PM Awas Yojana: உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை மனிதர்களின் அடிப்படை தேவைகளாக உள்ளன. இவற்றில் ஏழை எளிய மக்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க துவங்கப்பட்ட திட்டம்தான் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா. இது மத்திய அரசின் லட்சிய திட்டமாகும். பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடு என்ற கனவை நனவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குவதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சொந்த வீடு இல்லாத குடும்பங்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் வீடுகள் வழங்கப்படுகின்றன. இதன்  கீழ், பயனாளிகளுக்கு அரசு நிதியுதவி வழங்குகிறது. இதன் மூலம் இந்த குடும்பங்கள் தங்களுக்கென பாதுகாப்பான மற்றும் நிரந்தரமான வீடுகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.


Pradhan Mantri Awas Jojana: இந்த முக்கிய நிபந்தனைகளை நிறைவேற்றுவது அவசியம்


இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகள் 21 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று திட்டத்துடன் தொடர்புடைய ஒருவர் தெரிவித்தார். இதில் உள்ள சில முக்கிய விஷயங்கள் இதோ:


-  பயனாளிக்கு ஏற்கனவே நிரந்தர வீடு இருக்கக்கூடாது. 
- அவர்களின் மாத வருமானம் ரூ.15 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 
- பயனாணிகளின் கிரெடிட் கார்ட் பில் 50 ஆயிரத்துக்கு மேல் இருக்கக்கூடாது. 
- விண்ணப்பதாரர் வேறு எந்த திட்டத்தின் கீழும் வீடு பெற்றிருக்கக் கூடாது. 


மேலும் படிக்க | Make Money Online: வெறும் 2 மணிநேரம் போதும் ஆன்லைனில் நல்ல பணம் சம்பாதிக்கலாம்.


இது குறித்த கணக்கெடுப்புக்குப் பிறகு திட்டத்திற்கான பயனாளி தேர்வு செய்யப்படுகிறார். 2018 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி தகுதியான நபர்களின் பட்டியலை அரசாங்கம் தயாரிக்கிறது. இந்த கணக்கெடுப்பில் பெயர் இல்லாதவர்கள் வரவிருக்கும் அடுத்த கணக்கெடுப்பின் போது, ​​கிராம பஞ்சாயத்து செயலாளர், ஊரக வீட்டு வசதி உதவியாளர் மற்றும் பஞ்சாயத்து ரோஜ்கர் சேவக் மூலம் தங்க்ளது பெயரை சேர்க்கலாம்.


PM Awas Scheme: மூன்று தவணைகளில் அரசு வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்கிறது


இத்திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் உள்ள பயனாளிகளுக்கு, அரசு, மூன்று தவணைகளில், 1.2 லட்சம் ரூபாய் வழங்குகிறது. அதே சமயம் நகர்ப்புறங்களில் ரூ.2.5 லட்சம் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்தத் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் வரவு வைக்கப்படுகின்றது. திட்டத்த்தின் வெளிப்படைத்தன்மையை பராமரிக்க, பயனாளிகள் தங்கள் பெயர்களை ஆன்லைனில் சரிபார்க்கும் வசதி அளிக்கப்படுள்ளது. பயனாளிகள் தங்கள் பெயரை செக் செய்ய pmayg.nic.in என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.


PM Awas: பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா இல்லையா என்பதை எப்படி செக் செய்வது?


- பெயர் உள்ளதா இல்லையா என்பதை செக் செய்ய, முதலில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (pmaymis.gov.in) செல்ல வேண்டும்.
- முகப்பு பக்கத்தில் அவர்கள் குடிமக்கள் மதிப்பீடு (Citizen Assessment) என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- அங்கு மூன்று விருப்பங்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
- இதற்குப் பிறகு, உங்கள் ஆதார் அட்டை எண்ணை உள்ளிட வேண்டும்.
- பின்னர் செக் என்பதைக் கிளிக் செய்யவும்.
- இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் தகுதி உள்ளதா என்பது அதன் பின் உங்களுக்கு தெரியவரும்.


மேலும் படிக்க | SIP Mutual Fund: ஆயிரத்தை கோடிகளாக்கும் பரஸ்பர நிதியம்... இந்த விஷயங்களில் கவனம் தேவை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ