பழைய ஓய்வூதிய திட்டம், சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்கள் பல மாதங்களாக அரசிடம் சில கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். 18 மாத டிஏ நிலுவைத் தொகை, புதிய ஊதியக்குழு, பழைய ஓய்வூதிய திட்டம் ஆகியவை அவர்களின் கோரிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மத்திய அரசு ஊழியர்களை தவிர பல மாநில அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள். சமீபகாலமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து நாடு முழுவதும் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக பல போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. பல மாநில  அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி விட்டன. காங்கிரஸ் ஆளும் பல மாநிலங்களில் ஓபிஎஸ் அமல்படுத்தப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் தாமி அரசு தனது ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1, 2005க்கு முன் வெளியான விளம்பரத்தின் கீழ் பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் நன்மைகள் கிடைக்கும். 6200 ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 15ம் தேதி வரை ஆப்ஷனுக்கான வாய்ப்பு இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்


ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்க உத்தரகாண்ட் அமைச்சரவை முடிவு செய்தது. அக்டோபர் 1, 2005 -க்குள் வெளிவந்த விளம்பரத்தின் கீழ் பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், உத்தரகாண்டில் மொத்தம் 6200 பணியாளர்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விளம்பரங்கள் முன்னதாக வெளியிடப்பட்டு,  ஆனால் அவர்களின் நியமனம் அக்டோபர் 1, 2005 க்குப் பிறகு நடந்தது.  


மேலும் படிக்க | வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளித்த புதிய வழிகாட்டுதல்: ஐடி நிர்வாகத்தில் இனி அதிரடி மாற்றம்


அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து, அதற்கான அறிவிப்பு தற்போது அரசால் வெளியிடப்பட்டுள்ளது. நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர் ஆனந்த் வர்தன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இருந்து, மேற்கூறிய படி நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. பிப்ரவரி 15ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


அதற்கான படிவமும் அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பணி நியமனம், ஊதிய விகிதங்கள், துறையின் பெயர், வெளியிடப்பட்ட துறையின் பெயர், விடுவிக்கப்பட்ட தேதி, துறையில் பணி நியமனம் செய்யப்பட்ட தேதி, துறையில் பங்களிப்பு தேதி, ஓய்வு பெற்ற தேதி உள்ளிட்ட தகவல்களை அளிக்க வெண்டும். பழைய ஓய்வூதியம் பெறுவதற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் ஊழியர்களுக்கு தேவையான உத்தரவுகள் வழங்கப்படும். இதற்குப் பிறகு, அவர்களது தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கணக்கு உத்தரவு வெளியான நாளிலிருந்து மூடப்படும்.


தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS)


1. NPSல், பணியாளரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.


2. தேசிய ஓய்வூதியத் திட்டம் பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. எனவே இது ஒப்பீட்டளவில் குறைவான பாதுகாப்பு கொண்டதாகக் கருதப்படுகிறது.


3. இதன் கீழ், ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் பெற NPS நிதியில் 40% முதலீடு செய்ய வேண்டும்.


4. இந்தத் திட்டத்தில் ஓய்வுக்குப் பிறகு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் இல்லை.


5. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி வழங்கப்படுவதில்லை.


மேலும் படிக்க | அடி தூள்...ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் அதிரடி உயர்வு: அசத்தும் அடுத்த ஊதியக்கமிஷன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ