மக்கள் இப்போது தான் மெதுவாக கூகுள் பே, போன் பே, பேடிஎம் என மூன்றாம் தரப்பு செயலிகளின் உதவியுடன் யுபிஐ பேமெண்ட் சிஸ்டத்தை பரவலாக பயன்படுத்த தொடங்கியிருக்கும் இந்த சூழலில் என்பிசிஐ புதிதாக எந்த செயலிகளின் உதவியும் இல்லாமல் விர்ச்ஷூவல் பேமெண்ட் மூலம் பணத்தை பாதுகாப்பாக அனுப்பும் அம்சத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது முழுமையாக பயன்பாட்டுக்கு வரும்போது கூகுள் பே, போன் பே போன்ற எந்த மூன்றாம் தரப்பு செயலிகளின் உதவியும் தேவைப்படாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | EPFO வட்டி மற்றும் வரவை வீட்டில் இருந்தே சரிபார்க்க வேண்டுமா? 4 ஈஸியான வழிமுறைகள்


UPI 'ப்ளக்-இன்' அம்சம் எவ்வாறு செயல்படுகிறது?


உதாரணமாக, ஒரு வாடிக்கையாளர் Swiggy செயலியை பயன்படுத்தி ஒரு உணவை நீங்கள் ஆர்டர் செய்கிறீர்கள். அப்போது ஆன்லைனில் பேமெண்ட் செய்ய நீங்கள் நினைத்தால் UPI கட்டணத்தைத் தேர்வு செய்வீர்கள். அது வாடிக்கையாளரை Google Pay அல்லது PhonePe போன்ற UPI பயன்பாட்டிற்கு அழைத்துச் செல்லும். அதில் நீங்கள் பணம் செலுத்தி, ஆர்டர் ஓகே ஆனதும் வாடிக்கையாளரை ஸ்விக்கிக்கு அழைத்துச் செல்கிறது. இதன்போது சிலர் நெட்வொர்க் பிரச்சனை உள்ளிட்ட காரணமாக பணம் செலுத்த முடியாமல் போகிறது. அதாவது பணப்பரிமாற்றம் தோல்வியடைகிறது.  இதனை போக்கவே இந்த புதிய அம்சம் வருகிறது. UPI பிளக் இன் அம்சம் என்பது குறிப்பிட்ட UPI பயன்பாட்டிற்குச் செல்லாமல் சொமோட்டோ, ஸ்விகி போன்ற ஆன்லைனில் ஆர்டர் செய்ய உதவும் செயலிகளிலேயே பணம் செலுத்த வழிவகை செய்கிறது. 


 பேமெண்ட் செயலிகளுக்கு சிக்கல்


இந்த நடைமுறை பரவலாகும்போது கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்படும். இது குறித்து போன்-பே இயக்குநர்களில் ஒருவர் பேசும்போது, யுபிஐ பிளக் இன் அம்சம் வெற்றி பெறாது என்றும், இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தவும், தொழில்நுட்பங்களில் மேம்பட்டவை அல்ல என்றும் கூறியுள்ளார். ஆனால், யுபிஐ பிளக் இன் அம்சம் வெற்றி பெற்றால் மார்க்கெட் ஷேரிங்கில் கூகுள் பே 47 விழுக்காடும், போன் பே 37 விழுக்காடும் கொண்டிருப்பது வெகுவாக குறைந்துவிடும் என யூகிக்கப்பட்டுள்ளது.  


அதாவது, Swiggy, Zomato, Flipkart, Myntra மற்றும் Dream 11 போன்ற பெரிய வணிகர்கள் இன்-லைன் அல்லது இன்-ஆப் பேமெண்ட்டுகளுக்கு மாறினால், அது Google Pay மற்றும் PhonePe க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று UPI ஐ இயக்கும் NPCI உடன் நெருக்கமாகப் பணிபுரியும் ஒரு மூத்த நிர்வாகி கூறுகிறார். அவரின் இந்த தகவல் முன்னணி பே மெண்ட் செயலிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 


கிட்டத்தட்ட 60% அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகளும் UPI ஐப் பயன்படுத்தி செய்யப்படுகின்றன. மேலும் இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் 75% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, யுபிஐ பிளக் இன் அம்சம் வெற்றி பெறும் என்று என்பிசிஐ அதிகாரி கூறியுள்ளார். 


மேலும் படிக்க | SBI RuPay கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் UPI-ல் பணம் செலுத்தலாம் - இதோ வழிமுறை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ