ITR Mismatch: வருமான வரித்துறையிலிருந்து நோட்டீஸ் உங்களுக்கும் வந்து விட்டதா? இதுதான் காரணம்... சரி செய்யும் செயல்முறை இதோ

ITR Mismatch Notice From Income Tax Dept: வரி செலுத்தும் பலவரது வருமான வரி அறிக்கையில் மிஸ்மேட்ச் அதாவது பொருத்தமின்மை இருப்பதாக வருமான வரித்துறை கண்டறிந்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 14, 2024, 04:58 PM IST
  • வரி செலுத்துவோர் அனைவரும் தங்கள் வருமானம் தொடர்பான தகவல்களை ரிட்டர்ன் தாக்கல் செய்யும் போது கொடுக்கிறார்கள்.
  • இந்தத் தகவல்கள் அனைத்தும் வரி செலுத்துவோரின் நிறுவனம் மற்றும் வங்கிகள் மூலமாகவும் வழங்கப்படுகின்றன.
  • இப்படி இரு தரப்பிலிருந்து ஒரே நபரின் தகவல்கள் பெறப்படுகின்றன.
ITR Mismatch: வருமான வரித்துறையிலிருந்து நோட்டீஸ் உங்களுக்கும் வந்து விட்டதா? இதுதான் காரணம்... சரி செய்யும் செயல்முறை இதோ title=

ITR Mismatch Notice From Income Tax Department: வருமான வரி செலுத்தும் தனி நபர்கள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்கிறார்கள். சிலர் தங்களது ஆடிட்டர்கள் மூலமாகவும், சிலர் தாமாகவும் இந்த அறிக்கையை தாக்கல் செய்கிறார்கள். ஐடிஆர் தாக்கல் செய்யும்போது அதிகப்படியான கவனத்துடன் செயல்பட வேண்டியது மிக அவசியமாகும்.

ஐடிஆர் தாக்கல் (ITR Filing) தொடர்பாக வருமான வரித்துறை அவ்வப்போது பல புதுப்பித்தல்களை வெளியிடுகின்றது. அனைவருக்கும் இவற்றை பற்றிய முழுமையான தகவல் இருக்க வேண்டும். இது தவிர, ஐடிஆர் தாக்கல் செய்யும் போது தேவையான ஆவணங்களை அருகிலேயே வைத்திருப்பது, டைப் செய்யும் போது தவறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது, தேதிகள், எண்கள், பெயர்கள் என இவற்றில் பிழைகளை தவிர்ப்பது என பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

வரி செலுத்தும் பலவரது வருமான வரி அறிக்கையில் மிஸ்மேட்ச் அதாவது பொருத்தமின்மை இருப்பதாக வருமான வரித்துறை கண்டறிந்துள்ளது. தர்ட் பார்ட்டி மூலம் கொடுக்கப்படும் தகவல்களுக்கும், வரி செலுத்துவோர் அளிக்கும் தகவல்களுக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதாக வருமான வரித்துறை தெரிவிக்கின்றது. இதன் காரணமாக, வருமான வரித்துறை வரி செலுத்துவோர் பலருக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறது. இது தொடர்பாக பல பயனர்களுக்கு குறுஞ்செய்தியும் வந்துள்ளது. ஆனால், இந்த குறுஞ்செய்திகள் வெறும் தகவல் மட்டுமே என்றும் இதை வருமான வரித்துறையின் நோட்டீசாக (Notice) கருத வேண்டாம் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வரி செலுத்துவோர் அனைவரும் தங்கள் வருமானம் தொடர்பான தகவல்களை ரிட்டர்ன் தாக்கல் செய்யும் போது கொடுக்கிறார்கள். இந்தத் தகவல்கள் அனைத்தும் வரி செலுத்துவோரின் நிறுவனம் மற்றும் வங்கிகள் மூலமாகவும் வழங்கப்படுகின்றன. இப்படி இரு தரப்பிலிருந்து ஒரே நபரின் தகவல்கள் பெறப்படுகின்றன. இதுபோன்ற சூழ்நிலைகளில், நிறுவனமும் வரி செலுத்துவோரும் கொடுக்கும் தகவல்கள் பல நேரங்களில் வேறுபடுகின்றன. இது தொடர்பான தகவல்கள் துறை சார்பில் தெரிவிக்கப்படுகின்றன. 

மேலும் படிக்க | கார் லோன் வாங்கும்போது இந்த 5 விஷயங்களை மறந்தும் செய்துவிடாதீர்கள்! தினமும் வருந்துவீர்கள்

இது குறித்த அறிவிப்பை பெற்றவுடன், வரி செலுத்துவோர் பொருந்தாத விவரங்களை சரி செய்யலாம். எனினும், மிஸ்மேட்ச் ஆகும் தகவல்களை வரி செலுத்துவோர் சரியான நேரத்திற்கு முன் சரி செய்யாவிட்டால், அவர்களுக்கு வருமான வரித்துறை வருமான வரி நோட்டீஸ் (Income Tax Notice) அனுப்பக்கூடும். 

மிஸ்மேட்ச் ஆகும் தகவல்களை வரி செலுத்துவோர் (Taxpayers) கண்டறிவதை எளிதாக்கும் வகையில், வருமான வரித்துறை இணையதளத்தில் 'இணக்க போர்டல்' (Compliance Portal) வசதியை வழங்கியுள்ளது. தாங்கள் தாக்கல் செய்த வருமான வரி ரிட்டனில் (Income Tax Return) உள்ள தகவல்கள் தவறாகவோ அல்லது தர்ட் பார்ட்டி தகவல்களிலிருந்து வேறுபட்டதாகவோ இருப்பதாக வரி செலுத்துவோர் உணர்ந்தால், அவர்கள் அதை உடனடியாக சரிசெய்யலாம்.

ஐடிஆர் மிஸ்மேட்ச் தகவலை சரி செய்வது எப்படி?

- முதலில் வரி செலுத்துவோர், வருமான வரித்துறையின் https://www.incometax.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

 - அடுத்தது இதில் லாக் இன் செய்ய வேண்டும்.

 - அதன் பிறகு E-Verification டேப்பில் செல்ல வேண்டும்.

 - பதிவு செய்யாதவர்கள் முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

 - பதிவு செய்த பிறகு, லாக் இன் செய்து, இணக்க போர்ட்டலுக்குள் செல்ல வேண்டும்.

  - இப்போது ஆன்-ஸ்க்ரீன் செலக்ட் செய்தவுடன், பொருந்தாத அதாவது மிஸ்மேட்ச் தகவல்கள் அனைத்தும் காண்பிக்கப்படும்.

 - இதன் பின்னர் தவறான தகவல்களைத் திருத்த வேண்டும்.

வரி செலுத்துவோருக்கு தாங்கள் தாக்கல் செய்த வருமான வரி அறிக்கையில் தவறுகள் இருக்கும் என்ற சிறு சந்தேகம் இருந்தாலும், உடனடியாக அதை செக் செய்து, தேவைப்பட்டால், திருத்தங்களை செய்வது நல்லது.

மேலும் படிக்க | SIP மூலம் லட்சக்கணக்கில் லாபம் ஈட்ட Tips & Tricks! மாசம் ஆயிரம் ரூபாய் போதும் ஜென்டில்மேன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News