Online Banking Fraud: வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் SBI-PNB-ICICI BANK!
எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி (SBI, PNB, ICICI BANK) உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் இது குறித்து தங்கள் வாடிக்கையாளர்களை எச்சரிக்கின்றன.
Online Banking Fraud: கொரோனா காலத்தில், கடந்த ஆண்டு ஆன்லைன் வங்கி மோசடி (Online Banking Fraud) அல்லது ஆன்லைன் நிதி மோசடி வழக்குகளில் மிகப்பெரிய அதிகரிப்பு இருந்தது. இத்தகைய சூழ்நிலையில், மோசடி செய்யும் நபர்கள் இந்த வேலையை மீண்டும் செய்ய துவங்கியுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு, எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி (SBI, PNB, ICICI BANK) உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் இது குறித்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
எஸ்பிஐ வாடிக்கையாளர்களை எச்சரித்தது (SBI alerts customers)
நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. எந்த சூழ்நிலையிலும் QR Code ஐ ஸ்கேன் செய்ய வேண்டாம் என்று SBI எச்சரித்துள்ளது.
பி.என்.பி இந்த விஷயத்தை கூறியது (PNB advice on online fraud)
இதேபோல், பொதுத்துறையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வாடிக்கையாளர்களை யாராவது உங்களை அழைக்க முயன்றால் அல்லது உங்களை வேறு வழியில் தவறாக வழிநடத்த முயற்சித்தால், அதில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று எச்சரித்து உள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உதவிக்குறிப்புகளை வழங்கியது (ICICI Bank gave tips)
தனியார் துறையின் முன்னணி வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ICICI Bank) வாடிக்கையாளர்களிடம் வங்கி அல்லது எந்தவொரு நிதி தகவலையும் யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR