NPS விதிகளில் பெரிய மாற்றம்: இனி உங்கள் பணத்தை எடுக்க இந்த புதிய செயல்முறை அவசியம்!!
National Pension Scheme: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஓய்வூதியப் பணத்தை திரும்பப் பெறுவதற்கு பென்னி டிராப் சரிபார்ப்பை (Penny drop verification) கட்டாயமாக்கியுள்ளது.
National Pension Scheme: ஓய்வூதியப் பணத்தை திரும்பப் பெற விரும்புபவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. பணம் எடுக்கும் முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேசிய ஓய்வூதிய முறையின் (National Pension Scheme) கீழ் பணம் எடுப்பவர்களுக்கான விதிகளை அரசாங்கம் மாற்றியுள்ளது. இந்த மாற்றம் குறித்த தகவலை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) தெரிவித்துள்ளது.
பென்னி டிராப் சரிபார்ப்பு அவசியமானது
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஓய்வூதியப் பணத்தை திரும்பப் பெறுவதற்கு பென்னி டிராப் சரிபார்ப்பை (Penny drop verification) கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம் பணத்தை சரியான நேரத்தில் மாற்ற முடியும். இந்த புதிய விதி கணக்குகளின் உண்மையான நிலையை வெளிப்படுத்தும்.
தற்போது பணத்தை எடுக்க, கணக்குகளின் ஆக்டிவ் மற்றும் உண்மையான நிலை, மத்திய ஏஜென்சிகளால் சரிபார்க்கப்படுகிறது. மேலும், உறுப்பினரின் பெயர் PRAN (நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண்), வங்கி கணக்கு அல்லது ஆவணங்களுடன் பொருத்தப்பட்டு ஒப்பிடப்படுகின்றது. இந்த செயல்முறைகளுக்கு நேரம் எடுக்கும்.
பென்னி டிராப் முறை என்றால் என்ன?
இந்த புதிய விதியில், கணக்குகளின் செல்லுபடி நிலை, அதாவது வேலிடிட்டியை சரிபார்க்க, பென்னி டிராப் செயல்முறையின் அடிப்படையில் பயனாளியின் வங்கிக் கணக்கில் ஒரு சிறிய தொகையை டெபாசிட் செய்யப்படு பெயர் பொருத்தப்படுகிறது. இதில் மற்ற ஆவணங்களை பொருத்த தேவையில்லை. மேலும், இப்படிச் செய்வதன் மூலம், நேரம் மிச்சமாகும், மேலும் பரிவர்த்தனைகளும் வேகமாக நடக்கும்.
இந்த புதிய விதி ஓய்வூதியம் தொடர்பான அனைத்து பணம் எடுக்கும் செயல்முறைகளுக்கும் பொருந்தும்
அடல் பென்ஷன் யோஜனா, பென்ஷன் சிஸ்டம், என்பிஎஸ் லைட் போன்ற அனைத்து ஓய்வூதிய வைப்புகளிலிருந்து பணம் எடுக்கவும், அதாவது வித்ட்ரா செய்வதற்கும் இந்த விதி பொருந்தும். மேலும், ஓய்வூதியம் பெறும் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் விவரங்கள் மாறும்போதும் இதே நடைமுறை பின்பற்றப்படும். அதனால் சரிபார்ப்பதில், அதாவது வெரிஃபிகேஷன் செய்வதில் சிக்கல் இருக்காது.
CRA ஆல் பென்னி ட்ராப்பை உறுதிப்படுத்த முடியாவிட்டால், வாடிக்கையாளரின் வங்கிக் கணக்குத் தகவலை திரும்பப் பெறுதல் / திரும்பப் பெறுதல் அல்லது மாற்றுவதற்கான எந்த கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று ஓய்வூதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. காரணம் எதுவாக இருந்தாலும், பென்னி டிராப் சரிபார்ப்பு தோல்வியுற்றால், CRA ஆனது, உரிய வழிமுறைகளை பின்பற்றி வாடிக்கையாளரின் வங்கிக் கணக்குத் தகவலைத் திருத்துவதற்கு சம்பந்தப்பட்ட நோடல் அலுவலகம்/இடைத்தரகரிடம் இந்த பிரச்சனையை எடுத்துச்செல்லும்.
CRA வாடிக்கையாளருக்கு மொபைல் மற்றும் மின்னஞ்சல் மூலம் பென்னி டிராப் தோல்வி குறித்து தெரிவிக்கும். மேலும் நோடல் அதிகாரி அல்லது POP ஐ தொடர்பு கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தும்.
சரிபார்ப்பு தோல்விக்கான காரணங்கள்:
- தவறான கணக்கு வகை அல்லது கணக்கு எண்
- தேவையான விவரங்கள் புதுப்பிக்கப்படவில்லை என்றால்
- செயலற்ற அல்லது மூடப்பட்ட கணக்கு.
- பெயர் அல்லது பிற விவரங்கள் தவறாக இருந்தால்
- தவறான அல்லது செயலற்ற IFSC குறியீடு.
சரிபார்ப்பு தோல்வியுற்றால் என்ன நடக்கும்?
ஓய்வூதியதாரரின் பென்னி டிராப் சரிபார்ப்பு தோல்வியுற்றால், விவரங்களில் மாற்றம், என்பிஎஸ் (NPS) இலிருந்து பணத்தை எடுப்பது போன்ற எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது. இந்த நிலையில் நீங்கள் அனைத்து சரியான தகவல்களையும் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ