உலக சந்தையில் பல இணையதளங்கள் மூலம் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில பழைய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இல்லை என்றாலும், அதற்கான மதிப்பு அதிகமாக இருக்கும். உண்மையை சொன்னால், குறிப்பிட்ட ரூபாய் நோட்டின் அசல் மதிப்பை விட, பல மடங்கு அதிக மதிப்பு, பழைய நாணயம், பழைய ரூபாய் நோட்டுகளுக்கு கிடைக்கின்றன. அதேசமயம், எல்லாவகையான நாணயங்கள், ரூபாய் நோட்டுக்களுக்கும் இது பொருந்தாது. குறிப்பிட்ட ஒரு சில அடையாளங்களுடன் கூடிய பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகளுக்கு நல்ல பணம் கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லண்டனில் நடைபெற்ற  பிரத்யேக ஏலம்


சமீபத்தில் இந்திய ரூபாய் நோட்டு ஏலம் மூலம் லட்சக்கணக்கில் பணம் கிடைத்துள்ளது. லண்டனில் நடைபெற்ற  பிரத்யேக ஏலத்தில் இந்திய ரூபாய் 100 நோட்டு பேசு பொருளாக இருந்தது. இந்த ரூபாய் நோட்டு சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. ஏலத்தில் குறிப்பிட்ட 100 ரூபாய் நோட்டு ரூ.56,49,650 என்ற விலைக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது சாதாரண நோட்டு அல்ல. 1950 களில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வழங்கிய 'ஹஜ் நோட்டு'. அதன் வரிசை எண் HA 078400. குறிப்பாக ஹஜ் யாத்திரைக்காக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் யாத்ரீகர்களுக்காக இந்த ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக தங்கம் வாங்குவதை தடுக்கும் நோக்கில் இது அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


ஹஜ் பயணத்திற்காக பிரத்யேகமாக வழங்கப்பட்ட ரூபாய் நோட்டு


ஹஜ் ரூபாய் நோட்டு 'HA' என்ற தனித்துவமான அடையாளத்துடன்  மற்ற ரூபாய் நோட்டில் இருந்து வேறுபட்டதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நோட்டுகள் இந்திய நாணயத்தின் வழக்கமான 100 ரூபாய் நோட்டுகளிலிருந்து வேறுபட்ட நிறத்தில் இருந்தன. இந்த நோட்டுகள் இந்தியாவில் செல்லாது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹஜ் பயணத்திற்காக பிரத்யேகமாக வழங்கப்பட்ட இந்த 100 ரூபாய் நோட்டு, UAE, கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமன் போன்ற வளைகுடா நாடுகளில் பயன்படுத்த முடியும் என்பது சிறப்பு. 1961 ஆம் ஆண்டில் குவைத் தனது சொந்த நாணயத்தை வெளியிட்ட பிறகு, 1970 களில் இந்த நோட்டுகள் புழக்கத்தில் இல்லை, மற்ற வளைகுடா நாடுகளும் அவ்வாறு செய்தன.



100 ரூபாய் நோட்டின்  சிறப்பு


இன்று, இந்த ஹஜ் நோட்டுகள் மிக அரிதாக உள்ள நிலையில், பழைய நாணயம் மற்றும் ரூபாய் நோட்டு சேகரிப்பாளர்களிடையே இதனை வாங்கும் ஆர்வம் அதிகரித்தது. இந்த வரலாற்று முக்கியத்துவம் காரணமாக, இந்த அரிய ரூபாய் நோட்டுக்கள் நல்ல விலைக்கு ஏலம் போகின்றன., கலாச்சார மற்றும் வரலாற்றுக் கண்ணோட்டத்திலும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.


மேலும் படிக்க | SIP: பணம் காய்க்கும் மரமாகும் பரஸ்பர நிதியம்... ஓய்வு காலத்தில் கோடிகளில் புரளலாம்...


786 எண் கொண்ட ரூபாய் நோட்டு


பொதுவாக வரிசை எண் 786 எண் கொண்ட ரூபாய் நோட்டும் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இஸ்லாமிய சமுதாயத்தில் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான அடையாளமாக கருதப்படுவதால், அதை வாங்க பலர் ஆர்வமாக உள்ளனர். 786 எண் உள்ள நோட்டுகள் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்பதால், பலர் அதை வாங்கி வீட்டில் வைத்திருக்க விரும்புகிறார்கள். ஏனெனில் இது மிகவும் கருதப்படுகிறது.


ரூ.6.90 லட்சத்துக்கு விற்ற அரிய ரூ.10 நோட்டு


லண்டனில் நடந்த ஏலத்தில், இரண்டு அரிய ரூபாய் 10 நோட்டுகளும் விற்கப்பட்டன. அதில் ஒன்று ரூ.6.90 லட்சத்திற்கும் மற்றொன்று ரூ.5.80 லட்சத்திற்கும் விற்கப்பட்டது. இந்த ரூபாய் நோட்டுகள் 2018, மே 25ம் தேதி வெளியிடப்பட்டவை. அதோடு, இவை முதல் உலகப் போரின் கடைசி ஆண்டுகளுடன் தொடர்புடையது. வரலாற்று முக்கியத்துவம் பிரிட்டிஷ் கப்பலான எஸ்எஸ் ஷிராலா என்ற கப்பலுக்கு தொடர்புடைய நோட்டுக்கள் இவை. ஜூலை 2, 1918 அன்று ஜெர்மன் U-படகு மூலம் டார்பிடோ தாக்குதலில் மூழ்கிய  ஷிராலா கப்பல் சிதைந்தது.  ஏலத்தில் வரலாற்றில் ஆர்வமுள்ளவர்களின் கவனத்தை 10 ரூபாய் நோட்டு ஈர்த்தது.


மேலும் படிக்க |  மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ்! வருகிறதா 8வது ஊதியக்குழு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ