பழைய ஓய்வூதியத் திட்டம், சமீபத்திய செய்திகள்: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ஒவ்வொரு நாளும் பல வித செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. தற்போது, பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துவது குறித்து, நாட்டில் பல வித விவாதங்கள் நடந்துவருகின்றன. இதற்கிடையில் பழைய ஓய்வூதிய முறை குறித்தும், தேசிய ஓய்வூதிய முறையில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்தும் பல வித கருத்துகளும் புதுப்பிகளும் வந்தவண்னம் உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டின் பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், பல மாநிலங்களில் இன்றும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


ஆகஸ்ட் மாதத்திற்குள் பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யவும்


அனைத்து அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம் என்று கூறப்படுகின்றது. இந்த ஓய்வூதியத்தை ஆகஸ்ட் 31, 2023-க்குள் தேர்வு செய்ய அவர்களுக்கு அவகாசம் உள்ளது. இதனுடன், ஆகஸ்ட் 31 -க்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) தேர்வு செய்யாத தகுதியான ஊழியர்கள், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று அரசாங்கம் கூறியுள்ளது. .


மேலும் படிக்க | பழைய ஓய்வூதியத்தை தேர்ந்தெடுக்க இறுதி நாள் இதுதான்! காலக்கெடு நிர்ணயம் உண்மையா? 


இன்னும் பல மாநிலங்களில் இது அமல்படுத்தப்படும்.


சத்தீஸ்கரிலும் மாநில அரசும் இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இது தவிர, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 2004-ம் ஆண்டு மத்திய அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக தேசிய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கியது.


பழைய ஓய்வூதியத் திட்டத்தின் நன்மைகள் என்ன?


பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பற்றி பேசுகையில், அதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இது கடைசியாக வாங்கப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது. இது தவிர, பணவீக்க விகிதம் அதிகரிப்புடன், டிஏவும் அதிகரிக்கிறது. அரசு புதிய ஊதியக்குழுவை அமல்படுத்தினாலும், ஓய்வூதியத்தை உயர்த்துகிறது. ஆகையால் பழைய ஓய்வூதியத் திட்டதில் பல வித நன்மைகள் உள்ளன.


பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கை வலுத்துள்ளது. இதற்கிடையில் இந்த புதிய ஓய்வூதிய பயிற்சி முறையை மேம்படுத்த குழு ஒன்று அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் நான்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமலில் கொண்டுவந்த பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Old Pension திட்டம் குறித்து மிகப்பெரிய அறிவிப்பு, உடனடியாக இதை படியுங்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ