Personal Finance: SBI Annuity திட்டத்தில் மாத வருவாய் எவ்வளவு தெரியுமா?
ஸ்பிஐ வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்தால், மாதந்தோறும் நல்ல வருமானம் கிடைக்கும். வருமானம் என்பதே ஒருவரின் வாழ்க்கையின் அடிப்படை என்பதால், ஒவ்வொரு நபரும் தனது வருவாயை அதிகரிக்க விரும்புகிறார். உங்கள் வருமானத்தை அதிகரிக்க நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், நிலையான வருமானத்திற்கான சிறந்த ஒரு திட்டத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்வதன் மூலம் சம்பாதிக்கலாம்.
Personal Finance: ஸ்பிஐ வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்தால், மாதந்தோறும் நல்ல வருமானம் கிடைக்கும். வருமானம் என்பதே ஒருவரின் வாழ்க்கையின் அடிப்படை என்பதால், ஒவ்வொரு நபரும் தனது வருவாயை அதிகரிக்க விரும்புகிறார். உங்கள் வருமானத்தை அதிகரிக்க நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், நிலையான வருமானத்திற்கான சிறந்த ஒரு திட்டத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்வதன் மூலம் சம்பாதிக்கலாம்.
நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, மக்களுக்கு பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது. முதலீடு செய்வதற்காக SBI Annuity Scheme என்ற மிகச் சிறந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ், ஒரு முறை முதலீடு செய்வதன் மூலம் மாத வருமானத்தை பெறலாம்.
இந்த திட்டத்தில், மாதந்தோறும் குறைந்தபட்சம் 1000 ரூபாய் டெபாசிட் செய்யலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு எந்தவித வரம்பும் இல்லை. இந்தத் திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கான வட்டியும் சேர்த்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வருமானம் வரத் தொடங்கும்.
Also Read | புத்தராக அவதாரம் எடுத்திருக்கும் Donald Trump ‘சிலைகள்’ஆன்லைனில் Trending
எஸ்பிஐயின் இந்த திட்டத்தை 36, 60, 84 அல்லது 120 மாத காலத்திற்கு முதலீடு செய்யலாம். இதில், வட்டி விகிதம் ஒரே மாதிரியாக இருக்கும், இது தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தின் டெபாசிட்டிற்கான காலமாகும். நீங்கள் 5 வருடங்களுக்கு தொகையை டெபாசிட் செய்தால், 5 வருட நிலையான வைப்புத்தொகைக்கு பொருந்தக்கூடிய வட்டி விகிதத்திற்கு ஏற்ப வட்டி கிடைக்கும்.
எஸ்பிஐயின் அனைத்து கிளைகளிலிருந்தும் இந்த annuity திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
- Annuity திட்டத்தில், ஒரே முறை வைப்புத்தொகையாக முதலீடு செய்தால், குறைந்தது 25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.
-எஸ்பிஐ ஊழியர்கள் மற்றும் முன்னாள் ஊழியர்களுக்கு 1 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கும்.
- மூத்த குடிமக்களுக்கு 0.5 சதவீதம் கூடுதல் வட்டி வழங்கப்படும்.
-இந்த திட்டத்திற்கு Term Deposit திட்டத்திற்கான வட்டி விகிதங்களும் பொருந்தும்
- Annuity தவணை முடிந்த அடுத்த மாதத்திலிருந்து ஆண்டுதோறும் உரிய தேதியில் வருமானம் கிடைக்கத் தொடங்கும்.
- TDS கழிக்கப்பட்ட தொகை, உங்கள் சேமிப்புக் கணக்கு அல்லது நடப்புக் கணக்கில் செலுத்தப்படும்.
-இது நல்ல வருவாயைப் பெறுவதற்கான சிறந்த திட்டமாகும்.
-சிறப்பு சூழ்நிலைகளில், மீதமுள்ள தொகையில் 75% வரை ஓவர் டிராஃப்ட் / கடன் பெறலாம்.
-Annuity திட்டம் சிறந்த வருமானத்தை வழங்குகிறது.
Also Read | Maruti Cars பம்பர் தள்ளுபடி, ஒவ்வொரு மாடலிலும் மாபெரும் சேமிப்பு
Annuity திட்டத்தில் தொடர்ச்சியான மற்றும் நிலையான வைப்புக்கு இடையிலான வேறுபாடு (Difference between Recurring and Fixed Deposit)
Annuity Recurring Deposit
வருடாந்திர வைப்புத் திட்டம் தொடர்ச்சியான வைப்புத் திட்டத்திற்கு (Annuity Recurring Deposit) நேர் எதிரானது Annuity Fixed Deposit. ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வது Annuity Recurring Deposit திட்டம்.
அதுவே, Annuity Fixed Deposit திட்டத்தில், குறிப்பிட்டத் தொகையை டெபாசிட் செய்து முதிர்ச்சி காலத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் வருமானமாகப் பெறல்லாம். FD இல், வைப்புத்தொகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு டெபாசிட் ஆக வைக்கப்பட்டு, அதற்கான வட்டியும் சேர்த்து. முதிர்வு காலத்தில் திருப்பித் தரப்படும்.
Also Read | இந்தியாவின் உள்விவகாரத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் எப்படி விசாரிக்கலாம்? இந்தியா காட்டம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR