ஓய்வூதியத் திட்டம்: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து இன்று பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரும் தெலுங்கானா மாநில அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்கக் கோரி ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் பேரணியில் ஈடுபடவுள்ளனர். அரசிடம் இருந்து பதில் வரவில்லை என்றால், அக்டோபர் 1-ம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ஓய்வூதிய திட்டம்
இந்த நிலையில் இந்த முக்கிய முடிவானது தெலுங்கானா மாநில சிபிஎஸ் ஊழியர் சங்கத்தின் நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது, இதில் மாநிலத் தலைவர் ஜி. ஸ்தித்தபிரஜ்னா, பொருளாளர் நரேஷ் கவுர், பொதுச் செயலாளர் கே. ஸ்ரீகாந்த் மற்றும் 33 மாவட்டங்களின் தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். அதே நேரத்தில், தேசிய ஓய்வூதியத் திட்டத்தைச் சீர்திருத்த மத்திய அரசு ஒரு குழுவை அமைக்கும் என்று சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதற்கு பிரஜ்னா கண்டனம் தெரிவித்தார்.
மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்வுடன் அரியர் தொகையும் வரும்...மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!
ஓய்வூதியம்
இது குறித்து ஸ்திதபிரஜ்னா கூறுகையில், "பங்குச் சந்தைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால் CPS ஒரு ஆபத்தான திட்டமாகும். இது பணி ஓய்வுக்குப் பிறகு ஊழியர்களுக்கோ அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கோ எந்தவிதமான நிதிப் பாதுகாப்பையும் அளிக்காது, என்றார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பணப் பாய்ச்சலை உறுதி செய்யும் கருவியாக CPS மாறிவிட்டது. ஏற்கனவே தெலுங்கானா பங்குச் சந்தைகளுக்கு சுமார் 20,000 கோடி ரூபாய் CPSக்கு ஊழியர்களின் பங்களிப்பை அனுப்பியுள்ளது. இப்போது மாநில அரசு CPS-ஐ ரத்து செய்தால் 20,000 கோடி ரூபாய் கிடைக்கும், இது பொதுத் தேவைகளுக்குப் பயன்படும்.
ஓய்வூதிய அணிவகுப்பு
அதே நேரத்தில், பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக பல பேரணிகளும் நடைபெற்று வருகின்றது. அதன்படி தற்போது ஏப்ரல் 16 ஆம் தேதி 33 மாவட்டத் தலைமையகங்களிலும் 'ஓய்வூதிய அணிவகுப்பு' மற்றும் ஜூன் மாதம் 'ஓபிஎஸ் சங்கல்ப் பேருந்து யாத்திரை' நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ