரு பெரிய நிவாரணத்தை அளிக்கும்
  • மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெள்ளிக்கிழமை இதை தெரிவித்தார்.
7th Pay Commission latest news: ஓய்வூதிய விதிகளில் பெரிய மாற்றத்தை செய்தது மத்திய அரசு  title=

புதுடெல்லி: புத்தாண்டில் வெளியிடப்பட்ட ஒரு மிகப்பெரிய அறிவிப்பில், அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஊனம் ஏற்படும் பட்சத்தில், ‘ஊனமுற்றோர் இழப்பீடு’ வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பணியின் போது ஊனமுற்றோர் மற்றும் அத்தகைய ஊனமுற்ற நிலையிலும் பணியில் தக்கவைக்கப்பட்ட, பணியில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் ‘ஊனமுற்றோர் இழப்பீடு’ வழங்கப்படும்.  

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெள்ளிக்கிழமை, இந்த நடவடிக்கை ஒரு பெரிய நிவாரணத்தை அளிக்கும் என்று கூறினார். குறிப்பாக CRPF, BSF, CISF போன்ற இளம் மத்திய ஆயுத போலீஸ் படை (CAPF) மற்றும் பிறருக்கு இது ஒரு பெரிய நிவாரணத்தை அளிக்கும்.

அவர்களது பணியின் தன்மை மற்றும் கடினமான பணி சூழல் காரணமாக கடமைகளின் செயல்பாட்டில் இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் அவர்கள் சிக்கிக்கொள்வதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளன.

 நரேந்திர மோடி அரசு (Modi Government) விதிகளை எளிமைப்படுத்தவும் பாரபட்சமான உட்பிரிவுகளை அகற்றவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த அனைத்து புதிய முயற்சிகளின் இறுதி குறிக்கோள், அரசு ஊழியர்கள் ஓய்வுபெற்ற பிறகும், தற்போது ஓய்வூதியம் பெறுபவர்களும், ஓய்வூதியம் பெறும் குடும்ப நபர்களும், மூத்த குடிமக்களும் (Senior Citizens) எளிதான மற்றும் பிரச்சனையற்ற வாழ்க்கையை வழங்குவதாகும் என்று சிங் கூறினார்.

ALSO READ: புத்தாண்டில் பணியாளர்களுக்கு மோடி அரசாங்கம் அளிக்கும் மிகப்பெரிய பரிசு: முழு விவரம் உள்ளே

1.1.2004 அல்லது அதற்குப் பின்னர் நியமிக்கப்பட்ட மற்றும் தேசிய ஓய்வூதிய முறைமையின் (NPS) கீழ் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு மத்திய சிவில் சர்வீசஸ் (CCS) (EOP) விதிகளின் கீழ் இயலாமை நலன்களுக்கான முந்தைய விதிகள் அத்தகைய இழப்பீட்டை வழங்காததால், இந்த புதிய உத்தரவு ஊழியர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை கருத்தில் கொண்டு சேவை விதிகளில் ஒரு ஒழுங்கின்மையை நீக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், பணியாளர் அமைச்சகத்தில் ஓய்வூதியத் துறை வெளியிட்டுள்ள புதிய உத்தரவின் மூலம், NPS இன் கீழ் வரும் ஊழியர்களுக்கும் அசாதாரண ஓய்வூதியத்தின் (EOP) விதி (9) இன் கீழ் சலுகைகள் கிடைக்கும்.

ALSO READ: Aadhaar Card-ல் எத்தனை முறை உங்கள் பெயரை மாற்ற முடியும் தெரியுமா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News