இந்திய ரயில்வே ஊழியர்களுக்கு கிடைத்துள்ள பரிசு என்ன தெரியுமா..!!!
இந்திய ரயில்வே தனது ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பிஎஃப் அட்வான்ஸ் பணம் பெறும் மற்றும் டிஜிட்டல் கட்டணம் செலுத்தும் வசதியை வழங்கியுள்ளது.
Indian Railway: இந்திய ரயில்வே எப்போதும் தனது பயணிகளுக்கும் அதன் ஊழியர்களுக்கும் சிறந்த வசதிகளை வழங்க முயற்சிக்கிறது. இந்த வகையில், இந்திய ரயில்வே வியாழக்கிழமை டிஜிட்டல் ஆன்லைன் மனித வள மேலாண்மை அமைப்பின் கீழ் மூன்று செயல்முறை வசதிகளை ( HRMS module) அதன் தற்போதைய மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்காக அறிமுகப்படுத்தியது.
எச்.ஆர்.எம்.எஸ் (HRMS) இன் கீழ், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் இப்போது ஆன்லைனில் பல பணிகளை முடிக்க முடியும். இதில் அவர்களின் வருங்கால வைப்பு நிதியில் (PF) உள்ள நிலுவைகளை சரிபார்க்கலாம், பி.எஃப் அட்வான்ஸ் பணம் பெற விண்ணப்பிக்கவும் முடியும்.
HRMS அமைப்பில் ( HRMS module) , பணியாளர் சுய சேவை (ESS), வருங்கால வைப்பு நிதி (PF) அட்வான்ஸ் மற்றும் செட்டில்மெண்ட் ஆகியவற்றின் கீழ் மூன்று மாட்யூல்கள் உள்ளன. இது தொடர்பாக, ரயில்வே அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த திட்டம் ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்க உதவும், அதே நேரத்தில் ஊழியர்கள் மனதில் திருப்தியும் இருக்கும். ரயில்வே வாரியத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வினோத் குமார் யாதவ், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான எச்ஆர்எம்எஸ் மாட்யூல் மற்றும் பயனர் டிப்போவை (User Depot) வீடியோ கான்பரன்சிங் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இது ரயில்வே (Railway) அமைப்பின் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்தும். இந்தியாவை டிஜிட்டல் முறையில் அதிகாரம் பெற்ற சமூகமாக மாற்றும் பிரதமர் மோடியின் தொலைநோக்கை உணர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும்.
பணியாளர் சுய சேவை (ESS) மாட்யூல் மூலம், ரயில்வே ஊழியர்களுக்கு தரவு பரிமாற்றம் உட்பட எச்ஆர்எம்எஸ்ஸின் பல்வேறு மாட்யூல்கள் தொடர்பான தகவல்களை பெற உதவுகிறது.
ALSO READ | Paytm பயன்படுத்தும் கடைக்காரர்களுக்கான Good News என்ன தெரியுமா... !!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR