ஊழியர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான வைரல் செய்தி! வதந்திகளை நம்பாதீர்: அரசு அலர்ட்
Fake News About EPF: ஊழியர் வருங்கால வைப்பு நிதியை தொடர்பான சமூக ஊடக வைரல் பதிவுகளின் உண்மைத்தன்மை என்ன? ஃபேஸ்புக்கில் விளக்கம் வெளியிட்ட EPF அமைப்பு
ஊழியர் வருங்கால வைப்பு நிதியை (EPF) 55 வயதில் திரும்பப் பெறுவது தொடர்பான அறிவிப்பு சமூக ஊடகங்களில் வைரலாகைவருகிறது. இது இந்தியாவின் ஊழியர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான தகவல் அல்ல. மலேஷியாவிலும் வதந்தியை பரப்பிய அந்நாட்டின் பணியாளர் வைப்பு நிதியம் தொடர்பான செய்தி. ஆனால், அந்த செய்தி போலியானது என்று மலேசியாவின் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஜில் (Fahmi Fadzil) தெரிவித்தார். இதன் பின்னணி என்ன?
மலேசியாவில் தற்போதுள்ள ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கு பதிலாக புதிய கொள்கையை அமல்படுத்தியதைத் தொடர்ந்து வெளியான செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில், EPF பங்களிப்பாளர்கள் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ள வேண்டிய எண் மற்றும், ஒரு “மருத்துவ திட்டம்” மூலம் தங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக தங்கள் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்கலாம் என்று கூறும் ஒரு போஸ்டர் வைரலானது.
இதற்குப் பதிலளித்த EPF, இது தவறான செய்தி என்று முகநூல் பக்கத்தில் ஒரு போஸ்டர் மூலம் பதிலளித்துள்ளது.