மியூச்சுவல் ஃபண்டுகள் சாமனிய மக்களுக்கான ஒரு பிரபலமான முதலீட்டு விருப்பமாக உள்ளது. சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் அதாவது எஸ்ஐபி மூலம் இதில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பரஸ்பர நிதிய முதலீடுகள் மூலம் வருவாய் மிக சிறப்பாக உள்ளதன் காரணமாக முதலீட்டாளர்கள் பலர் அதை நோக்கி அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். அதிக வருமானம் பெற விரும்புபவர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் SIP முறையில் முதலீடு செய்கிறார்கள்.
பணம் காய்க்கும் மரத்தை போல செயல்படும் SIP முதலீடு
நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும் தொடர் வைப்புத்தொகை (RD) போன்ற பாரம்பரிய சேமிப்பு திட்டங்களில் கிடைக்கும் வருமானத்தை விட பரஸ்பர நிதியம் ஒரு பணம் காய்க்கும் மரத்தை போல கணிசமான வருமானத்தை அள்ளிக் கொடுக்கிறது. ஏனெனில், இதில் வருமானம் அதிகமாக கிடைப்பதோடு, கூட்டு வட்டி வருமானத்தின் பலனை முதலீட்டாளர்கள் பெறுகிறார்கள். இதன் காரணமாக பலர் பரஸ்பர நிதிகள் மீதான முதலீட்டில் மீது அதிகம் நம்பிக்கை வைக்க தொடங்கியுள்ளனர்.
முதலீட்டை எளிதாக்கிய SIP
SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சரியானது என்று நம்புபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் சாட்சியமளிக்கின்றன. தற்போதைய சவாலான பொருளாதார சூழலில் மியூச்சுவல் ஃபண்டுகள் நம்பிக்கையின் கதிராக மாறியுள்ளன. அவை பல்வகைப்படுத்தல், தொழில்முறை மேலாண்மை மற்றும் அதிக வருமானத்திற்கான சாத்தியத்தை வழங்குகின்றன. குறிப்பாக, SIP மூலம் முதலீடு செய்யும் வசதி, மியூச்சுவல் ஃபண்டுகளில் பணத்தை முதலீடு செய்வதை எளிதாக்கியுள்ளது.
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை
Bankbazaar.com இணைய தளத்தில் வெளியான சமீபத்திய ‘Moneymood 2025’ அறிக்கையில், 2024 மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பரஸ்பர நிதி முதலீட்டு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும் முதலீட்டாளர்களின் சதவீதம் 2023ம் ஆண்டில் 54% என்ற அளவில் இருந்து 2024ம் ஆண்டில் 62% என்ற அளவாக அதிகரித்துள்ளது. பாரம்பரிய முறையிலான சேமிப்பு திட்டங்களுக்கு மாற்றாக பரஸ்பர நிதிகளில் மீது நம்பிக்கையை பெற்றுள்ளதை இந்த புள்ளிவிவரங்கள் பிரதிபலிக்கின்றன.
பரஸ்பர நிதிகள் மீதான மக்களின் நம்பிக்கை
மியூச்சுவல் ஃபண்ட் SIP களில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் 2022ம் ஆண்டில் 57% என்ற அளவில் இருந்தனர், இந்த எண்ணிக்கை 2023ம் ஆண்டில் 54% என்ற அளவிலும், கடந்த ஆண்டு 62% என்ற அளவிலும் அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் FD மற்றும் RD முதலீடு செய்தவர்களின் எண்ணிக்கை 57% என்ற அளவிலும், PF மற்றும் தபால் அலுவலகத் திட்ட முதலீடுகள் 41% என்ற அளவிலும், நேரடி பங்குச் சந்தை முதலீடுகள் 40% என்ற அளவிலும், ஆயுள் காப்பீட்டில் 37% என்ற அளவிலும், தங்கத்தின் மீதான 30% என்ற அளவிலும், கிரிப்டோகரன்சி முதலீடு 12% என்ற அளவிலும் உள்ளது. பரஸ்பர நிதிகள் மீதான மக்களின் நம்பிக்கை வேகமாக அதிகரித்து வருவதை இது தெளிவாக்குகிறது.
தங்கத்தின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் குறைந்துள்ளது
பரஸ்பர நிதிகளின் மீதான முதலீடு அதிகரித்துள்ள நிலையில், மற்ற முதலீட்டு விருப்பங்களில் மீதான மக்களின் ஆர்வம் குறைந்துள்ளது. நிலையான வைப்புத்தொகை, தொடர் வைப்புத்தொகை மற்றும் அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. நேரடி பங்குச் சந்தை முதலீடுகள் கூட குறைந்துள்ளன. ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள், குறிப்பாக எண்டோவ்மென்ட் திட்டங்கள் மற்றும் ULIP திட்டங்களும் சரிவைக் கண்டுள்ளன. ஏனெனில் முதலீட்டாளர்கள் அதிக வெளிப்படையான மற்றும் அதிக வருவாய் தரும் முதலீடுகள் நோக்கி நகர்கின்றனர். பாரம்பரியமாக பாதுகாப்பான முதலீடு எனப்படும் தங்கத்தின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் கூட குறைந்துள்ளது.
முக்கிய குறிப்பு
பரஸ்பர நிதி முதலீட்டாளர்களை பணக்காரர்களாக ஆக்கியுள்ளது என்றாலும், எப்போதும் சிறந்த வருமானம் கிடைக்கும் என்ற உத்தரவாதம் அல்ல என்பதை முதலீட்டாளர்கள் மனதில் கொள்ள வேண்டும். மியூச்சுவல் ஃபண்டுகளில், குறிப்பாக ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வதில் நிறைய ரிஸ்க் உள்ளது. நீங்கள் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்ய விரும்பினால், இது தொடர்பாக உங்கள் நிதி ஆலோசகர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
மேலும் படிக்க | EPFO: ரூ.2.5 கோடி நிதி கார்பஸை உருவாக்க உதவும் PF கணக்கு முதலீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ