LPG கேஸ் மானியம் கிடைக்கலையா... முதலில் ‘இதை’ செய்யுங்க...!
வீட்டில் உட்கார்ந்து கொண்டே ஆன்லைனில் எளிதாக எல்பிஜி கேஸ் இணைப்பை ஆதாருடன் இணைக்கலாம். இதற்கு நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையை பின்பற்ற வேண்டும்.
எல்பிஜி எரிவாயு இணைப்புக்கான அரசு மானியத்தின் பலனைப் பெற, உங்கள் இணைப்புக்கு ஆதாருடன் இணைக்க வேண்டியது அவசியம். இதற்குப் பிறகுதான் எல்பிஜி மானியத்தின் பலனைப் பெற முடியும். உங்கள் எல்பிஜி இணைப்பு ஆதாருடன் இணைக்கப்படவில்லை. எனில், வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் செயல்முறை மூலம் எளிதாக இதனை இணைக்கலாம்.
எல்பிஜி எரிவாயு இணைப்பை ஆதாருடன் இணைப்பது எப்படி?
1. எல்பிஜி எரிவாயு இணைப்பை ஆதாருடன் இணைக்க, நீங்கள் முதலில் UIDAI இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
2. இதற்குப் பிறகு குடியுரிமை செல்ஃப் சீடிங் இணையப் பக்கத்தைப் பார்வையிடவும். இதற்குப் பிறகு, கோரப்பட்ட தகவலை இங்கே உள்ளிடவும்.
3. இங்கே பெனிஃபிட் வகையில் எல்பிஜியைத் (LPG Connection) தேர்ந்தெடுக்கவும். இதற்குப் பிறகு, IOCL, BPCL மற்றும் HPCL போன்ற எரிவாயு வழங்கும் நிறுவனங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
4. அதன் பிறகு விநியோகஸ்தர்கள் பட்டியல் வரும். இதிலிருந்து உங்கள் விநியோகஸ்தரின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
5. இப்போது உங்கள் எரிவாயு இணைப்பு எண், மொபைல் எண், ஆதார் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றை உள்ளிடவும்.
6. இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். இதை உள்ளிடவும்.
7. இப்போது உங்கள் ஆதார் எண் LPG இணைப்புடன் இணைக்கப்பட்ட்டிருக்கும்.
மேலும் படிக்க | LPG சிலிண்டருக்கும் காலாவதி தேதி உண்டு... கண்டுபிடிப்பது எப்படி!
1. எல்பிஜி இணைப்பு யாருடைய பெயரில் எடுக்கப்படுகிறதோ அந்த நபரின் ஆதாருடன் மட்டுமே இணைக்கப்படும்.
2. வங்கிக் கணக்கையும் ஆதாருடன் இணைக்க வேண்டும்.
3. உங்கள் மொபைல் எண் பக்கம் மற்றும் ஆதாரில் செயலில் இருக்க வேண்டும்.
4. எல்பிஜி இணைப்பின் பெயரும் ஆதார் பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும்.
எல்பிஜியை ஆஃப்லைனில் இணைப்பது எப்படி
ஆஃப்லைன் பயன்முறையில் எல்பிஜி இணைப்புடன் ஆதாரை இணைக்க, முதலில் விநியோகஸ்தர் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் படிவத்தை IOCL, HPCL மற்றும் BPCL ஆகிய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். இதற்குப் பிறகு நீங்கள் அதை உங்கள் விநியோகஸ்தரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இப்போது உங்கள் ஆதார் LPG உடன் இணைக்கப்படும்.
முன்னதாக, நவம்பர் 16 ஆம் தேதி முதல் நான்கு பெருநகரங்களில் 19 கிலோகிராம் கொண்ட வணிக ரீதியிலான எல்பிஜி விலையை சிலிண்டருக்கு 57.5 ரூபாய் வரை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் குறைத்துள்ளன. அரசு எண்ணெய் நிறுவனங்கள், நான்கு பெருநகரங்களில் 19 கிலோகிராம் கொண்ட சிலிண்டருக்கு 57.5 ரூபாய் வரை வர்த்தக எல்பிஜி விலையை குறைத்துள்ளன, இது நவம்பர் 16 வியாழன் முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த திருத்தம் வணிக ரீதியான சமையல் எரிவாயு பயன்படுத்துபவர்களுக்கு, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் போன்றவற்றுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. தீபாவளிக்கு முன்னதாக சிலிண்டருக்கு ரூ.101.5 உயர்த்தப்பட்டது. இருப்பினும், நிறுவனங்கள் வீட்டு பயன்பாட்டிற்கான எல்பிஜியின் விலையை ஏற்கனவே இருந்த நிலையிலேயே வைத்திருந்தன.
மேலும் படிக்க | Indian Railways: ரயில் பயணிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ‘6’ விதிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ