eNPS Account: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான PFRDA NPS கணக்கைத் திறப்பதற்கான விதிகளில் பெரிய மாற்றத்தை செய்துள்ளது. இப்போது அரசு ஊழியர்கள் (Government Employees) eNPS மூலமும் தங்கள் NPS கணக்கைத் திறக்கலாம். eNPS இன் முழு செயல்முறையும் காகிதமற்ற செயல்முறையாகும். மேலும் இதை மிக எளிதாக செய்து முடிக்க முடியும். NPS என்பது ஒரு ஓய்வூதியத் திட்டம் (Pension Scheme) என்பது குறிப்பிடத்தக்கது. இது அரசு அமைப்பான PFRDA மூலம் நடத்தப்படுகிறது. அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

eNPS என்றால் என்ன? (What is eNPS?)


eNPS என்பது ஒரு டிஜிட்டல் தளமாகும். இதன் மூலம் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அரசு தொடர்பான நிறுவனங்களின் பணியாளர்கள் (Enps account for government employees) தங்கள் என்பிஎஸ் கணக்கைத் (NPS Account) திறக்கலாம். அரசு ஊழியர்கள் தங்கள் eNPS கணக்கை இரண்டு வழிகளில் திறக்கலாம். 


- முதல் வழி - ஆதார் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் KYC மூலம். 
- இரண்டாவது வழி - மற்ற KYC ஆவணங்களுடன் பான் கார்டு மூலம்.


மேலும் படிக்க | தபால் அலுவலகம் மூலம் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம்!


eNPS இன் நன்மைகள் என்ன? (What are the benefits of eNPS?)


- eNPS தளத்தின் பல நன்மைகளை பற்றி PFRDA கூறியுள்ளது.


- அரசு ஊழியர்களை சேர்ப்பது முன்பை விட இப்போதும் இன்னும் எளிதாக இருக்கும்.


- இதன் மூலம், நோடல் அலுவலரால் எளிதாக சரிபார்ப்பு (வெரிஃபிகேஷன்) செய்ய முடியும்.


- eNPS மூலம், நோடல் அலுவலரின் பணி எளிதாகி, காகிதம் இல்லாததால், இதற்கு தேவைப்படும் நேரமும் குறைவாகவே இருக்கும். 


- இதில் OTP மூலம் மட்டுமே பதிவு செய்ய முடியும்.


- டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக என்பிஎஸ் கணக்கைத் திறப்பதற்கான செலவு குறையும்.


- ஆன்லைன் செயல்முறையின் காரணமாக, PRAN சரியான நேரத்தில் உருவாக்கப்படும். இதன் காரணமாக, சரியான நேரத்தில் பங்களிப்பை உறுதிசெய்ய முடியும். இது அதிக வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.


- ஆன்லைன் செயல்முறை காரணமாக, கேன்சல் செய்யப்படுவதற்கான வாய்ப்பும் குறையும்.


- இது தளவாடச் செலவுகளைக் குறைக்கும். காகித படிவங்களாக இருந்தால், முதலில் அந்த படிவங்கள் என்பிஎஸ் சந்தாதாரரால் (NPS Subscriber) நோடல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. இதற்குப் பிறகு, நோடல் அதிகாரி அதை CRA-FC க்கு சமர்ப்பிக்கிறார். ஆனால், டிஜிட்டல் முறையில் இந்த செயல்முறைகளுக்கான நேரம் மிச்சமாகும்.


கூடுதல் தகவல்


சில நாட்களுக்கு முன்னர் NPS சந்தாதார்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி கிடைத்தது. ஓய்வூதிய நிதி கட்டுப்பாட்டாளரான பிஎஃப்ஆர்டிஏ (PFRDA) ஒரு புதிய வசதியை தொடக்கியது. என்பிஎஸ் -இல் முதலீடு செய்யும் சந்தாதாரர்கள் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) QR குறியீடு மூலம் முதலீடு செய்ய PFRDA அனுமதித்துள்ளது. PFRDA இன் அறிக்கையில், முதலீட்டு செயல்முறையை எளிதாக்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், என்பிஎஸ் கணக்குகளைத் திறக்கும் முதலீட்டாளர்களுக்கு இந்த அமைப்பு இன்னும் எளிதாகவும் சிறப்பாகவும் மாறிவிடும். NPS நீண்ட காலமாக தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்பும் மக்களுக்கு நம்பகமான சேமிப்புக் கருவியாக இருந்து வருகிறது. PFRDA இன் இந்த முயற்சி என்பிஎஸ் சந்தாதாரர்களுக்கு அவர்களின் ஓய்வூதிய சேமிப்புகளை கட்டுப்படுத்தவும், முறையான முதலீட்டுத் திட்டத்தின் மூலம் பயனடையவும் தேவையான வசதியையும் அதிகாரத்தையும் அளிக்கிறது என்று PFRDA கூறியுள்ளது. 


மேலும் படிக்க | NPS: இரட்டிப்பு லாபம் அளிக்கும் திட்டம்.... ஓய்வூதியத்துடன் பம்பர் வருமானமும் கிடைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ