ஆன்லைன் கட்டண தளமான Paytm பங்குச்சந்தையில் மிகவும் மோசமான தொடக்கத்தை ஏற்படுத்தியது. PayTM Postpaid திட்டம் விலக்கல் காரணமாக அதன் பங்கு விலை இன்று 20% சரிந்துள்ளது. பங்கு சந்தை தொடங்கிய உடன், Paytm இன் தாய் நிறுவனமான One97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் பங்குகள் 20 சதவிகிதம் சரிந்தது. Paytmக்கு இந்த அதிர்ச்சி ஏற்பட்டதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலில் Paytm பங்குகளின் வீழ்ச்சியைப் பற்றி பேசலாம். வியாழன் அன்று, இரண்டு பங்குச் சந்தை குறியீடுகளும் குறையும் நிலையில் தான் வர்த்தகத்தைத் தொடங்கின. சில நிமிடங்களில், சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது, நிஃப்டியும் 70 புள்ளிகளுக்கு மேல் சரிவைக் கண்டது. இந்த வீழ்ச்சியின் மத்தியில், ஃபின்டெக் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் பங்குகள் காலை 9.23 மணியளவில் 20 சதவீதம் சரிந்து ரூ.645.45 என்ற நிலைக்குச் சென்றது.  பங்குச் சந்தையுடன் சேர்ந்து Paytm பங்கும் சரிந்தது. Paytm பங்குகள் காலை 9.15 மணிக்கு ரூ.728.85 அளவில் திறக்கப்பட்டது. ஆனால், பின்னர் 18.22 சதவீதம் சரிவுடன் 666.60 என்ற அளவில் வர்த்தகமாகி வந்தது. 20 நிமிட வர்த்தகத்தின் போது பங்கு ரூ.650.65 என்ற குறைந்த அளவையும் தொட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Paytm பங்குகள் வீழ்ச்சிக்கு முதல் காரணம்


பேடிஎம் நிறுவனப் பங்குகள் பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது முதலீட்டாளர்களின் பதற்றத்தை அதிகரித்துள்ளது. Paytm பங்குகள் குறைவதற்கான காரணம் சிறிய போஸ்ட்பெய்ட் கடன்களை குறைக்கும் திட்டம் தான் கூறப்படுகிறது.  சிறிய அளவிலான போஸ்ட்பெய்ட் கடன்களைக் குறைத்து, பெரிய அளவிலான தனிநபர் கடன்கள் மற்றும் வணிகக் கடன்களை அதிகரிக்கும் திட்டம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தரகு முதலாளிகளுக்கு நிறுவனத்தின் இந்தத் திட்டம் பிடிக்காமல், நிறுவனத்தின் வருவாய் மதிப்பீட்டைக் குறைத்து விட்டனர். இதற்கிடையில், Paytm பங்குகளின் இலக்கு விலையையும் Jefferies குறைத்துள்ளது. இது முதலீட்டாளர்களின் உணர்வை பாதித்து, பங்குகளில் இவ்வளவு பெரிய வீழ்ச்சி காணப்பட்டது.


மேலும் படிக்க | EPFO Online Claim நிராகரிக்கப்படுவதை தவிர்ப்பது எப்படி? இவற்றில் கவனம் செலுத்தினால் போதும்


பங்குச்சந்தையின் முக்கிய முதலீட்டாளரின் விலகல்


சிறிய போஸ்ட்பெய்டு கடன்களை குறைக்கும் திட்டம் தவிர, இந்நிறுவனத்தின் பங்குகள் சரிவடைந்ததற்கு மற்றுமொரு முக்கிய காரணம் என்று பார்த்தால், உலகின் முன்னணி முதலீட்டாளரான வாரன் பஃபெட் (Warren Buffett) நிறுவனத்தை விட்டு வெளியேறியதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கருதலாம். இதனால் முதலீட்டாளர்களின் உணர்வுகளில், அது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. Paytm பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகும் பெரும் சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.


வாரன் பஃபெட்டின் நிறுவனத்துக்கு ரூ.600 கோடி நஷ்டம்


நவம்பர் 2021 முதல் அதன் பங்குகள் 42 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளன, மேலும் இந்த வீழ்ச்சி வியாழக்கிழமை மேலும் அதிகரித்தது. வாரன் பஃபெட்டின் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனம், ஃபின்டெக் நிறுவனமான Paytm நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் திறந்த சந்தை மூலம் ரூ.1,370 கோடிக்கு விற்றுள்ளது. இதில் வாரன் பஃபெட்டின் நிறுவனத்துக்கு ரூ.600 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.


(குறிப்பு - பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன், கண்டிப்பாக உங்கள் சந்தை நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும்.)


மேலும் படிக்க | ரிசர்வ் வங்கியின் புதிய ATM விதி: பணம் எடுக்கும்போது இதில் கவனம் தேவை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ