2020-ன் கடைசி நாள் வர்த்தகத்தில் முதன் முறையாக 14000-ஐத் தாண்டியது Nifty
![2020-ன் கடைசி நாள் வர்த்தகத்தில் முதன் முறையாக 14000-ஐத் தாண்டியது Nifty 2020-ன் கடைசி நாள் வர்த்தகத்தில் முதன் முறையாக 14000-ஐத் தாண்டியது Nifty](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2020/12/31/179806-share-market.jpg?itok=wccjOy2I)
இன்று ஆண்டின் கடைசி வர்த்தக நாள் மற்றும் டிசம்பர் தொடர் டெரிவேடிவ் காண்டிராக்டுகள் முடியும் நாள் என்பதால் இன்று அதிக ஏற்ற இறக்கம் காணப்படலாம்.
புதுடெல்லி: தேசிய பங்குச் சந்தை குறியீடான NIFTY, இந்த ஆண்டின் இறுதி நாள் வணிக துவக்கத்தில் சில புள்ளிகளை இழந்தாலும், அதிலிருந்து மீண்டு, சுமார் 30 புள்ளிகள் உயர்ந்து முதன் முறையாக, 14,000 என்ற அளவைத் தாண்டியது.
Sensex 100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 47,800 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் செய்தது. காலை 10:40 நிலவரப்படி, NIFTY 21 புள்ளிகள் அதாவது 0.15% உயர்ந்து 14,002.35 ஆகவும், Sensex 93 புள்ளிகள் அதிகரித்து 47,838.90 ஆகவும் இருந்தன. சந்தையில் புள்ளிகள் உயர்வுக்கு ஃபார்மா, ரியால்டி மற்றும் நிதி சேவைகளின் பங்குகள் அதிக பங்களித்தன.
முன்னதாக, இன்று சந்தை துவக்கத்தில், இந்திய பங்குச் சந்தைகள் 6 நாட்கள் இருந்த ஓட்டத்திற்குப் பிறகு, குறைந்த நிலையிலேயே இருந்தன. குழப்பமான சர்வதேச குறிப்புகளும் இதற்கு ஒரு காரணமாகும். காலை 9:20 மணி நிலவரப்படி, Sensex 44 புள்ளிகள் குறைந்தும், NIFTY 3 புள்ளிகள் குறைந்தும் இருந்தன.
இன்று ஆண்டின் கடைசி வர்த்தக நாள் மற்றும் டிசம்பர் தொடர் டெரிவேடிவ் காண்டிராக்டுகள் முடியும் நாள் என்பதால் இன்று அதிக ஏற்ற இறக்கம் காணப்படலாம்.
Nifty பங்குகளில், டாடா மோட்டார்ஸ் 1.49% உயர்ந்து, ஓஎன்ஜிசி மற்றும் டாடா ஸ்டீல் முறையே 1.34% மற்றும் 0.83% அதிகரிப்பைப் பெற்றன. டைடன் கம்பனி, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ரிலயன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாக்டர் ரெட்டீஸ் லேப், ஜெ.எஸ்.டபிள்யு ஸ்டீல், ஐ.ஓ.சி, எச்.டி.எஃப்.சி வங்கி, அதானி போர்ட்ஸ், சிப்லா, டிவிஸ் லேப்ஸ், மாருதி சுசுகி ஆகியவை Nifty-யில் லாபங்களைப் பெற்ற மற்ற முக்கிய பங்குகளாகும்.
ALSO READ: 7th Pay Commission latest: பயணப்படியில் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசின் good news
Nifty-யில் அதிகம் இழந்த பங்குகளில் எய்சர் மோட்டார்ஸ் 1.08% குறைந்து முதலிடம் பிடித்தது. அல்ட்ராடெக் சிமென்ட், ஸ்ரீ சிமென்ட்ஸ், யுபிஎல், எம் அண்ட் எம், டிசிஎஸ், இன்போசிஸ் (Infosys), என்டிபிசி, எச்யூஎல், எஸ்பிஐ, டெக் மஹிந்திரா, பஜாஜ் ஆட்டோ, கிராசிம், எச்சிஎல் டெக் ஆகியவை நிஃப்டியில் இழந்த மற்ற பங்குகளாகும்.
புதன்கிழமை, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் சாதனை அளவில் உயர்ந்தன. சென்செக்ஸ் 133.14 புள்ளிகள் அதாவது .28% உயர்ந்து 47,746.22 ஆகவும், NSE பெஞ்ச்மார்க் நிஃப்டி 49.35 புள்ளிகள் அதாவது 0.35% உயர்ந்து 13,981.95 ஆகவும் முடிந்தன.
வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPI) ரொக்கப் பிரிவில் ரூ .1,824 கோடி மதிப்புள்ள இந்திய பங்குகளை தற்காலிக அடிப்படையில் வாங்கினர். மேலும் ஃபுசர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் பிரிவில் ரூ .2,691 கோடி மதிப்பிலான முதலீட்டை செய்துள்ளனர். உள்நாட்டு நிறுவனங்கள் 587 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய பங்குகளை ரொக்க சந்தையில் விற்றன.
உலகளாவிய சந்தைகள்
மற்ற ஆசிய பங்குகள் இன்று ஒரே சாய்வில் இல்லாமல் பல்வேறு நிலைகளிலேயே இருக்கின்றன. ஜப்பானின் நிக்கி 0.45% குறைந்தது. ஷாங்காய் காம்போசிட் 0.83% அதிகரித்தது. தைவான் பங்குச் சந்தைகள் 0.11% அதிகரித்தன. ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு 0.45% உயர்ந்தது. தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு இன்று மூடப்பட்டுள்ளது.
அமெரிக்க பங்குகள் நேற்று சிறிய லாபங்களுடன் முடிவடைந்தன. Dow 74 புள்ளிகள் அதாவது 0.24% அதிகமாகவும், S&P 500 இன்டெக்ஸ் 0.13% ஆதிகமாகவும், Nasdaq 0.15% அதிகமாகவும் முடிந்தன.
ALSO READ: ஜனவரி 1 முதல் SBI காசோலை செயல்முறையில் பெரிய மாற்றம்: விவரம் உள்ளே
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR