பான் கார்டு என்பது நிதி பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படும் ஒரு ஆவணமாகும். வங்கிக் கணக்கைத் திறப்பது முதல் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது வரை, பான் கார்டு அனைத்துக்கும் தேவைப்படும் ஆவணமாக இருக்கிறது. இது KYC ஆகவும் செயல்படுகிறது. பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்யவோ, தங்கம் வாங்கவோ அல்லது அரசாங்கத் திட்டத்தில் பயன்படுத்தவோ, சட்டப்பூர்வ அடையாள அட்டையாக பான் கார்டு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆதார் உருவாக்கப்பட்ட பிறகும், உங்கள் நிதி வரலாற்றைக் கண்காணிக்கும் வகையில், அதனுடன் பான் கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், பான் கார்டுக்கு ஏதேனும் காலாவதி உள்ளதா? பான் கார்டு எத்தனை நாட்களுக்கு முறையான ஆவணமாக (வேலிட் டாகுமெண்ட்) வேலை செய்கிறது? பான் கார்டின் செல்லுபடி பற்றி இன்னும் உங்களுக்க் தெளிவான புரிதல் இல்லை என்றால், இந்த பதிவில் அதை தெரிந்துகொள்ளலாம். பான் கார்டு எவ்வளவு காலம் செல்லுபடியாகும் என்பதையும் இந்த ஆவணம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதையும் இங்கே காணலாம். 


பான் கார்டை வழங்குவது யார்?


NSDL (National Securities Depository Limited) மூலம் பான் கார்டு வழங்கப்படுகிறது. பான் கார்டு சட்டப்பூர்வ ஆவணம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் அது உங்களின் அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் கண்காணிக்கும் ஆவணமாக உள்ளது. வரி ஏய்ப்பைத் தடுக்கவும் பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், அதன் செல்லுபடியாகும் தன்மையை, அதாவது எத்தனை நாட்களுக்கு அது செல்லுபடியாகும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது முக்கியமாகும்.


ஆவணம் வாழ்நாள் செல்லுபடியுடன் வருகிறது


பான் கார்டின் செல்லுபடியாகும் காலம் வாழ்நாள் வரை இருக்கும். ஒரு நபரின் மரணத்திற்குப் பிறகுதான் அவரது பான் கார்டை ரத்து செய்ய முடியும். அல்லது இறப்புச் சான்றிதழின் உதவியுடன் தேவையான அனைத்து இடங்களிலும் KYC புதுப்பிக்கப்படும். ஒருவர் இறந்த பிறகுதான் பான் கார்டு காலாவதியாகிறது. பான் கார்டு வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். 


பான் கார்டு 10 இலக்க எண்ணெழுத்து எண்ணைக் கொண்டுள்ளது. பான் கார்டில் யாருடைய பான் எண் இருக்கிறதோ அந்த நபரின் தகவல் இருக்கும். சட்டப்படி ஒருவர் தன்னிடம் ஒரு பான் கார்டை மட்டுமே வைத்திருக்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருந்தால் அபராதம் விதிக்கும் விதிமுறை உள்ளது.


ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண்ணை வைத்திருப்பது சட்டவிரோதமானது


வருமான வரி விதிகளின்படி, யாரேனும் ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண்ணை வைத்திருந்தால், அது சட்ட விரோதமானது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படக்கூடும். வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 272B இன் விதிகளின் கீழ், ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருந்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண்கள் இருந்தால், அதை நீங்கள் ஒப்படைத்து விடலாம். நீங்கள் பான் கார்டை ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் சரண்டர் செய்யலாம். 


பான் கார்டை பெறுவது எப்படி?


வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பான் கார்டை பெறலாம். இதற்கு முதலில், இ-ஃபைலிங் போர்ட்டலுக்குச் சென்று 'Instant PAN through Aadhaar' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு 'Get New PAN' என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களிடம் ஆதார் எண் கேட்கப்படும். பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். OTP சரிபார்ப்பு முடிந்ததும், உங்களுக்கு e-PAN வழங்கப்படும். உங்கள் பிசிக்கல் பான் அட்டையையும் நீங்கள் ஆர்டர் செய்துகொள்ளலாம். 


மேலும் படிக்க | அக்டோபர் 1 முதல் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விதிகளில் மாற்றம்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ