ரேஷன் அட்டை என்பது இந்தியாவில் மக்களுக்கான முக்கியமான ஆவணங்களில் ஒன்று. மத்திய அரசின் PMGKY (பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா) மூலம் சுமார் 80 கோடி மக்கள் பயனடைகிறார்கள் என்று அரசு கூறுகிறது. மக்களின் உரிமையாக பார்க்கப்படும் இந்த ரேஷன் கார்டுகள் ஐந்து முக்கிய வகைகளில் வருகின்றன, ஒவ்வொன்றும் வெவ்வேறு தேவைகளுக்கானவை. இந்தியாவில் மத்திய அரசு கொடுத்திருக்கும் ரேஷன் அட்டைகளின் வகைகள் மற்றும் விரிவான தகவல்களைத் தெரிந்துக் கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏபிஎல் (Above Poverty Line) ரேஷன் கார்டுகள்: இவை வறுமைக் கோட்டிற்கு மேல் வாழும் மக்களுக்காக கொடுக்கப்படும் அட்டையாகும். பெரும்பாலும் நடுத்தர வர்க்க மக்களுக்கு வழங்கப்படும் இந்த அட்டை வைத்திருப்பவர்களுக்கு, ரேஷனில் கிடைக்கும் பொருட்களின்ன் அளவும் விலையும் மாநிலத்திற்கு மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.


பிபிஎல் (Below Poverty Line) ரேஷன் கார்டுகள்: இவை வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களுக்கு வழங்கப்படுவதாகும். நாட்டின் ஏழைகளுக்கு, குறிப்பாக நிலையான வருமான ஆதாரம் இல்லாதவர்களுக்கு இலவச ரேஷன் வழங்குவதற்காக இந்த அட்டையை அரசு அளித்துள்ளது. 


AAY (Antyodaya Anna Yojana) ரேஷன் கார்டுகள்: தெருவோர வியாபாரிகள், வேலையில்லாத இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் முதியவர்கள் என குறைந்த அல்லது நிலையற்ற வருமானம் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அட்டை இது.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அப்டேட்: தேசிய ஓய்வூதிய திட்டத்தில் வரும் லாபகரமான் மாற்றம்


AY (Annapurna Yojana) ரேஷன் கார்டுகள்: இந்த அட்டை, ஏழை முதியவர்களுக்கு, மாதாந்திர ரேஷன் வழங்குவதற்காக அரசால் கொடுக்கப்படும் ரேஷன் அட்டை ஆகும். 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இந்த அட்டை வழக்கப்படும்.


PHH (Priority Household) ரேஷன் கார்டுகள்: இவை பொது விநியோக முறையின் மூலம் அடையாளம் காணப்பட்ட மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு ரேஷன் விநியோகத்தில் முன்னுரிமை அளித்து, ஒவ்வொரு மாதமும் ஒரு நபருக்கு 5 கிலோ என்ற அளவில் ரேஷன் வழங்கப்படுகிறது.


இந்த நான்கு வகை ரேஷன் அட்டைகளையும் மத்திய அரசு விநியோகிக்கிறது. இத்துடன், மாநிலங்களிலும், வெள்ளை, மஞ்சள் மற்றும் பச்சை போன்ற பல்வேறு வண்ணங்களில் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. பிபிஎல், ஏபிஎல் என பிரிவிற்கு ஏற்றாற்போல இந்த அட்டைகள் வழங்கப்படுகின்றன.


தற்போது, வண்ணங்களைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, NFSA விதிகளின் அடிப்படையில் கார்டுகளை மாநில அரசுகள் வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  


மின்னணு பொது விநியோக முறை (EPDS) பயன்படுத்தி மின்-ரேஷன் அட்டைகளை பல மாநில அரசுகள் அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த மேம்படுத்தப்பட்ட அமைப்பு EPDS தளம் மூலம் ஆன்லைனில் ரேஷன் பொருட்கள் பற்றிய தகவல்களைப் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். ரேஷன் திட்டத்திற்காக 2 லட்சம் கோடி ரூபாய் செலவாகிறது.


மேலும் படிக்க | மளிகை முதல் காய்கறி வரை சந்தையில் களமிறங்கும் ரிலையன்ஸ் 30 நிமிடத்தில் டெலிவரி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ