National Pension System: வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வரும் செலவுகளை பற்றி கவலைப்படும் நபர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS) முதலீடு செய்யலாம். சிலர் மியூச்சுவல் ஃபண்டுகள் மூலமாகவோ அல்லது நேரடியாக முதலீடு செய்வதன் மூலமாகவோ பங்குச் சந்தையில் நல்ல வருமானத்தைப் பெறுகிறார்கள். பங்குச்சந்தை இன்று புதிய சாதனைகளை படைத்து வருகிறது. இந்த வேகம் இனிவரும் காலங்களிலும் தொடரும் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஆனால் பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய அனைவரும் தயாராக இல்லை. முதலீட்டைப் பற்றி உங்களுக்கும் குழப்பமும் அச்சமும் இருந்தால், NPS இல் முதலீடு செய்வது உங்கள் சரியான முடிவாக இருக்கும். இதில் முதலீடு செய்வதன் மூலம் இரட்டிப்பு பலன் கிடைக்கும். முதலாவதாக, நீங்கள் சிறந்த வருமானத்தைப் பெறுவதோடு, ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் (Pension) பெறும் வசதியையும் பெறுவீர்கள். இதைப் பற்றி இந்த பதிவில் விரிவாகக் காணலாம்.
75 சதவீதம் வரை பங்குகளில் முதலீடு செய்ய வசதி
23-24 நிதியாண்டில் பங்குச் சந்தை (Stock Market) சிறப்பாகச் செயல்பட்டதால் முதலீட்டாளர்கள் நல்ல லாபத்தைப் பெற்றுள்ளனர். பங்குச் சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சாதனை அளவை எட்டியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், என்பிஎஸ் மூலம் 75 சதவிகிதம் வரை பங்குகளில் (Equities) முதலீடு செய்யக்கூடிய திட்டத்தை நோக்கி முதலீட்டாளர்களின் விருப்பம் அதிகரித்துள்ளது. என்.பி.எஸ் மூலம் முதலீடு செய்வதால், பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் தொல்லையிலிருந்தும் விடுபடுவீர்கள். மேலும், ஓய்வுக்குப் பின் ஏற்படும் செலவுகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. பங்குச் சந்தையின் எழுச்சி காரணமாக, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) AUM யும் வேகமாக அதிகரித்துள்ளது.
NPS இல் ஆண்டுதோறும் 24% வரை சிறந்த வருமானம்
NPS இன் AUM ரூ.1.8 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் ஈக்விட்டி பங்குகளின் பங்கு 17 சதவீதமாக உள்ளது. முதலீட்டாளர்கள் ஆண்டுதோறும் 24% வரை சிறந்த வருமானத்தைப் பெற்றுள்ளனர். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) தலைவர் தீபக் மொஹந்தி, 'என்பிஎஸ் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, முதலீட்டாளர்கள் பங்குகளில் 13.3 சதவீத லாபத்தைப் பெற்றுள்ளனர். டயர்-2 இல் 100 சதவீதம் வரை பங்கு முதலீடு அனுமதிக்கப்படுகிறது. என்பிஎஸ் நிறுவனத்தில் அரசு ஊழியர்களுக்குப் பிறகு, தனியார் துறை சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது' என்று கூறினார். டிசம்பர் 2023க்குள், தனியார் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 51 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
NPS என்றால் என்ன?
தேசிய ஓய்வூதிய அமைப்பு (National Pension Scheme) என்பது இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும். ஓய்வுக்குப் (Retirement) பிறகு வழக்கமான வருமானத்திற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது 1 ஜனவரி 2004 அன்று அரசு ஊழியர்களுக்காக (Government Employees) தொடங்கப்பட்டது. ஆனால் பின்னர் 2009 இல் அனைத்து நாட்டு மக்களுக்கும் ஓய்வூதிய பலன்களை வழங்கும் நோக்கத்துடன் இது விரிவாக்கப்பட்டது. ஓய்வூதிய சீர்திருத்தங்களை ஊக்குவிப்பதும், ஓய்வூதியத்திற்காக சேமிக்கும் பழக்கத்தை நாட்டு மக்களிடையே மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும். 18 முதல் 70 வயதுக்குட்பட்ட சம்பளம் பெறும் வகுப்பினர் அல்லது சம்பளம் இல்லாத வகுப்பினர் (வணிக வகுப்பு) இதில் முதலீடு செய்யலாம்.
மேலும் படிக்க | Income Tax கட்டாமல் இருக்க ஈசி டிப்ஸ்: இப்படி செய்தால் வரியே கட்ட வேண்டாம்
NPS இன் நன்மைகள்
NPS இல் முதலீடு செய்வதன் மூலம் ஓய்வுக்குப் பிறகு வழக்கமான வருமானத்தைப் பெறலாம். இது தவிர, இதில் முதலீடு செய்வதன் மூலம் வரிச் சலுகைகளும் (Tax Benefits) கிடைக்கும். இந்த நன்மை முதலீடு மற்றும் திரும்பப் பெறுதல் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும். நீங்கள் NPS கணக்கை ஒரு நிறுவனம் அல்லது ஓய்வூதிய நிதியிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றலாம். இதுமட்டுமின்றி, முதலீட்டாளர் தனது ஓய்வூதியக் கணக்கில் தனது விருப்பப்படி முதலீட்டை அமைக்கலாம். NPS இல் முதலீடு செய்ய மூன்று விருப்பங்கள் உள்ளன-
பங்குகள் (Equities)
ஈக்விட்டி மூலம் NPS இல் முதலீடு செய்வது என்பது நீங்கள் பங்குகளில் முதலீடு செய்கிறீர்கள் என்று அர்த்தம். பங்குகளின் விலை சந்தையின் போக்குகளுக்கு ஏற்ப அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். எனவே, ஈக்விட்டியில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் சந்தை அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அரசு பத்திரங்கள் (Government Bonds)
அரசாங்கப் பத்திரங்கள் அரசாங்கத்தால் வழங்கப்படும் பத்திரங்கள். அவற்றின் வட்டி விகிதங்கள் பொதுவாக ஈக்விட்டியை விட குறைவாக இருக்கும். ஆனால் ஈக்விட்டியுடன் ஒப்பிடும்போது இதில் ஆபத்து குறைவு. நீங்கள் ஆபத்து இல்லாமல் முதலீடு செய்ய விரும்பினால், அரசாங்கப் பத்திரங்களில் உங்கள் பங்குகளை அதிகரிக்கலாம்.
கார்ப்பரேட் பத்திரம் (Corporate Bonds)
கார்ப்பரேட் பத்திரங்கள் நிறுவனங்களால் வழங்கப்படும் பத்திரங்கள். அற்றின் வட்டி விகிதங்கள் பொதுவாக அரசாங்கப் பத்திரங்களை விட அதிகமாக இருக்கும், ஆனால் அவை ஈக்விட்டியை விட அதிக ஆபத்தைக் கொண்டுள்ளன.
என்பிஎஸ் கணக்கை எப்படி திறப்பது (How to Open NPS Account)
என்பிஎஸ் கணக்குகளை பாயிண்ட் ஆஃப் பிரசன்ஸ் (PoP) நிறுவனங்களில் திறக்கலாம். பல தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் உட்பட பல நிதி நிறுவனங்களும் POP களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) இணையதளத்தின் மூலம் நீங்கள் POP ஐ அணுகலாம். eNPS இணையதளம் மூலமாகவும் நீங்கள் NPS கணக்கை (NPS Account) ஆன்லைனில் திறக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ