பிப்ரவரி 12ல் ரிசர்வ் வங்கி குழுவை சந்திக்கும் நிர்மலா சீதாராமன்!

Budget 2024: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

 

1 /5

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 12-ம் தேதி ஆர்பிஐ-யின் மத்திய குழுவிடம் உரையாற்ற உள்ளார்.  அங்கு இடைக்கால பட்ஜெட் குறித்து முன்னிலைப்படுத்த உள்ளார்.  

2 /5

இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆறாவது பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். 2024-25க்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.     

3 /5

பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பிறகு, இந்த அரசின் கடைசிக் கூட்டத்தொடர் பிப்ரவரி 9-ம் தேதி நடைபெறுகிறது.  இங்கு பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெறும். மத்திய நிதியமைச்சரின் உரைக்கு முன், ஆர்பிஐ வங்கி கடைசி இருமாத நிதிக் கொள்கை மதிப்பாய்வை பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியிடும்.    

4 /5

நாட்டின் முதல் பெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன், கடந்த 2019 முதல் பணியாற்றி வருகிறார். இதுவரை ஐந்து முழு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார்.    

5 /5

இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.