NPS Latest News: தேசிய ஓய்வூதிய அமைப்பின் பாதுகாப்பு செயல்முறையை மேம்படுத்த சமீபத்தில் PFRDA டூ ஃபேக்டர் அதெண்டிகேஷன் (2 Factor Authentication) அதாவது இரண்டு காரணி அங்கீகாரத்தை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய முறை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இதில் தற்போது என்பிஎஸ் சந்தாதாரர்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்த செயல்முறை செயல்படுத்தப்பட்டவுடன், வெறும் பாஸ்வர்ட் கொண்டு இனி என்பிஎஸ் கணக்கில் லாக் இன் செய்ய முடியாது. இது குறித்த விரைவான தகவல்களை இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெரிய மாற்றத்தை செய்த PFRDA


என்பிஎஸ் சந்தாதாரர்களின் (NPS Subscribers) நலனுக்காக PFRDA சமீபத்தில் ஒரு பெரிய முடிவை எடுத்தது. மத்திய பதிவு பராமரிப்பு முகமையை (CRA) அணுக டூ ஃபேக்டர் அதெண்டிகேஷனை கட்டாயமாக்கியது. CRA இல் லாக் இன் செய்வதற்கான இந்த விதி ஏப்ரல் 1, 2024 முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், CRA இன் பாதுகாப்பு முன்பை விட பன்மடங்கு அதிகரிக்கும். தேசிய ஓய்வூதிய அமைப்பு (National Pension Scheme) பணியாளர்களின் ஓய்வூதிய திட்டமிடலுக்கு உதவுகிறது. PFRDA அதன் கட்டுப்பாட்டாளர் அமைப்பாக உள்ளது. 


என்பிஎஸ் -இல் டூ ஃபேக்டர் அதெண்டிகேஷன் என்றால் என்ன? இதனால் இப்போது இருக்கும் செயல்முறையில் என்ன மாற்றம் ஏற்படும்? இதனால் என்ன நன்மைகள் கிடைக்கும்? இவை அனைத்தையும் பற்றி இங்கே காணலாம். 


Two-Factor Authentication: செயல்முறையின் பாதுகாப்பை அதிகரிக்கும்


ஏப்ரல் 1 முதல், NPS பயனர்கள் CRA ஐ அணுக ஆதார் அட்டை (Aadhaar Card) மூலம் லாக் இன் செய்ய வேண்டும். இதற்காக, சந்தாதாரர்களின் தற்போதைய ஐடி லாக் இன் செயல்முறையுடன் ஒருங்கிணைக்கப்படும். இந்த உள்நுழைவு செயல்முறையானது செயல்முறையை பாதுகாப்பானதாக்கும் முயற்சியின் ஒரு பகுதி என்று PFRDA நம்புகிறது. இது NPS கட்டமைப்பிற்கான அங்கீகரிக்கப்படாத அணுகலைக் குறைக்கும். மேலும் பாதுகாப்பு அபாயங்கள் கணிசமாகக் குறைக்கப்படும்.


மேலும் படிக்க | ஆண்களை Richman ஆக மாற்றும் சிறந்த சிறு தொழில்கள்! முதலீடு சிறிது-வருமானம் மிகப்பெரிது!


தற்போதுள்ள செயல்முறை என்ன? 


புதிய அமைப்பைத் தொடங்குவதற்கு முன், மத்திய பதிவேடுகள் ஏஜென்சிகள் (சிஆர்ஏக்கள்) விரிவான நிலையான இயக்க முறை (எஸ்ஓபி) மற்றும் செயல்முறை ஓட்டம் குறித்து அரசு நோடல் அலுவலகங்களுக்குத் தெரிவிக்கும். இந்த மாற்றத்தை நோடல் அதிகாரிகளுக்கு விளக்க பெரிய அளவிலான முயற்சி மேற்கொள்ளப்படும். தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீழ் உள்ள நோடல் அலுவலகங்கள் NPS பரிவர்த்தனைகளுக்கு கடவுச்சொல் அடிப்படையிலான உள்நுழைவைப் பயன்படுத்துகின்றன (Password Based Log In) என PFRDA சுற்றறிக்கை கூறுகிறது. 


தவறான பாஸ்வர்டை உள்ளிட்டால் கணக்கு லாக் செய்யப்படும்


ஆதார் மூலம் லாக் இன் அங்கீகரிக்கப்படும் போது, அரசு அலுவலகங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் அனைத்து NPS நடவடிக்கைகளும் பாதுகாப்பான சூழலில் செய்யப்படும் என்று PFRDA நம்புகிறது. பயனர் தொடர்ந்து ஐந்து முறை தவறான கடவுச்சொல்லை உள்ளிட்டால், அவரது கணக்கு லாக் செய்யப்படும். அதன் பின்னர் பின்னர் கணக்கை அணுக பயனர் தனது கடவுச்சொல்லை மீட்டமைக்க அதாவது ரீசெட் செய்ய வேண்டும். இதை செய்ய, அவர் ஐ-பின் கோர வேண்டும் அல்லது ரகசிய கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்.


மேலும் படிக்க | ITR Mismatch: வருமான வரித்துறையிலிருந்து நோட்டீஸ் உங்களுக்கும் வந்து விட்டதா? இதுதான் காரணம்... சரி செய்யும் செயல்முறை இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ