தனிநபர் கடன் வாங்க போறீங்களா... பல்வேறு வங்கிகளில் வட்டி & EMI விபரங்கள்!
தனிநபர் கடன்களை வழங்கும் வங்கிகளில், சில முக்கிய வங்கிகளில், எந்த விதத்தில் வழங்கப்படுகின்றன, அதற்கான பிற கட்டண விவரங்கள் என்ன, சுமார் ஒரு லட்சம் கடன் வாங்கினால் நாம் செலுத்த வேண்டிய என்பதை அறிந்து கொள்ளலாம்.
நாம் எல்லோரும் ஏதோ ஒரு காரணத்திற்காக நிதி நெருக்கடியை நிச்சயம் சந்தித்திருப்போம். கடன் வாங்க வேண்டிய சூழல் என்பது அனைவரும் வாழ்க்கையில் சந்திக்கும் ஒரு விஷயம் தான். கடன் நெருக்கடி சமயத்தில் மிக எளிதாக கடன் வாங்கும் வகையில் ஒன்று தான் தனி நபர் கடன். கடன் வாங்கும் முன் நாம் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். அதில் ஒன்று பல்வேறு வங்கிகள், எந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குகின்றன, கடன் வாங்குவதற்கான, பிற கட்டணங்கள் என்ன என்பதை அறிந்து கொண்டு கடன் வாங்குவது சிறந்தது.
தனிநபர் கடன்களை வழங்கும் வங்கிகளில், சில முக்கிய வங்கிகளில், எந்த விதத்தில் வழங்கப்படுகின்றன, அதற்கான பிற கட்டண விவரங்கள் என்ன, சுமார் ஒரு லட்சம் கடன் வாங்கினால் நாம் செலுத்த வேண்டிய என்பதை அறிந்து கொள்ளலாம். ஐந்து ஆண்டுகளுக்கான ஒரு லட்சம் ரூபாய் கடனுக்கு எவ்வளவு இஎம்ஐ செலுத்த வேண்டி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India)
இந்தியாவின் மிக முக்கிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India), தனி நபர் கடன்களை 11.15 சதவீதம் முதல் 14.30 சதவீதம் வரையிலான வட்டியில் கடன் வழங்குகிறது. இதற்கான மாதாந்திர அதாவது இ எம் ஐ ரூ.2182 முதல் ரூ.2342 என்ற அளவில் இருக்கிறது. இந்த வங்கி 2024 ஜனவரி 31ஆம் தேதி முதல் தனிநபர் கடனுக்கான எந்த ஒரு செயலாக்கு கட்டணம் அல்லது பிற கட்டணங்களை வசூலிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் வங்கி (Indian Bank)
இந்தியன் வங்கியும் நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்று. இதில் தனி நபர் கடனுக்கான வட்டி விகிதம் 9.20 சதவீதம் என்ற அளவில் இருந்து தொடங்குகிறது. சிபில் ஸ்கோர் அளவைப் பொறுத்து கடன் வட்டி விகிதத்தில் மாற்றங்கள் இருக்கலாம். சிபில் ஸ்கோர் சிறப்பாக இருந்தால் வட்டி விகிதம் குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பிப்ரவரி 12ல் ரிசர்வ் வங்கி குழுவை சந்திக்கும் நிர்மலா சீதாராமன்!
யூனியன் பேங்க் ஆப் இந்தியா (Union Bank of India)
யூனியன் ஆப் இந்தியாவில், தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதம் 9.3 சதவிகிதம் முதல் 13.4 சதவீதம் வரை என்ற அளவில் உள்ளது. இதற்கான இஎம்ஐ என்று பார்த்தால் ஒரு லட்சம் ரூ.2,090 முதல் ரூ.2296 வரை என்ற அளவில் செலுத்த வேண்டி இருக்கும்.
மகாராஷ்டிரா வங்கி
பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில், தற்போது தனிநபர் கடனுக்கு 10 சதவிகிதம் முதல் 12.80 சதவீதம் வட்டி வசூலிக்கிறது. இந்த வங்கி தற்போது கடன் தொகையில் ஒரு சதவீதம் + இந்த கடனுக்கான ஜிஎஸ்டி என்ற அளவில் செயலாக்கக் கட்டணத்தை வசூலிக்கிறது. இந்த வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் தனிநபர் கடனுக்கு, செலுத்த வேண்டிய EMI ரூ.2125 முதல் ரூ.2265 வரை இருக்கலாம்.
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் தனிநபர் கடனுக்கான செயலாக்கக் கட்டணமாக 0.50 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை + ஜிஎஸ்டி செலுத்த வேண்டியிருக்கும். இந்த வங்கியில் ரூ.1 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால், இஎம்ஐ ரூ.2132 முதல் ரூ.2265 வரை இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ