புதுடெல்லி: முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பதவிக் காலத்தை முடித்துவிட்டு ஓவல் அலுவலகத்திலிருந்து வெளியேறிய கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, புத்தரைப் போல சம்மணம் போட்டு அமர்ந்திருக்கும் டொனால்ட் டிரம்பின் வெள்ளை பீங்கான் சிலையின் புகைப்படம் ஆன்லைனில் பிரபலமாக உள்ளது. ஒரு சீன தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சிலை, சீன மின் வணிகம் தளமான தாவோபாவில் (Taobao) பட்டியலிடப்பட்டது.
இந்த சிலை இரண்டு அளவுகளில் கிடைக்கிறது, 4.6 மீட்டர் அளவு கொண்ட பெரிய சிலை 3,999 யுவான் (ரூ. 44,707), 1.6 மீட்டர் சிறிய அளவு 999 யுவான் (ரூ .11,168) என்ற விலையில் கிடைக்கிறது. சிலையில், டிரம்ப் சம்மணம் போட்டு உட்கார்ந்து கைகளை மடியில் மடித்து வைத்துக் கொண்டிருப்பதைக் காணலாம், கட்டைவிரல் வெளிப்புறத்தை சுட்டிக்காட்டுகிறது, இது தியானம் மற்றும் சிந்தனையை குறிக்கும் புத்தர் போஸ் என்று கூறப்படுகிறது.
Also Read | மறக்கமுடியாத உதவி, மிக்க நன்றி: விளம்பரப் பலகை வைத்து பிரதமர் மோடியை பாராட்டிய Canada
ஈ-காமர்ஸ் தளத்தில், டிரம்பின் புத்தர் சிலையின் தயாரிப்பு மற்றும் விளக்கம் இவ்வாறு இருக்கிறது: "டிரம்ப் புத்தர், வேறு யாரையும் விட புத்த மதத்தைப் பற்றி நன்கு அறிவார்", அவரை உங்கள் அலுவலகத்தில் வைத்தால் "உங்கள் நிறுவனம் மீண்டும் பெரியதாக மாறும்".
குளோபல் டைம்ஸுடன் பேசிய விற்பனையாளர், டிரம்ப் புத்தர் சிலையின் யோசனை ட்ரம்பின் “அமெரிக்கர்களை மீண்டும் முன்னிலைப்படுத்து (Make American Great Again)” என்ற முழக்கத்தை நினைவூட்டுவதாகவும், முன்னாள் அமெரிக்க அதிபர் வேறு யாரையும் விட தனக்கு விஷயங்கள் நன்றாகத் தெரியும் என்று அடிக்கடி கூறியதாகவும் கூறினார். எனவே விற்பனையாளர் இந்த யோசனையை முன்னெடுத்துள்ளார்.
"பெரும்பாலான மக்கள் டிரம்ப் புத்தராக வடிக்கப்பட்டிருக்கும் சிலையை வேடிக்கைக்காக வாங்கியுள்ளனர்," என்று விற்பனையாளர் கூறினார், தயாரிப்பாளர்கள் 100 சிலைகளை மட்டுமே தயாரித்தார்கள், ஏற்கனவே டஜன் கணக்கானவற்றை விற்றுள்ளனர்.
இதற்கிடையில், ஷாங்காயில் சிலையை வாங்குபவர், பத்திரிகை ஒன்றிடம் அளித்த பேட்டியில், டிரம்பின் சிலைகளில் ஒன்றை வேடிக்கையாக வாங்கியதாகவும், மேசையில் அலங்காரப் பொருளாக வைத்திருப்பதாகவும் கூறுகிறார்.
Also Read | இந்தியாவின் உள்விவகாரத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் எப்படி விசாரிக்கலாம்? இந்தியா காட்டம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR